இரத்த வங்கி
இரத்த வங்கி என்பது மனிதர்களின் எதிர்பாராத விபத்துக்கள், நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய நேரங்களில் தேவைப்படும் அதிகப்படியான இரத்தத்தை ஈடு செய்வதற்காக இரத்தத்தை சேமிக்கும் இடமாகும். 18 வயது நிரம்பிய 50 கிலோ எடையுள்ள திடகாத்திரமான ஆண்கள் மற்றும் பெண்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் குருதி இரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.
இரத்த வங்கியின் செயல்பாடுகள்
[தொகு]ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4½ (நான்கரை) முதல் 5½ (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது.
இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
- தூய இரத்தம் (Whole blood)--35 நாட்கள்
- இரத்தச் சிகப்பணு (Packed Red செல்ஸ்)--42 நாட்கள்
- இரத்தத் தட்டுக்கள் (Platelets)--5 நாட்கள்
- பிளாஸ்மா (Plasma)--1 வருடம்
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றது.
இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்கு பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.