பாசிர் மாஸ்
பாசிர் மாஸ் | |
---|---|
Pasir Mas | |
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 6°02′N 102°08′E / 6.033°N 102.133°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | பாசிர் மாஸ் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 139 km2 (54 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,30,424 |
அஞ்சல் குறியீடு | 17xxx |
தொலைபேசி எண்கள் | +6-09-7 |
வாகனப் பதிவெண்கள் | D |
பாசிர் மாஸ் (மலாய் மொழி: Pasir Mas அல்லது Pasey Mah; ஆங்கிலம்: Pasir Mas; ஜாவி: ڤاسير مس) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; பாசிர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 14 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 434 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பாசிர் மாஸ் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இதன் மக்கள் தொகை 230,424.[1]
1918-ஆம் ஆண்டில், பாசிர் மாஸ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோத்தா பாரு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டன. பின்னர் அந்தப் பகுதிகளுக்கு என பாசிர் மாஸ் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொது
[தொகு]இந்த நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.
பாசிர் மாஸ் நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் பாசிர் மாஸ் தொடருந்து நிலையம். இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pasir Mas - Rantau Panjang highway, 09 km from the old town". Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Mas.