பெட்ரோனாஸ் கோபுரம் 3
பெட்ரோனாஸ் கோபுரம் 3 Petronas Tower 3 Menara Petronas 3 | |
---|---|
பெட்ரோனாஸ் கோபுரம் (2014) | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முடிக்கப்பட்டது |
வகை | வணிக அலுவலகங்கள் |
இடம் | கோலாலம்பூர் மாநகர மையம் கோலாலம்பூர், மலேசியா |
ஆள்கூற்று | 3°09′24″N 101°42′40″E / 3.15667°N 101.71111°E |
கட்டுமான ஆரம்பம் | 2006 |
நிறைவுற்றது | 2012 |
செலவு | ரிங்கிட் 665 மில்லியன் |
உயரம் | |
கூரை | 267 m (876 அடி) |
மேல் தளம் | 246 m (807 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 60 |
தளப்பரப்பு | 900,000-சதுர-அடி (84,000 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பெல்லி கிளார்க் கட்டிடக் கலைஞர் Pelli Clarke Pelli Architects |
மேம்பாட்டாளர் | கேஎல்சிசி நிறுவனம் KLCC Property Holdings |
முதன்மை ஒப்பந்தகாரர் | டேவூ கட்டுமான நிறுவனம் Daewoo Engineering Construction |
பெட்ரோனாஸ் கோபுரம் 3 (மலாய்; Menara Petronas 3; ஆங்கிலம்: Petronas Tower 3) (Carigali Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (Kuala Lumpur City Centre) (KLCC), 267 மீ (876 அடி) உயரத்தில் உள்ள 60-அடுக்கு வானளாவிய கட்டிடமாகும்.[1][2]
இந்தக் கோபுரம் மலேசியாவின் எட்டாவது உயரமான கட்டிடமாகும். மேலும் இந்தக் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்களின் வளாகத்தில் (Petronas Towers Complex) ஒரு பகுதியாகும்.
இந்தக் கட்டிடத்தின் கீழே உள்ள 6- மாடிகள் வரைக்கும் சூரியா கேஎல்சிசி (Suria KLCC) வணிக வளாகத்திற்கு உட்பட்டவை; அதற்கும் மேலே உள்ள மற்ற மாடித் தளங்கள் அலுவலக இடங்களைக் கொண்டவையாகும்.
பொது
[தொகு]இந்தக் கட்டிடத்தில் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பெட்ரோனாஸ் சாரிகாலி (Petronas Carigali) நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது; மற்றும் மைக்ரோசாப்ட் மலேசியா (Microsoft Malaysia) போன்ற பிற பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனங்களும் உள்ளன.
பெட்ரோனாஸ் கோபுரம் 3 கோபுரத்தின் கட்டுமானத் திட்டத்தில் தற்போது இரண்டாம் கட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டத் திட்டம்
[தொகு]இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில் லாட் சி (Lot C) எனும் வணிக வளாகம்; பிஞ்சாய் ஆன் தி பார்க் (Binjai On The Park) எனும் சொகுசு மாளிகைக் கட்டுமானத் துணைத் திட்டமும் அடங்கும்.
இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான செலவு ரிங்கிட் 1 பில்லியன் (ரிங்கிட் 1,000 மில்லியன்) என மதிப்பிடப்பட்டு உள்ளது.[3]
கட்டுமானம்
[தொகு]முதலாம் கட்டக் கட்டுமானம் 2006-இன் இறுதியில் தொடங்கப்பட்டு 2012-இல் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்டக் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
பெட்ரோனாஸ்
[தொகு]பெட்ரோலியம் நேசனல் பெர்காட் (Petroliam Nasional Berhad) என்பதின் சுருக்கமே பெட்ரோனாஸ் ஆகும். இது ஆகத்து 17, 1974-இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் கனிவள நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் முற்றிலும் மலேசிய அரசாங்கத்திற்கு உரிமையானது. மலேசிய நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பராமரிப்பதையும் பெட்ரோனாஸ் நிறுவனம்நோக்கமாக கொண்டுள்ளது.
சொத்து மதிப்பு
[தொகு]பார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், பெட்ரோனாஸ் நிறுவனம் 2022-ஆம் ஆண்டில் 216-ஆவதாகவும், 2021-ஆம் ஆண்டில் 277-ஆவதாகவும் இடம்பெற்றுள்ளது.[4][5]
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ், அமெரிக்க டாலர் US$152.50 பில்லியன் (ரிங்கிட் RM679.70 பில்லியன்) மொத்த சொத்துக்களைக் கொண்டுள்ளது; மற்றும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
காட்சியகம்
[தொகு]பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு இடது புறத்தில்: பெட்ரோனாஸ் கோபுரம் 3; அதன் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
[தொகு]- பெட்ரோனாஸ் கோபுரங்கள்
- கோலாலம்பூர் கோபுரம்
- மே பேங்க் கோபுரம்
- மெர்டேக்கா 118
- துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்
- மெக்சிஸ் கோபுரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Menara Telekom is a majestic 55 storey state of the art modern architectural building located along the Federal Highway and Jalan Pantai Baharu". Kl-office.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.
- ↑ Alexander Wong (10 May 2023). "Menara TM no longer TM’s headquarters, TM Campus is their new home". Soya Cincau. https://soyacincau.com/2023/05/10/tm-launch-tm-campus-new-hq-cyberjaya/. பார்த்த நாள்: 18 May 2023.
- ↑ "KLCCP gets strong interest for Lot C project". The Star. 14 July 2010. http://biz.thestar.com.my/news/story.asp?file=/2010/7/14/business/6658758&sec=business.
- ↑ "Petronas' 2022 Fortune Global 500 rises to 216 from 277 in 2021". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.
- ↑ "PETRONAS ranking rises to 216 in Fortune Global 500 list". The Star (in ஆங்கிலம்). 4 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Petronas Tower 3 தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- KLCC official website