உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
Universiti Tunku Abdul Rahman
拉曼大学
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2002
தலைவர்துன் முனை. லிங் லியோங் சிக்
கல்வி பணியாளர்
1,115
மாணவர்கள்>21,000 (2023)[1]
பட்ட மாணவர்கள்16,975 (2022)[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்707 (2022)[2]
அமைவிடம்,
நிறங்கள்                   
நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை
சேர்ப்புபொ.ப.கூ[3]
இணையதளம்www.utar.edu.my
UTAR சுங்கை லோங் வளாகம்

துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (Universiti Tunku Abdul Rahman, (UTAR) என்பது மலேசியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகம் யூத்தார் (UTAR) கல்வி நிறுவனம் என்னும் இலாப-நோக்கற்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.[4] மலேசியாவின் நான்கு இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது.

அவை: பெட்டாலிங் ஜெயா, கோலாலம்பூர், சுங்கை லோங், மற்றும் கம்பார் ஆகியவை ஆகும்.

பொது

[தொகு]

2002-ஆம் ஆண்டில் தொடக்கப்பட்ட இந்தப் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டில் 411 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்த சில ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. 2022ஆம் ஆண்டு, இங்கு 16,975 மாணவர்கள் கல்வி பயில்வதாகப் பல்கலைக்கழக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஆசியாவின் முதல் 300 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இந்தப் பல்கலைகழகம் தரப்படுத்தப்பட்டுள்ளது.[5][6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of UTAR". பார்க்கப்பட்ட நாள் 4 February 2023.
  2. 2.0 2.1 "Universiti Tunku Abdul Rahman (UTAR) Top Universities". Quacquarelli Symonds(QS). பார்க்கப்பட்ட நாள் 4 February 2023.
  3. "Association of Commonwealth Universities(ACU) Members". Association of Commonwealth Universities (ACU). பார்க்கப்பட்ட நாள் 12 மே 2013.
  4. "Institution Profile". Ministry of Higher Education, Malaysia. Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2012.
  5. "2012 QS University Rankings: Asia's Top 300". Quacquarelli Symonds(QS). பார்க்கப்பட்ட நாள் 10 September 2012.
  6. "2013 QS University Rankings: Asia's Top 300". Quacquarelli Symonds(QS). பார்க்கப்பட்ட நாள் 14 Jun 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]