மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்

ஆள்கூறுகள்: 3°6′58.2739″N 101°39′2.6669″E / 3.116187194°N 101.650740806°E / 3.116187194; 101.650740806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்
Universiti Malaya Specialist Centre
Pusat Pakar Universiti Malaya
மலேசிய அரசு
மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்
அமைவிடம் யுனிவர்சிட்டி சாலை, லெம்பா பந்தாய், கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள் 3°6′58.2739″N 101°39′2.6669″E / 3.116187194°N 101.650740806°E / 3.116187194; 101.650740806
மருத்துவப்பணி நிபுணத்துவ மருத்துவமனை
நிதி மூலதனம் தனியார்
வகை முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவத் துறை,
மலாயா பல்கலைக்கழகம்
(Faculty of Medicine, University of Malaya)[1]
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 95
நிறுவல் 1998
வலைத்தளம் [umsc.my மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்
Universiti Malaya Specialist Centre
Pusat Pakar Universiti Malaya]
பட்டியல்கள்

மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம் (மலாய்:Pusat Pakar Universiti Malaya; ஆங்கிலம்:Universiti Malaya Specialist Centre) (UMSC) என்பது மலேசியாகோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் ஆகும். மலேசியாவில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகளில் மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையமும் ஒன்றாக அறியப்படுகிறது.[2]

பொதுத் துறையிலிருந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள், தனியார் மருத்துவத் துறைக்குப் புலம் பெயர்வதைத் தடுப்பதற்கான முயற்சியாக, 1998-ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் அதன் மருத்துவத் துறையினால் இந்த நிபுணத்துவ மையம் நிறுவப்பட்டது.

பொது[தொகு]

நாட்டின் முதன்மையான நிபுணத்துவ மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த மருத்துவ மையத்தில் 270-க்கும் மேற்பட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள்; பேராசிரியர்கள் உள்ளனர். சிக்கலான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளை நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக தீர்வு காண்கின்றனர். இந்த நிபுணத்துவ மருத்துவமனையில் 40 சிகிச்சை அறைகள்; 99 படுக்கைகள்; மற்றும் நான்கு பல் மருத்துவ அறைகளும் உள்ளன.

1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மையம், தொடக்கத்தில் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (Universiti Malaya Medical Centre) அமைந்திருந்தது. 2007-ஆம் ஆண்டில் தன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் தான் மலேசியாவின் மிகப்பெரிய கற்பித்தல் மருத்துவமனை ஆகும்; மற்றும் மலேசியாவின் பழமையான மருத்துவப் பள்ளியாகவும் கருதப்படுகிறது.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About UMSC". www.umsc.my. UM Specialist Centre. பார்க்கப்பட்ட நாள் 14 March 2016.
  2. "UM Specialist Centre Continues To Educate The Public". News Hub Asia. 16 September 2020. https://www.newshubasia.com/post/um-specialist-centre-continues-to-educate-the-public/. பார்த்த நாள்: 17 June 2022. 
  3. "UMSpecialist Centre was named Quaternary Hospital of the Year - Malaysia at the Healthcare Asia Awards". Healthcare Asia Magazine. 3 April 2023. https://healthcareasiamagazine.com/co-written-partner/event-news/um-specialist-centre-was-named-quaternary-hospital-year-malaysia-healthcare-asia-awards. பார்த்த நாள்: 17 June 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]