மலேசிய தொழில்நுட்ப பூங்கா
மலேசிய தொழில்நுட்ப பூங்காவின் ஒரு பகுதி (2015) | |
வகை | மலேசிய அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1995[1] |
தலைமையகம் | Level 5, Enterprise 4, மலேசிய தொழில்நுட்ப பூங்கா, 57000 புக்கிட் ஜாலில் கோலாலம்பூர் மலேசியா |
முதன்மை நபர்கள் | தலைவர்: டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரகுமான் தலைமை நிர்வாக அதிகாரி: தசுலீரா அபு பக்கர் |
தாய் நிறுவனம் | மலேசிய நிதி அமைச்சர் |
மலேசிய தொழில்நுட்ப பூங்கா (மலாய்:Taman Teknologi Malaysia; ஆங்கிலம்:Technology Park Malaysia) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரமாகும். இதன் மொத்த நிலப்பரப்பு 750 ஏக்கர் (3.0 கிமீ2); இந்தப் பூங்கா குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் 13 அறிவியல் தொழில்நுட்பக் கட்டிடங்களைக் கொண்டுள்ளது.[2]
இந்தப் பூங்கா நிறுவப்பட்டதிலிருந்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிகளை மேம்படுத்துவதற்கான சேவைகள்; அவை தொடர்பான தொழில்நுட்பம்; மற்றும் ஆய்வு மேம்பாட்டுத் திறனை வழங்கி வருகிறது.[3]
பொது
[தொகு]தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கருத்துரை, திட்ட மேலாண்மை, மூலோபாய மேலாண்மை, சந்தை ஆய்வுப் பணிகள், வாய்ப்பு பகுப்பாய்வு, தொழில்முறை மேம்பாட்டு திட்டங்கள், தொழில்நுட்பத்தின் வணிகமயமாக்கலுக்கு ஆதரவளித்தல், தொழில்நுட்ப வணிகமயமாக்கலுக்கான உதவிகள் போன்ற சேவைகளும் இந்தப் பூங்காவில் வழங்கப்படுகின்றன.
அமைப்புகள்
[தொகு]- அஸ்ட்ரோ மலேசியா நிறுவனம் - (Astro All Asia Networks)[4]
- ஆசிய பசிபிக் தொழில்நுட்ப புத்தாக பல்கலைக்கழகம் - (Asia Pacific University of Technology & Innovation) [5]
- மிமோஸ் - (MIMOS) [6]
- ஐரிஸ் நிறுவனம் - (IRIS Corporation Berhad)
- எக்சோசிஸ் நிறுவனம் - (HexoSys SDN BHD)
- எச்சிஎல் மலேசியா நிறுவனம் - (HCL Axon Malaysia SDN BHD)
- சாப்ட்வேர் இன்டர்நேசனல் நிறுவனம் - (Software International Corporation SDN BHD)[7]
- ஏசிஇ பயிற்சி நிறுவனம் - (ACE Training Malaysia)
- சின்னர்ஜி லோக் நிறுவனம் - (Synergy Log In Systems Sdn Bhd)[8]
மேலும் காண்க
[தொகு]- சைபர்ஜெயா
- விரைவுத் தொடருந்து இணைப்பு
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (UTAR)
- கூலிம் உயர் தொழில்நுட்பத்துறை பூங்கா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Renuka, Mahadevan (2007). Sustainable Growth and Economic Development: A Case Study of Malaysia. Edward Elgar Publishing. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781847203618. பார்க்கப்பட்ட நாள் June 10, 2012.
- ↑ Theory and Practice of Triple Helix Model in Developing Countries. Taylor & Francis. 2011. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136876066. பார்க்கப்பட்ட நாள் June 10, 2012.
- ↑ Malaysia Information and Communication Technology (Retrieved on June 6, 2012)
- ↑ Astro Broadcast Centre (Retrieved on June 6, 2012)
- ↑ Asia Pacific University Maps & Directions (Retrieved on June 20, 2016)
- ↑ MIMOS location (Retrieved on June 6, 2012)
- ↑ http://www.sicmsb.com/SICMSB/#contact-us [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Synlog".