பிறவி இதயக் குறைபாடு
Congenital heart defect | |
---|---|
ஒத்தசொற்கள் | பிறவி இதயக் குறைபாடு |
The normal structure of the heart (left) in comparison to two common locations for a ventricular septal defect (right), the most common form of congenital heart defect.[1] | |
சிறப்பு | இதயவியல் |
அறிகுறிகள் | அதிவேக சுவாசம், தோல் நீலம்பாய்தல், மிகக்குறைவான எடை, சோர்வாகக் காணப்படுதல்[2] |
சிக்கல்கள் | Heart failure[2] |
வகைகள் | Cyanotic heart defects, non-cyanotic heart defects[3] |
காரணங்கள் | தெரியவில்லை[4] |
சூழிடர் காரணிகள் | கருத்தரிப்பு காலத்தில் ரூபெல்லா தடுப்பூசி போடுதல், எத்தனால் அல்லது புகையிலை, பெற்றோர் நெருங்கிய உறவுடையவராய் இருத்தல், குறைந்த ஊட்டச்சத்து,தாயின் உடற் பருமன் Diagnosis= |
சிகிச்சை | இல்லை,சிறுநீர் நீக்க வடிகுழாய் நடைமுறைகள், இதய அறுவை சிகிச்சை, மாற்று இதயம் பொருத்துதல்[3][5] |
முன்கணிப்பு | நல்ல நிலை (with treatment)[6] |
நிகழும் வீதம் | 48.9 million (2015)[7] |
இறப்புகள் | 303,300 (2015)[8] |
பிறவி இதய குறைபாடு (Congenital heart defect), பிறவி இதய ஒழுங்கின்மை அல்லது பிறவி இதய நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது இதயத்தின் கட்டமைப்பில் உள்ள குறைபாடு அல்லது பிறக்கும்போதே இருக்கும் இதய நாளங்களின் குறைபாடாகும்.[6] இதன் அறிகுறிகளும் அடையாளங்களும் குறிப்பிட்ட வகைக் குறைபாட்டைப் பொறுத்தது. இக்குறைபாடுகள் சாதாரன நிலையிலிருந்து உயிராபத்தான நிலை வரையில் வேறுபட்ட அறிகுறிகளுடன் காணப்படுகின்றன. விரைவான சுவாசம், நீலம் பாய்ந்த தோல், எடை குறைதல் மற்றும் சோர்வாக இருப்பது ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும். பிறாவி இதயக் குறைபாடானது மார்பு வலியை ஏற்படுத்தாது.[2] பெரும்பாலான பிறவி இதய குறைபாடுகள் மற்ற நோய்களுடன் தொடர்புடையவை அல்ல.[3] இதயச் செயலிழப்பு என்பதே பிறவி இதயக் குறைபாட்டின் சிக்கலாகும்.
பிறவி இதயக் குறைபாட்டிற்கான காரணம் பெரும்பாலும் அறியப்படவில்லை.[4] கர்ப்ப காலத்தில் ரூபெல்லா போன்ற சில மருந்துகள் அல்லது எத்தனால் அல்லது புகையிலை போன்ற மருந்துகளின் பயன்பாடு, பெற்றோர் நெருங்கிய உறவுடையவராய் இருத்தல், மோசமான ஊட்டச்சத்து நிலை அல்லது தாயின் உடல் பருமன் போன்ற ஆபத்து காரணிகள் இதில் அடங்கும். பிறவி இதயக் குறைபாடுள்ள பெற்றோரைக் கொண்டிருப்பதும் ஆபத்து காரணியாகும். டௌவுன் நோய்க்கூட்டக்குறி, தேர்னர் நோய்க்குறி மற்றும் மார்வன் நோய்த்தொகை உள்ளிட்ட பல மரபணு நிலைமைகள் இதய குறைபாடுகளுடன் தொடர்புடையவை. பிறவி இதயக் குறைபாடுகள் இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: நீலவாதை எனப்படும் நீலம்பாய்தல் குறைபாடுகள், நீலம்பாய்தல் அல்லாத இதயக் குறைபாடுகள் ஆகியவை குழந்தைக்கு நீல நிறமாக மாறக்கூடிய ஆற்றல் உள்ளதா என்பதைப் பொறுத்து. குறைபாடுகள் இதயத்தின் உட்புற சுவர்கள், இதய அடைப்பிதழ் அல்லது இதயத்திற்குச் சென்றுவரும் முதன்மை பெரிய இரத்த நாளங்கள் ஆகியவ்ர்ற்றை உள்லடக்கியிருக்கலாம்.[6]
ரூபெல்லா தடுப்பூசி போடுதல், அயோடின் உப்பு சேர்ப்பது மற்றும் சில உணவுப் பொருட்களில் ஃபோலிக் அமிலம் எனப்படும் இலைக்காடி சேர்ப்பதன் மூலம் பிறவி இதயக் குறைபாடுகள் ஓரளவு தடுக்கப்படுகின்றன. சில குறைபாடுகளுக்கு சிகிச்சை தேவையில்லை.[6] மற்றவர்களுக்கு சிறுநீர் நீக்க வடிகுழாய் அடிப்படையிலான நடைமுறைகள் அல்லது இதய அறுவை சிகிச்சை மூலம் திறம்பட சிகிச்சையளிக்கப்படலாம். எப்போதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்,[5] அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். பொருத்தமான சிகிச்சை மேற்கொண்டால் இதன் சிக்கலான பிரச்சனைகளுக்குக் கூட, பொதுவாக நல்ல விதமான தீர்வுகள் அமையலாம்.
பிறவி இதய குறைபாடுகள் மிகவும் பொதுவான பிறப்பு குறைபாடு ஆகும் .[9] 2015 ஆம் ஆண்டில், உலகளவில் 48.9 மில்லியன் மக்களில் பிறவி இதயக் குறைபாடுகளுடன் இருந்தனர்.[7] அவை எவ்வாறு கண்டறியப்படுகின்றன என்பதைப் பொறுத்து 1,000 நேரடி பிறப்புகளுக்கு 4 முதல் 75 வரை பாதிக்கப்படுகின்றனர். 1,000 க்கு 6 முதல் 19 வரையிலான நபர்களுக்கு அவை மிதமானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பிறப்பு குறைபாடு தொடர்பான இறப்புகளுக்கு பிறவி இதய குறைபாடுகள் முக்கிய காரணம் ஆகும். இது 1990 ல் 366,000 இறப்புகளை விளைவித்தது.2015 இல், 303,300 இறப்புகளாகக் குறைந்தது.[8][10]
அறிகுறிகள்
[தொகு]அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் இதய குறைபாட்டின் வகை மற்றும் தீவிரத்துடன் தொடர்புடையவை. அறிகுறிகள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அடிக்கடி காணப்படுகின்றன, ஆனால் சில பிறவி இதயக் குறைபாடுகள் வாழ்நாள் முழுவதும் கண்டறியப்படாமல் போகலாம்.[11] சில குழந்தைகளுக்கு அறிகுறிகள் இருப்பது இல்லை, மற்றவர்களுக்கு மூச்சுத் திணறல், நீலம் பாய்தல், மயக்கம் ஆகியவை இருக்கும்.,[12] இதய முணுமுணுப்பு, கைகால்களின் கீழ் தசைகளின் வளர்ச்சி, மோசமான உணவு அல்லது குறை வளர்ச்சி அல்லது சுவாச நோய்த்தொற்று ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். பிறவி இதய குறைபாடுகள் அசாதாரண இதய அமைப்பை ஏற்படுத்துகின்றன, இதன் விளைவாக இதய முணுமுணுப்பு எனப்படும் சில ஒலிகள் உருவாகின்றன. இவை சில நேரங்களில் ஒலிச்சோதனை மூலம் கண்டறியப்படலாம். இருப்பினும், எல்லா இதய முணுமுணுப்புகளும் பிறவி இதய குறைபாடுகளால் ஏற்படுவதில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The incidence of congenital heart disease". Journal of the American College of Cardiology 39 (12): 1890–900. June 2002. doi:10.1016/S0735-1097(02)01886-7. பப்மெட்:12084585.
- ↑ 2.0 2.1 2.2 "What Are the Signs and Symptoms of Congenital Heart Defects?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 27 July 2015. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
- ↑ 3.0 3.1 3.2 Global Atlas on Cardiovascular Disease Prevention and Control (PDF). Archived from the original (PDF) on 2014-08-17.
- ↑ 4.0 4.1 "What Causes Congenital Heart Defects?". National, Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
- ↑ 5.0 5.1 "How Are Congenital Heart Defects Treated?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 27 July 2015. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "What Are Congenital Heart Defects?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 13 August 2015. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
- ↑ 7.0 7.1 Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015. October 2016.
- ↑ 8.0 8.1 Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015. October 2016.
- ↑ Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 301 acute and chronic diseases and injuries in 188 countries, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013. August 2015.
- ↑ Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013. January 2015.
- ↑ "Heart Defects: Birth Defects". Merck. Archived from the original on 4 August 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2010.
- ↑ "National Heart, Lung, and Blood Institute". Archived from the original on 8 August 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2010.