மலேசிய அருங்காட்சியகம்
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 1963 |
---|---|
அமைவிடம் | டாமன்சாரா சாலை, கோலாலம்பூர், மலேசியா |
ஆள்கூற்று | 3°8′15.77″N 101°41′13.99″E / 3.1377139°N 101.6872194°E |
வகை | தேசிய அருங்காட்சியகம்
|
பொது போக்குவரத்து அணுகல் | கோலாலம்பூர் சென்ட்ரல் (கேடிஎம் கொமுட்டர், கிளானா ஜெயா; மொனோரெயில்) (சுங்கை பூலோ-காஜாங் வழித்தடம் (SBK MRT)) |
வலைத்தளம் | www |
மலேசிய அருங்காட்சியகம் அல்லது மலேசிய தேசிய அருங்காட்சியகம் ஆங்கிலம்: National Museum of Malaysia; மலாய்: Muzium Negara Malaysia; ஜாவி: موزيوم نڬارا) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா சாலையில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.
இது பெர்தானா தாவரவியல் பூங்காவின் அருகில் உள்ளது. இங்கு மலேசிய வரலாறு, பண்பாடு குறித்து அறியலாம். மினாங்கபாவு கட்டிடவியலின் ரூமா கடாங் பாணியில் கட்டப்பட்டுள்ள அரண்மனை போன்ற கட்டிடம் ஆகும்.[1]
பொது
[தொகு]இதன் முகப்பு மலாய் மற்றும் தற்காலக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த தேசிய அருங்காட்சியகம் ஆகத்து 31, 1963-இல் திறக்கப்பட்டது. தேசிய அருங்காட்சியகம் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது; 109.7 மீட்டர்கள் நீளமும் 15.1 மீட்டர்கள் அகலமும் நடுப்பகுதியில் 37.6 மீட்டர்கள் உயரமும் கொண்டுள்ளது.
பண்பாட்டுக் கூறுகள்
[தொகு]அருங்காட்சியகத்தில் நான்கு முதன்மை காட்சியகங்கள் இன ஒப்பாய்வியலுக்கும் இயற்கை வரலாற்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பண்பாட்டுக் கூறுகளான திருமணங்கள், விழாக்கள், உடைகள் அரங்கக் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன.
வழமையான ஆயுதங்கள், இசைக்கருவிகள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Muzium Negara". jmm.gov.my. Retrieved 2022-12-24.
- ↑ "National Museum, Malaysia - Virtual Tour". Joy of Museums Virtual Tours (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-24.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் தேசிய அருங்காட்சியகம், மலேசியா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அலுவல்முறை வலைத்தளம் பரணிடப்பட்டது 2021-03-10 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்) மற்றும் (மலாய்)
- மலேசியா சுற்றுலா - மியூசியம் நெகரா பரணிடப்பட்டது 2014-05-25 at the வந்தவழி இயந்திரம்
- Galleries 'A - D' and the outdoor displays of transportation