மலாயா வங்கிக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேபாங்க் கோபுரம்
மேபாங்க் மினாரா
Map
மாற்றுப் பெயர்கள்மினாரா மேபாங்க்
மலாயா வங்கித் தலைமை அலுவலகம்
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவடைந்தது
வகைவணிக அலுவலகங்கள்
இடம்100 ஜலான் துன் பெராக்
புடு, கோலாலம்பூர், மலேசியா
கட்டுமான ஆரம்பம்1984
நிறைவுற்றது1987
உயரம்
கூரை243.54 m (799.0 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை50
தளப்பரப்பு167,300 m2 (1,801,000 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஹிசாசு கசுத்தூரி அசோசியேட்சு
தாய்செய் கட்டுமான நிறுவனம்.
மேற்கோள்கள்
[1][2][3][4][5]

மலாயா வங்கிக் கோபுரம் அல்லது மேபாங்க் கோபுரம் (Maybank Tower, மலாய்: 'மினாரா மேபாங்க்') மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள முதன்மையான வானளாவியும் அடையாளவிடமும் ஆகும். பழைய கோலாலம்பூரின் நகர மையத்தின் கிழக்கெல்லையில் புதுராயா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இக்கட்டிடம் மலாயா வங்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மேபாங்க் நாணயவியல் அருங்காட்சியகமும் இடம் பெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

அறமன்றக் குன்றில் குடியேற்றக் காலத்து அமர்வு நீதிமன்றங்கள் இருந்தவிடத்தில் 1984இல் மேபாங்க் கோபுரம் கட்டத் தொடங்கப்பட்டது; 1987இல் இக்கட்டிடம் நிறைவுற்றது. 1995இல் பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்படும்வரை, இதுவே கோலாலம்பூரிலும் மலேசியாவிலும் மிக உயரமானக் கட்டிடமாக இருந்தது. இதன் உயரம் பெட்ரோனாஸ் கோபுரங்களின் பாதியாக, 244 m (801 அடி) உள்ளது. நகரத்தின் வான்வரையில் குறிப்பிடத்தக்கதாக இந்தக் கோபுரம் விளங்குகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

மேலும் அறிய[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maybank Tower (Kuala Lumpur)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_வங்கிக்_கோபுரம்&oldid=2035242" இலிருந்து மீள்விக்கப்பட்டது