உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய இருதய மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய இருதய மையம்
National Heart Institute (Malaysia)
Institut Jantung Negara
வகைஅரசு சார்ந்த நிபுணத்துவ மையம்
நிறுவுகை1 ஆகத்து 1984; 42 ஆண்டுகள் முன்னர் (1984-08-01)
தலைமையகம்145, துன் ரசாக் சாலை, 50400 கோலாலம்பூர், மலேசியா
முதன்மை நபர்கள்நூர் இசாம் அப்துல்லா, (தலைவர்)
முகமது அசுகாரி யாக்கூப், (தலைமை நிர்வாக அதிகாரி)
தொழில்துறைசுகாதார அமைப்பு
தாய் நிறுவனம்மலேசிய நிதி அமைச்சு
இணையத்தளம்www.ijn.com.my

மலேசிய இருதய மையம் (மலாய்:Institut Jantung Negara; ஆங்கிலம்:National Heart Institute) ('IJN) என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் சாலையில் உள்ள இதய அறுவைச் சிகிச்சை மையமாகும். இது கோலாலம்பூர் மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு இந்த மையம் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்தது.[1]

இருதயம் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான தேசியப் பரிந்துரை மையமாக விளங்கும் இந்த நிபுணத்துவ மையம்; உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வரும் இருதய நோயாளிகளுக்கும்; நாளஞ்சார் அறுவைச் சிகிச்சைகள் செய்யும் நிபுணத்துவப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

இந்த மையம் நிறுவப்பட்டதில் இருந்து இதுவரையில், ஏறக்குறைய 5 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. அத்துடன் தென்கிழக்காசியப் பகுதியில் முன்னணி இருதய மையங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது.[2]

வரலாறு

[தொகு]

மலேசிய இருதய மையம், முதன்முதலில் 1984-ஆம் ஆண்டில் இருதயநோய் நிபுணர்கள்; மற்றும் பொது மருத்துவர்கள் சிலரால் நிறுவப்பட்டது. கோலாலம்பூர் மருத்துவமனையின் பழைய இரத்த வங்கி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. மேலும் தற்போதைய மலேசிய இருதய மையத்தின் சின்னம் அதே 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

பின்னர், மலேசிய இருதய மையம், தற்போதைய இடத்திற்கு 1992-இல் மாற்றப்பட்டது. இந்த மையம், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதயக் குழலிய நோய்கள் தொடர்பான இருதய அறுவை சிகிச்சை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது.[3]

2009-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த மலேசிய இருதய மையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 432-ஆகவும் உயர்ந்தது. அந்த வகையில், இந்த வட்டாரத்தின் மிகப்பெரிய இருதய மையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "IJN was established on 1st August 1992 as a heart specialist institution committed to delivering advanced standards in cardiovascular and thoracic medicine for adult and pediatric heart patients". Retrieved 28 February 2024.
  2. ↑ "Since the foundation of the institute, IJN has treated over 5 million patients and gained recognition as one of the leading Cardiovascular and Thoracic Centre in the region". National Heart Institute. Retrieved 28 February 2024.
  3. ↑ "Cardiology Hospital Feature – Institut Jantung Negara (National Heart Institute)". Malaysia Healthcare Travel Council (MHTC). 7 November 2018. Retrieved 28 February 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_இருதய_மையம்&oldid=4272675" இலிருந்து மீள்விக்கப்பட்டது