நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான்
நெகிரி செம்பிலான் அப்துல் ரகுமான் Abdul Rahman of Negeri Sembilan عبدالرحمن | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
துவாங்கு அப்துல் ரகுமான் (1950-களில) | |||||||||
மலேசியாவின் முதலாவது பேரரசர் | |||||||||
ஆட்சிக்காலம் | 31 ஆகஸ்டு 1957 - 1 ஏப்ரல் 1960 | ||||||||
முடிசூட்டு | 2 செப்டம்பர் 1957 | ||||||||
முன்னையவர் | இரண்டாம் எலிசபெத் (மகாராணி) | ||||||||
பின்னையவர் | சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் | ||||||||
நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் | |||||||||
ஆட்சிக்காலம் | 3 ஆகஸ்டு 1933 - 1 ஏப்ரல் 1960 | ||||||||
முடிசூட்டு | 25 ஏப்ரல் 1934 | ||||||||
முன்னையவர் | நெகிரி செம்பிலான் முகமட் | ||||||||
பின்னையவர் | நெகிரி செம்பிலான் முனாவிர் | ||||||||
பிறப்பு | இசுதானா செரி மெனாந்தி, செரி மெனாந்தி, நெகிரி செம்பிலான், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் | 24 ஆகத்து 1895||||||||
இறப்பு | 1 ஏப்ரல் 1960 இசுதானா நெகாரா மலேசியா, கோலாலம்பூர், மலாயா | (அகவை 64)||||||||
புதைத்த இடம் | 5 ஏப்ரல் 1960 | ||||||||
துணைவர் | எங்கு மைமுனா பிந்தி அப்துல்லா (டல்சி கேம்ப்பெல்) துங்கு மகாருன் பிந்தி தெங்கு மாம்பாங் துங்கு குர்சியா பிந்தி துங்கு பெசார் புர்கானுதீன் (1929 - 1960) துங்கு சைதா பிந்தி துங்கு சகாரியா | ||||||||
குழந்தைகளின் பெயர்கள் | துங்கு அயிடா நெகிரி துவாங்கு சாபார் துங்கு சீலா துவாங்கு அப்துல்லா நெகிரி செம்பிலான் முனாவிர் சுல்தானா பகியா துங்கு சகாரியா துங்கு நூரைடா சாக்கியா பர்ரா இசதுல் | ||||||||
| |||||||||
மரபு | பகாருயோங் | ||||||||
தந்தை | துவாங்கு முகம்மது இப்னி அல்மர்கும் துவாங்கு அந்தா | ||||||||
தாய் | துங்கு அலிஜா பிந்தி துங்கு மூட சிக் | ||||||||
மதம் | இசுலாம் |
நெகிரி செம்பிலான் துவாங்கு சர் அப்துல் ரகுமான் GCMG (ஆங்கிலம்: Tuanku Sir Abdul Rahman ibni Almarhum Tuanku Muhammad; மலாய்: Tuanku Sir Abdul Rahman ibni Almarhum Tuanku Muhammad; சாவி:وانكو سر عبدالرحمن ابن المرحوم توانكو محمد ); (பிறப்பு: 24 ஆகஸ்டு 1895 - இறப்பு: 1 ஏப்ரல் 1960) மலாயாவின் 1-ஆவது, யாங் டி பெர்துவான் அகோங் எனும் (மலேசிய அரசர்) ஆவார். இவர் 1933-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாம் துவான் பெசார் ஆட்சியாளரும் ஆவார்.[1]
1957 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி மலாயா விடுதலை அடைந்த நாள் தொடங்கி 1960 ஏப்ரல் 1-ஆம் தேதி, அவர் இறக்கும் வரையில் மலேசிய அரசர் பதவியை வகித்தார்.
1967 சூன் 12-ஆம் தேதி, துவாங்கு அப்துல் ரகுமானின் உருவப்படம், மலேசியாவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட முதல் மலேசிய ரிங்கிட் தாட்களின் முகப்பில் இடம்பெற்றது. தொடர்ந்து அவரின் உருவப்படம் இதுவரையிலும் இடம்பெற்று வருகிறது.
பொது
[தொகு]பிறப்பு
[தொகு]நெகிரி செம்பிலான் துவாங்கு சர் அப்துல் ரகுமான், ஆகஸ்ட் 24, 1895-இல் செரி மெனாந்தியில் பிறந்தார்.[2] இவரின் தந்தையார் நவீன நெகிரி செம்பிலானின் முதல் யாங் டி பெர்துவான் பெசார்; மற்றும் செரி மெனாந்தியின் ஏழாவது யாங் டி பெர்துவான் பெசார் (1888-1933) எனும் துவாங்கு முகம்மது இப்னி துவாங்கு அன்டா ஆவார். துவாங்கு அப்துல் ரகுமான் தந்தையாரின் இரண்டாவது மனைவி துங்கு புவான் சிக் என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
1907 மற்றும் 1914-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவர் நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டம், செம்போல் நகரத்தின் மலாய் பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியையும்; பின்னர் மலாய் கல்லூரியில் உயர்நிலைக் கல்வியையும் பெற்றார்.
இராணுவச் சேவை
[தொகு]சிரம்பானில் நில வருவாய் உதவி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கோலாலம்பூரில் உள்ள அரசு மத்தியச் செயலகத்தில் ஓராண்டு காலம் பணியாற்றினார். பின்னர் மலாயா தன்னார்வ காலாட் படையில் இரண்டாவது இளயரையராக பணியாற்றினார். 1918-இல் இளயரையராக (லெப்டினன்ட்) பதவி உயர்வு பெற்றார்.[3]
1917-இல் அவரின் மூத்த சகோதரர் துங்கு அப்துல் அசீஸ் இறந்தவுடன், அவர் அரியணைக்கு வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் துங்கு மூடா செர்த்திங் என்ற பட்டத்தைபயும் பெற்றார். பின்னர் அவர் சிப்பாங்கிற்கு மாற்றப்படுவதற்கு முன்பு கிள்ளான் பகுதியில் உதவி மலாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் உலு சிலாங்கூரில் நில வருவாய் உதவி ஆட்சியராகப் பணி அமர்த்தப்பட்டார்.
சட்டத்துறை படிப்பு
[தொகு]1925 ஆம் ஆண்டில், அவர் அப்போது நெகிரி செம்பிலானின் ஆட்சியாளராக இருந்த தன் தந்தையுடன், வெம்ப்ளியில் நடந்த பிரித்தானிய பேரரசு கண்காட்சிக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து பயணத்தின் போது அவர் அங்கு சட்டம் படிக்க முடிவு செய்தார். அவரின் தந்தை துவாங்கு முகம்மதுவின் ஒப்புதலுடன், அவர் தன் சட்டப் படிப்பை முடித்து பட்டம் பெறும் வரையில் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்தார். 1928-இல், ஐக்கிய இராச்சியத்தில் ஒரு வழக்கறிஞரானார்.[4]
1928 டிசம்பரில் மலாயாவுக்குத் திரும்பியதும், அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலாயா பொதுச் சேவையில் பணியாற்றினார்.[3] முதல் சில வருடங்கள், குற்றவியல் நீதித்துறை நடுவராகும் வரை கடுமையாக உழைத்தார். இதை அடுத்து, மாவட்ட ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பேரரசர் பதவி
[தொகு]துவாங்கு அப்துல் ரகுமான், 31 ஆகஸ்டு 1957-இல், ஐந்து வருட காலத்திற்கு, சுதந்திர மலாயாவின் முதல் யாங் டி பெர்துவான் அகோங் அல்லது மலேசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] அவர் முதல் யாங் டி பெர்துவான் அகோங்காக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு 24 ஆண்டுகள் நெகிரி செம்பிலானின் ஆட்சியாளராக இருந்தார். 2 செப்டம்பர் 1957-இல் முடிசூட்டு விழா நடைபெற்றது.
இறப்பு
[தொகு]துவாங்கு அப்துல் ரகுமான் 1 ஏப்ரல் 1960 அதிகாலை கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் தூக்கத்தில் இறந்தார். ஏப்ரல் 2, 1960-இல், கோலாலம்பூரில் அரசு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அவரின் உடல் சிரம்பானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் இசுதானா செரி மெனாந்திக்கு கொண்டு செல்லப்பட்டது.
5 ஏப்ரல் 1960-இல், நெகிரி செம்பிலான், செரி மெனாந்தி, செரி மெனாந்தி அரச கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[6]
விருதுகள்
[தொகு]மலேசிய விருதுகள்
[தொகு]- மலேசியா:
- - Order of the Crown of the Realm (DMN) (1958)[7]
வெளிநாட்டு விருதுகள்
[தொகு]- ஐக்கிய இராச்சியம்:
- - Order of St Michael and St George (KCMG) – சர் (1934)
- - King George V Silver Jubilee Medal (1935)[8]
- - King George VI Coronation Medal (1937)[9]
- - Queen Elizabeth II Coronation Medal (1953)
- - Order of St Michael and St George (GCMG) – சர் (1957)[10]
- புரூணை
- - Family Order of Laila Utama (DK) - Dato Laila Utama (1959)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sultan Tuanku Abdul Rahman of Negeri Sembilan". Search Malaysia Design Archive (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "Abdul Rahman, Tuanku". Encyclopædia Britannica (15th) I: A-ak Bayes. (2010). Chicago, Illinois: Encyclopædia Britannica Inc.. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59339-837-8.
- ↑ Abdul Samad Idris (1961) Takhta Kerajaan Negeri Sembilan Utusan Printcorp Sdn Bhd
- ↑ "Abdul, Rahman, 1895 - 1960 (Tuanku, Yang di-Pertuan Besar of Negri Sembilan) ArchiveSearch". archivesearch.lib.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ (4 August 1957) Sunday Times, Singapore
- ↑ Mubin Sheppard (1960) The Death and Funeral of His Late Majesty Tuanku Abdul Rahman Malaya in History Vol 6 No. 1 Malayan Historical Society, Kuala Lumpur
- ↑ "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1958" (PDF).
- ↑ "KING’S JUBILEE MEDAL AWARDS IN MALAYA". Straits Budget: pp. 16. 30 May 1935. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitsbudget19350530-1.2.91.
- ↑ "CORONATION MEDALS FOR MALAYA". Morning Tribune: pp. 23. 26 May 1937. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/morningtribune19370526-1.2.94.
- ↑ "No. 40960". இலண்டன் கசெட் (Supplement). 28 December 1956. p. 4.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Malaysia National Library's Tuanku Abdul Rahman biography.
- Council of Rulers' Tuanku Abdul Rahman biography (in Malay).
- Yang di-Pertuan Agong (Malaysian Monarchy)