இருதயநோய்
இருதயநோய் என்பது, இருதயத்தின் பலவித நோய்களைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும். அந்நோய்களுள், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோயே (Coronary Artery Disease - சிஏடி CAD) மிகவும் பொதுவானதாகும். இருதயத்தில் உள்ள இரத்த நாடிகள் அடைபடுவதாலோ சுருங்குவதாலோ சிஏடி (CAD) ஏற்படுகின்றது. அத்தறுவாயில் இருதய தசைகளுக்கு ஆக்சிசன், செறிவான இரத்த ஓட்டம் கிடைப்பது தடைபடுகிறது. இதன் விளைவாக, மார்பு வலி அல்லது மாரடைப்பு ஏற்படக் கூடும்.[1]
ஆபத்துக் காரணிகள்
[தொகு]வயது
[தொகு]வயது அதிகரிக்க அதிகரிக்க இருதயநோய் ஏற்படக் கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது.
பாலினம்
[தொகு]- ஆண் - 55 வயதுக்கும் மேல்
- பெண் - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு
குடிவழி
[தொகு]நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் - பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது குழந்தைகள் - 55 வயதுக்கு முன்னரோ, பெண் உறவினர்களைப் பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சி நிற்பதற்கு முன்னரோ இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இருதயநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கூடுகிறது.
இனம்
[தொகு]தொல்குடிகள், ஆப்பிரிக்க, ஆசிய குடிவழியினருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் உண்டாகக் கூடிய வாய்ப்பு கூடுதல் என்பதால், அவர்களுக்கு மற்ற மக்களை விட இருதய நோய் ஏற்படும் தீவாய்ப்பு அதிகம்.
தவிர்த்து மாற்றியமைக்கக் கூடிய ஆபத்துக் காரணிகள்
[தொகு]- உயர் இரத்த அழுத்தம்
- அதிக இரத்தக் கொழுப்பு
- புகைப்பிடித்தல்
- நீரிழிவு
- உடற்பருமன்
- உடற்பயிற்சி இன்மை
- அதிக அளவில் மது அருந்துதல்
- மன அழுத்தம்
References
[தொகு]- ↑ "Heart and stroke foundation". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-10-31.