சிப்பாங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E / 2.750; 101.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்பாங் மாவட்டம்
சிலாங்கூர்
Daerah Sepang
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர்
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர்
ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E / 2.750; 101.667
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
தொகுதிசாலாக் திங்கி
உள்ளூராட்சிசிப்பாங் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிரோசுலினா ஜானி[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்599.66 km2 (231.53 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,90,889
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+6-03-8
வாகனப் பதிவுB

சிப்பாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Sepang; ஆங்கிலம்: Sepang District; சீனம்: 雪邦縣) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி (Salak Tinggi).

மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாநிலங்களில் இருந்து, 1975 ஜனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[3]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

Sepang, Selangor Parliament and State Assembly Electoral Districts

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கூட்டணி கட்சி
P113 சிப்பாங் முகமட் அனிபா மைடின் பாக்காத்தான் ஹரப்பான் அமானா

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[4]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P113 N54 தஞ்சோங் சிப்பாட்
Tanjong Sepat
போர்கான் அமான் ஷா
Borhan Aman Shah
பாக்காத்தான் ஹாராப்பான்
P113 N55 டெங்கில்
Dengkil
அடிப் சான் அப்துல்லா
Adhif Syan Abdullah
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P113 N56 சுங்கை பீலேக்
Sungai Pelek
ரோனி லியூ தியான் கியூ
Ronnie Liu Tian Khiew
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க)
P160 N44 லார்கின் முகமட் இஷார் அகமது
Mohd Izhar Ahmad
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P160 N45 சுதுலாங் சென் கா எங்
Chen Kah Eng
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portal Rasmi PDT Sepang Perutusan Pegawai Daerah". www2.selangor.gov.my. Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
  2. "சிப்பாங் மாவட்டத்தின் பரப்பளவு புள்ளிவரங்கள்". www2.selangor.gov.my. Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
  3. "Latar Belakang – MAJLIS PERBANDARAN SEPANG". பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.
  4. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பாங்_மாவட்டம்&oldid=3623887" இலிருந்து மீள்விக்கப்பட்டது