உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா கிராய் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 5°32′N 102°12′E / 5.533°N 102.200°E / 5.533; 102.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலா கிராய் தொடருந்து நிலையம்
Kuala Krai Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
கோலா கிராய் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோலா கிராய், 18000 கோலா கிராய் மாவட்டம், கிளாந்தான்,  மலேசியா
ஆள்கூறுகள்5°32′N 102°12′E / 5.533°N 102.200°E / 5.533; 102.200
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைப்பாதை
1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மறுநிர்மாணம்2008
சேவைகள்
முந்தைய நிலையம்   கோலா கிராய் தொடருந்து நிலையம்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
தெமங்கான்
>>>
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
தாபோங்
>>>
ஜொகூர் பாரு
சுங்கை நால்
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
பாகி நிறுத்தம்
>>>
கோலா லிப்பிஸ்
சுங்கை நால்
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
பாகி நிறுத்தம்
>>>
குவா மூசாங்
சுங்கை நால்
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
பாகி நிறுத்தம்
>>>
தாபோங்
அமைவிடம்
Map
கோலா கிராய் தொடருந்து நிலையம்


கோலா கிராய் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Krai Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Krai) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டம், கோலா கிராய் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோலா கிராய் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

கிளாந்தான் மாநிலத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையமான கோலா கிராய் தொடருந்து நிலையம், மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் (KTM East Coast Line) அமைந்துள்ளது; மற்றும் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. கோலா கிராய் நகரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.[2]

பொது[தொகு]

1920-ஆம் ஆண்டுகளில் கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway) எனும் தொடருந்து கட்டுமானத்தில் இருந்து கோலா கிராய் தொடருந்து நிலையத்தின் வரலாறும் தொடங்குகிறது. அதற்கு முன்னர், இந்தப் பகுதியில் வாரத்திற்கு ஒரு முறைதான் ஆற்றின் வழியாகப் படகுப் பயணங்கள் இருந்தன.

அந்தப் படகுச் சேவையை, டப் டிவலப்மெண்ட் ரிவர் ஸ்டீமர் (Duff Development River Steamers) எனும் பெயரில் கிளாந்தான் அரசாங்கம் நடத்தி வந்தது.[3] வாரத்திற்கு ஒரு முறை தான் கிராம மக்கள் பாசிர் மாஸ் நகரத்திற்கு வர முடியும்.

கோலா கிராய் ஆற்றுப் போக்குவரத்து[தொகு]

கிளாந்தான் மாநிலத்தில் தொடருந்து சேவை நடைமுறைக்கு வந்ததும், கிளாந்தான் மாநிலத்தின் தொலைதூர உட்புறத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. கோலா கிராயில் இருந்த ஆற்றுப் போக்குவரத்து, தொடருந்து சேவையால் முழுமையாக மாற்றம் அடைந்தது.[4]

கோலா கிராய் நகரில் தொடருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த நகரம் பொதுமக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் தொடருந்து சேவைகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கோலா கிராய் தொடருந்து நிலையம் 1920-களில் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. தற்போது இந்த நிலையம் ஜொகூர் பாரு சென்ட்ரல், கிம்மாஸ் நிலையங்களில் இருந்து கிளாந்தானில் உள்ள மற்ற நகரங்கள் வழியாக இயக்கப்படுகிறது.[4]

நிலைய வசதிகள்[தொகு]

 • பக்க மேடை
 • காத்திருப்புப் பகுதி
 • பொது கழிப்பறைகள்
 • வாகன நிறுத்துமிடம்
 • கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
 • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
 • பானங்கள் விற்பனை இயந்திரம்

தொடருந்து சேவைகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kuala Krai KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Kuala Krai, Kelantan. It is the biggest railway station in Kelantan state". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
 2. "Krai Railway Station". Transport Malaysia. 3 February 2011. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
 3. Shukor Rahman. "Kuala Krai, a town that owes its origin, growth to the railway". scanned local newspaper cutting, probably dating from the early 1970s. பார்க்கப்பட்ட நாள் 5 May 2007.
 4. 4.0 4.1 "Kuala Krai Railway Station began its operation in the 1920s and currently, the station serves the KTM Intercity East Coast Line. The train runs from JB Sentral, Gua Musang, Dubong, Tumpat and right through other towns in Kelantan". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]