உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சிஸ் கோபுரம்

ஆள்கூறுகள்: 3°09′29″N 101°42′47″E / 3.1580°N 101.7130°E / 3.1580; 101.7130
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்சிஸ் கோபுரம்
Maxis Tower
Map
மாற்றுப் பெயர்கள்Ampang Tower
பொதுவான தகவல்கள்
வகைவணிக அலுவலகங்கள்
இடம்அம்பாங் சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°09′29″N 101°42′47″E / 3.1580°N 101.7130°E / 3.1580; 101.7130
கட்டுமான ஆரம்பம்1994
நிறைவுற்றது1996
உயரம்
கூரை212 m (696 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை49
தளப்பரப்பு74,874 m2 (805,940 sq ft)
உயர்த்திகள்9
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ரோச்-திங்கெலு
அமைப்புப் பொறியாளர்தோர்ன்டன் தோமசெட்டி
சேவைகள் பொறியாளர்எஸ்எம் பொறியாளர்கள்
மேற்கோள்கள்
</ref>[1]

மெக்சிஸ் கோபுரம் அல்லது அம்பாங் கோபுரம் (மலாய்; Menara Maxis; ஆங்கிலம்: Maxis Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் 212 மீ (696 அடி அடி) உயரத்தில் உள்ள 49-அடுக்கு உயர வானளாவிய கட்டிடமாகும்.[2]

இந்தக் கோபுரம் மெக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (Maxis Communications); மற்றும் தஞ்சோங் குழும நிறுவனங்கள் (Tanjong Plc Group of Companies) ஆகியவற்றின் தலைமையகமாகச் செயல்படுகிறது.[3]

பொது

[தொகு]

கோலாலம்பூர் மாநகர மையத் திட்டத்தின் 1-ஆம் கட்டத்தின் கீழ் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் (KLCC Properties) நிறுவனத்தின் மூலம் மெக்சிஸ் கோபுரம் உருவாக்கப்பட்டது.[4]

இந்தக் கட்டிடம் இம்பியான் கிலாசிக் (Impian Klasik Sdn Bhd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் தஞ்சோங் குழும நிறுவனங்கள் 67% பங்குகளையும் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் 33% பங்குகளையும் வைத்துள்ளன.

அமைவு

[தொகு]

மெக்சிஸ் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையத்தின் வடமேற்கு பகுதியில் பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

மெக்சிஸ் கோபுரம், அலுமினியம் மற்றும் கண்ணாடி உறை முகப்பைக் கொண்டுள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. {{Cite web |url=https://www.emporis.com/buildings/105769 |archive-url=https://web.archive.org/web/20160307033240/https://www.emporis.com/buildings/105769 |archive-date=7 March 2016 |title=Emporis building ID 105769
  2. "The Maxis Tower is arguably one of the most recognisable buildings in Malaysia. Paired next to the national icon, the Petronas Twin Towers". Maxis Tower. பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
  3. Bonma, Suwan (26 October 2022). "Menara Maxis (Maxis Tower) - Tallest Building to Achieve LEED v4.1 O+M GOLD Certification (Aug 2022)". IEN Consultants (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
  4. "Menara Maxis – Kl-Office". பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிஸ்_கோபுரம்&oldid=4149882" இலிருந்து மீள்விக்கப்பட்டது