மெராப்போ தொடருந்து நிலையம்
மெராப்போ | |||||||
---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Merapoh Railway Station | |||||||
மெராப்போ தொடருந்து நிலையம் | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | மெராப்போ, லிப்பிஸ் மாவட்டம், பகாங் மலேசியா | ||||||
ஆள்கூறுகள் | 4°41′35″N 102°00′10″E / 4.69306°N 102.00278°E | ||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | ||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை | ||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை | ||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||
கட்டமைப்பு | |||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||
வரலாறு | |||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||
மின்சாரமயம் | இல்லை | ||||||
சேவைகள் | |||||||
|
மெராப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Merapoh Railway Station மலாய்: Stesen Keretapi Merapoh) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், மெராப்போ நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 315 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
இந்த நிலையம் கோலா லிப்பிஸ் மற்றும் மெராப்போ நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையின் ஒரு முனையமாக விளங்குகிறது. மெராப்போ நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. மெராப்போ நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1]
பொது
[தொகு]தாமான் நெகாரா தேசியப் பூங்கா
[தொகு]மெராப்போ நகரம், தகான் மலை அடிவாரத்தில் இருப்பதால் தித்திவாங்சா மலைத்தொடரில் மலைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இறுதி நகர முனையமாகவும் விளங்குகிறது. மெராப்போ நகரம் ஒரு சிறிய நகரம்; தகான் மலையின் சுங்கை ரெலாவு (Sungai Relau) மலைக் கிராமத்திற்குச் செல்வதற்கு முன் மெராப்போ நகரம் ஒரு நிறுத்தமாகச் செயல்படுகிறது.[2]
தாமான் நெகாராவிற்கு ஒரு நுழைவாயிலாகவும் இந்த நிலையம் உள்ளது. அந்தக் காரணத்தினால், தித்திவாங்சா மலைத்தொடருக்கும் தாமான் நெகாரா தேசியப் பூங்காவிற்கும் தொடருந்து சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய இடமாகவும் உள்ளது. லிப்பிஸ் மாவட்டத்தில் பகாங் - கிளாந்தான் எல்லைக்கு அடுத்ததாக மெராப்போ நகரம் அமைந்துள்ளது.[2]
கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்
[தொகு]மெராப்போ தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் மெராப்போ நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[3][4][2]
ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.[3]
நிலைய வசதிகள்
[தொகு]- தீவு / பக்க மேடைகள்
- காத்திருப்புப் பகுதி
- பொது கழிப்பறைகள்
- வாகன நிறுத்துமிடம்
- கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
- வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
- பானங்கள் விற்பனை இயந்திரங்கள்
தொடருந்து சேவைகள்
[தொகு]- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து - 26/27 தும்பாட் - ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 50/53/58/59 குவா மூசாங் - கோலா லிப்பிஸ் - (Shuttle Timur 50/53/58/59 Gua Musang–Kuala Lipis)[5]
மேலும் காண்க
[தொகு]- மெராப்போ
- தாபோங் தொடருந்து நிலையம்
- தாமான் நெகாரா
- தித்திவாங்சா மலைத்தொடர்
- குவா மூசாங் தொடருந்து நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Merapoh KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Merapoh, Pahang. The Railway Station is one of the major stations of KTM's East Coast Line. KTM intercity and express trains stop at this Station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ 2.0 2.1 2.2 "Merapoh town serves as a stop before heading to Sungai Relau; an entry point to Taman Negara. For that reason, Merapoh Railway Station becomes an important part providing train services towards the national park". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ 3.0 3.1 "Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ "Pahang National Park, Sungai Relau, Merapoh". Department of Wildlife and National Parks. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ "Gua Musang Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.