ஜெராண்டுட் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 3°56′14″N 102°21′28″E / 3.93722°N 102.35778°E / 3.93722; 102.35778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெராண்டுட் தொடருந்து நிலையம்
Jerantut Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
ஜெராண்டுட் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜெராண்டுட், ஜெராண்டுட் மாவட்டம், பகாங்,  மலேசியா
ஆள்கூறுகள்3°56′14″N 102°21′28″E / 3.93722°N 102.35778°E / 3.93722; 102.35778
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைப்பாதை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   ஜெராண்டுட்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
கெராம்பிட்
<<<
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
கோலா கெராவ்
>>>
ஜொகூர் பாரு
மேலா நிறுத்தம்
<<<
கோலா லிப்பிஸ்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
ஜென்டேராக்
>>>
கிம்மாஸ்
அமைவிடம்
Map
ஜெராண்டுட் தொடருந்து நிலையம்

ஜெராண்டுட் தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Jerantut Railway Station மலாய்: Stesen Keretapi Jerantut) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், ஜெராண்டுட் மாவட்டம், ஜெராண்டுட் பழைய நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது.[1].

இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 184 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 177 கி.மீ.; தொலைவில் உள்ளது. ஜெராண்டுட் நிலையம் தேசியப் பூங்காவில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள பேருந்து முனையம், ஜெராண்டுட் தொடருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2]

பொது[தொகு]

ஜெராண்டுட் நிலையம் கிழக்கு நகரிடை சேவையில், ஜெராண்டுட் மற்றும் அதன் அருகிலுள்ள சிறு நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பு மையமாக விளங்குகிறது. ஜெராண்டுட் பழைய நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. ஜெராண்டுட் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்துகள் ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து தும்பாட் நிலையம் வரையில் இயக்கப்படுகின்றன.[2]

சிகாமட் - குவா மூசாங் - தும்பாட் வழித்தடம்[தொகு]

ஜெராண்டுட் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கெராம்பிட் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. 1920 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் பல கிராமவாசிகளுக்கு தொடருந்துகள் முதன்மையான போக்குவரத்து முறையாக இருந்ததால், ஜெராண்டுட்டில் உள்ள தொடருந்து நிலையம் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பே இருந்தே இயங்கி வருகிறது.[2]

தனியார் பேருந்துச் சேவைகளைக் காட்டிலும் ஜெராண்டுட் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த ஜெராண்டுட் நிலையம் சிகாமட் - கோலா லிப்பிஸ் - குவா மூசாங் - தும்பாட் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[3]

நிலைய வசதிகள்[தொகு]

  • தீவு / பக்க மேடைகள்
  • காத்திருப்புப் பகுதி
  • பொது கழிப்பறைகள்
  • வாகன நிறுத்துமிடம்
  • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
  • பானங்கள் விற்பனை இயந்திரங்கள்

தொடருந்து சேவைகள்[தொகு]

சுற்றுலா தளங்கள்[தொகு]

  • தேசியப் பூங்கா[2]
  • கெலாங்கி குகைகள்[3]
  • லதா மெராவுங் நீர்வீழ்ச்சி
  • பூர்வீக மக்களின் குடியேற்றப்பகுதி

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Situated at the old town of Jerantut; it is a little bit hidden at the back of shop lot building". Tripadvisor LLC. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Jerantut as the town offers unique attractions including Taman Negara (National Park), Kota Gelanggi Caves, Lata Meraung Waterfall and Orang Asli Settlement. Jerantut Railway Station is situated only 2.5 kilometres away from Taman Negara. Travellers can alight at the train station in Jerantut and grab a taxi or a car-sharing ride to get to Taman Negara easily". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  3. 3.0 3.1 "The Jerantut Station is one of the major stations of KTM's East Coast Line. KTM intercity and express trains stop at this station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  4. "Train Schedule KTMB". ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.

வெளி இணைப்புகள்[தொகு]