கோலாலம்பூர் மருத்துவமனை
கோலாலம்பூர் மருத்துவமனை | |
அமைவிடம் | பகாங் சாலை, கோலாலம்பூர், மலேசியா |
---|---|
ஆள்கூறுகள் | 3°10′17.2″N 101°42′06.5″E / 3.171444°N 101.701806°E |
மருத்துவப்பணி | பொது மருத்துவமனை |
நிதி மூலதனம் | மலேசிய அரசு |
வகை | முழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவக் கல்லூரி |
இணைப்புப் பல்கலைக்கழகம் | பெர்தானா மருத்துவப் பல்கலைக்கழக பட்டதாரிகள் பள்ளி (PUGSOM), துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் |
அவசரப் பிரிவு | 24 மணி நேர சேவை |
படுக்கைகள் | 2,722 |
நிறுவல் | 1870[1] |
வலைத்தளம் | [www கோலாலம்பூர் மருத்துவமனை Kuala Lumpur Hospital Hospital Besar Kuala Lumpur] |
பட்டியல்கள் | |
வேறு இணைப்புகள் | மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் போக்குவரத்து: PY18 கோலாலம்பூர் மருத்துவமனை எம்ஆர்டி நிலையம் (Hospital Kuala Lumpur MRT station) AG3 SP3 MR11 PY17 தித்திவாங்சா நிலையம் (Titiwangsa station) MR10 சௌக்கிட் இலகு தொடருந்து நிலையம் (Chow Kit Monorail station) |
கோலாலம்பூர் மருத்துவமனை (மலாய்:Hospital Besar Kuala Lumpur; ஆங்கிலம்:Kuala Lumpur Hospital) (HKL) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய பொது மருத்துவமனை ஆகும்.
மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்த மருத்துவமனை கோலாலம்பூர், பகாங் சாலையில் அமைந்துள்ளது. 1870-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகவும்; மலேசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனையாகவும் அறியப்படுகிறது.
வருமானம் நோக்கமற்ற பொதுநல நிறுவனமான கோலாலம்பூர் மருத்துவமனை; மலேசிய பொது சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவமனையாகச் செயல்படுகிறது. அத்துடன் மருத்துவப் படிப்பிற்கான கற்பித்தல் மருத்துவமனையாகவும்; மற்றும் பிற மருத்துவமனைகளின் தலைமைப் பரிந்துரை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.
பொது
[தொகு]150 ஏக்கர் பிரதான வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த மருத்துவமனையில் 84 மருத்துவமனைக் கூடங்கள் (வார்டுகள்); மற்றும் 2,300 படுக்கைகள் உள்ளன. இது உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; இது பன்னாட்டு அளவில் தரமான மலிவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.[2]
புள்ளி விவரங்கள்
[தொகு]கோலாலம்பூர் மருத்துவமனை 54 வெவ்வேறு மருத்துவத் துறைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- 29 மருத்துவத் துறைகள்
- 5 மருத்துவ ஆதரவு சேவைகள்
- 11,000 பணியாளர்கள்
- 2,300 மருத்துவ வல்லுநர்கள்
- 300 மருத்துவர் நிபுணர்கள்
- 1,300 மருத்துவர்கள்,
- 72 தலைமைச்செவிலியர்கள்,
- 253 மருத்துவக்கூட மேலாளர்கள்
- 3,500 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள்
- 258 சமூகச் செவிலியர்கள்[3]
முகவரி
[தொகு]Hospital Kuala Lumpur
50586 Jalan Pahang
Wilayah Persekutuan Kuala Lumpur.
Tel : 03-26155555
E-mel : pro.hkl[at]moh.gov.my
இணையத் தளம்: hkl
காட்சியகம்
[தொகு]-
மகப்பேறு சிறப்பு மருத்துவமனை
-
மருத்துவ சமூக பணி துறை
-
மறுவாழ்வு மருத்துவத் துறை
-
மருத்துவமனையின் பிரதான சாலை
-
நோயாளிகள் பதிவுக்கூடம்
-
நோயாளிகள் காத்திருக்கும் இடம்
-
பரிசோதனை பதிவுக்கூடம்
-
கோலாலம்பூர் மருத்துவமனை எம்ஆர்டி நிலையம்
-
நோயாளிகள் நடைபாதை ஊர்தி
-
மருத்துவமனை சிறப்பு இலகு தொடருந்து
மேலும் காண்க
[தொகு]* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What a 'great dame' of a hospital". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
- ↑ "Off the Cuff - HKL ... our finest institution". The Sun (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
- ↑ "INTRODUCTION TO HKL". Ministry of Health, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2016.