இதய மாற்று அறுவை சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதய மாற்று அறுவை சிகிச்சை
ஓர்த்தோடோபிக் சிகிச்சை முறையில் கொடை இதயம் வைக்கப்படுவதைக் காட்டும் வரைபடம். நோயாளியின் இடது சோணையறையும் பெருந்தமனிகளும் பெருஞ்சிரைகளும் அகற்றப்படவில்லை என்பதை நோக்குக.
சிறப்புஇதயவியல்
ICD-9-CM37.51
MeSHD016027
மெட்லைன்பிளஸ்003003

இதய மாற்றீட்டு சத்திரச் சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை (heart transplant, cardiac transplant) இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது தீவிர குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ளவருக்கு இன்னொரு மனிதனில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான இதயத்தை மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சையாகும். 2008ஆம் ஆண்டு நிலவரப்படி பெரும்பாலும் அண்மையில் இறந்த உடல் உறுப்புக் கொடையாளரின் வேலை செய்கின்ற இதயம் எடுக்கப்பட்டு நோயாளிக்குப் பொருத்தப்படுகின்றது. நோயாளியின் இதயம் அகற்றப்படலாம் அல்லது தனது இடத்திலேயே கொடையாளி இதயத்திற்கு ஆதரவாக செயல்படுமாறு விட்டு வைக்கப்படலாம். மாற்று இதய சிகிச்சை மேற்கொண்டவர்களின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகள் வரை கூடுவதாக மதிப்பிடப்படுகின்றது.[1] இதய மாற்று அறுவை சிகிச்சை இதய நோய்க்கான மருத்துவத் தீர்வாக கருதப்படுவதில்லை; நோயாளியின் வாழ்நிலை தரத்தை உயர்த்தும் உயிர்காப்பு சிகிச்சையாக கருதப்படுகின்றது.[2]

நீண்ட காலம் இதய நோய் உள்ளவர்களுக்கும், இதயத் தசை நோய்கள் காரணமாக இதயம் செயலிழக்கும் நிலையில் உள்ளவர்களுக்கும் இது தேவைப்படுகிறது. பொதுவாக மூளை செயலிழந்த ஒருவரிடமிருந்து இதயம் பெறப்படுகிறது. இவ்வாறான சத்திரசிகிச்சையில் இதயம்-நுரையீரல் மாற்றுவழி இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. நோயாளியின் இதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு இடது வலது சோனை அறைகளிலன் சுவரின் ஒரு பகுதியை விட்டு ஏனைய இதயப்பகுதி அகற்றப்படுகிறது. வழங்கியில் இருந்து பெறப்பட்ட இதயம் நோயாளியின் விடப்பட்ட இதயத்தின் பகுதிகளுடன் பொருந்துமாறு இணைக்கப்படுகின்ற்து. முடியுரு நாடிகளுடனும் நாளங்கள் போன்ற பிரதான குருதிக் குழாய்களுடனும் புதிய இதயம் இணைக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Till Lehmann (director).The Heart-Makers: The Future of Transplant Medicine[documentary film].Germany:LOOKS film and television.
  2. Burch, M., & Aurora, P. (2004). Current status of paediatric heart, lung, and heart-lung transplantation. Archives of disease in childhood, 89(4), 386–389.