கோலாம்பூர் மருத்துவமனை

ஆள்கூறுகள்: 3°10′17.2″N 101°42′06.5″E / 3.171444°N 101.701806°E / 3.171444; 101.701806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாம்பூர் மருத்துவமனை
Kuala Lumpur Hospital
Hospital Besar Kuala Lumpur
Flag of Malaysia மலேசிய அரசு
கோலாம்பூர் மருத்துவமனை
அமைவிடம் பகாங் சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள் 3°10′17.2″N 101°42′06.5″E / 3.171444°N 101.701806°E / 3.171444; 101.701806
மருத்துவப்பணி பொது மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு
வகை முழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவக் கல்லூரி
இணைப்புப் பல்கலைக்கழகம் பெர்தானா மருத்துவப் பல்கலைக்கழக பட்டதாரிகள் பள்ளி (PUGSOM),
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 2,722
நிறுவல் 1870[1]
வலைத்தளம் [www.hkl.gov.my
கோலாம்பூர் மருத்துவமனை
Kuala Lumpur Hospital
Hospital Besar Kuala Lumpur]
பட்டியல்கள்
வேறு இணைப்புகள் போக்குவரத்து:  PY18  கோலாலம்பூர் மருத்துவமனை எம்ஆர்டி நிலையம்
(Hospital Kuala Lumpur MRT station)
 AG3   SP3   MR11   PY17 
தித்திவாங்சா நிலையம்
(Titiwangsa station)
 MR10  சௌக்கிட் இலகு தொடருந்து நிலையம் (Chow Kit Monorail station)

கோலாம்பூர் மருத்துவமனை (மலாய்:Hospital Besar Kuala Lumpur; ஆங்கிலம்:Kuala Lumpur Hospital) (HKL) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய பொது மருத்துவமனை ஆகும். மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த மருத்துவமனை கோலாலம்பூர், பகாங் சாலையில் அமைந்துள்ளது. 1870-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இலாப நோக்கற்ற நிறுவனமான கோலாம்பூர் மருத்துவமனை; மலேசிய பொது சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவமனையாக செயல்படுகிறது. அத்துடன் மருத்துவப் படிப்பிற்கான கற்பித்தல் மருத்துவமனையாகவும்; மற்றும் பிற மருத்துவமனைகளின் தலைமைப் பரிந்துரை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.

இது 150 ஏக்கர் பிரதான நிலத்தில், 84 மருத்துவமனைக் கூடங்கள் (வார்டுகள்); மற்றும் 2,300 படுக்கைகள் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; இது பன்னாட்டு அளவில் தரமான மலிவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.[2]

பொது[தொகு]

புள்ளி விவரங்கள்[தொகு]

கோலாலம்பூர் மருத்துவமனை 54 வெவ்வேறு மருத்துவத் துறைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • 29 மருத்துவத் துறைகள்
  • 5 மருத்துவ ஆதரவு சேவைகள்
  • 11,000 பணியாளர்கள்
  • 2,300 மருத்துவ வல்லுநர்கள்
  • 300 மருத்துவர் நிபுணர்கள்
  • 1,300 மருத்துவர்கள்,
  • 72 தலைமைச்செவிலியர்கள்,
  • 253 மருத்துவக்கூட மேலாளர்கள்
  • 3,500 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள்
  • 258 சமூகச் செவிலியர்கள்[3]

காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "What a 'great dame' of a hospital". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  2. "Off the Cuff - HKL ... our finest institution". The Sun (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  3. "INTRODUCTION TO HKL". Ministry of Health, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாம்பூர்_மருத்துவமனை&oldid=3899016" இலிருந்து மீள்விக்கப்பட்டது