பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்
பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் | |
---|---|
Diagram of the lower gastrointestinal tract | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | புற்றுநோயியல் |
ஐ.சி.டி.-10 | C18.-C20./C21. |
ஐ.சி.டி.-9 | 153.0-154.1 |
ஐ.சி.டி.-ஒ | M8140/3 (95% of cases) |
ம.இ.மெ.ம | 114500 |
நோய்களின் தரவுத்தளம் | 2975 |
மெரிசின்பிளசு | 000262 |
ஈமெடிசின் | med/413 med/1994 ped/3037 |
பேசியண்ட் ஐ.இ | பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் |
பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்று நோய் (Colorectal cancer) என்பது பெருங்குடலின் பகுதிகளில் ஏற்படும் புற்று நோயைக் குறிக்கிறது. இதன் மற்றொரு பெயர் பெருங்குடல் புற்று நோய், அல்லது குடல் புற்று நோய் ஆகும். [1]இப்புற்றுநோய்க்கான காரணம், செல்களின் அசாதாரணமான வளர்ச்சியும் உடலின் மற்ற பகுதிகளை ஊடுருவிப் பரவக்கூடிய திறனும் ஆகும்.[2]
மலத்தில் இரத்தப் போக்கு, மலங்கழித்தலில் மாறுதல்கள் , எடைக் குறைவு, மேலும் எப்பொழுதும் சோர்வாக இருப்பது போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.[3]
நோய்க்கான காரணம்
[தொகு]பெருங்குடல் புற்று நோய் வருவதற்கு, வாழ்க்கை முறைகளும், முதுமையடைவதும் பெரும்பாலான காரணங்களாக இருப்பினும், ஒரு சிறு எண்ணிக்கை நோயாளிகளுக்கு மரபணு மற்றும் மரபுவழி கோளாறுகளாலும் இந்நோய் ஏற்படுகிறது.[4][5]
பதப்படுத்தபட்ட இறைச்சி, மது போன்ற உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பருமன், புகைபிடித்தல், போதிய உடல் ரீதியான செயல்பாடுகள் இல்லாமலிருப்பதும் இந்நோய்க்கான காரணிகளில் அடங்கும்.[4][5] இதுமட்டுமின்றி குடல் அழற்சி நோய், சுருட்குடல் நோய், பெருங்குடல் அழற்சி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டாலும் இப்புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.[4]
நோய் கண்டறிதல், தடுத்தல் மற்றும் திரையிடல்
[தொகு]குடற்திசு மாதிரியைக் கொண்டு குடலில் கட்டி உள்ளதா என்றறிய செய்யப்படும் சிக்மோய்டோஸ்கோபிச் சோதனை அல்லது கொலோனோஸ்கோபி வாயிலாக இப்புற்றுநோயைக் கண்டறியாலாம்.[3] அதனைத் தொடர்ந்து மருத்துவ இயல்நிலை படமாக்கல் செய்து நோய் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.[1] 50 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் குடல் புற்றுநோயிலிருந்து இறப்பதைத் தவிர்ப்பதற்கு புற்றுநோய் மருத்துவ சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.[6]
கொலோனோஸ்கோபி செய்யும் பொழுது கட்டிகள் அகற்றப்படுகிறது. ஆஸ்ப்ரின் மற்றும் ஸ்டீரோய்ட் அல்லாத அழற்சி மருந்துகள் ஆபத்தை குறைக்கின்றன.[4][7] எனினும் பக்க விளைவுகள் காரணமாக இவை பொதுப் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கபடுவதில்லை.[8]
மேலாண்மை, முன்கணிப்பு, நோய்த்தொற்று அறிவியல்
[தொகு]மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை மற்றும் இலக்குச் சிகிச்சை என சில கூட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[1] பெருங்குடல் சுவற்றில் மட்டுமே காணப்படும் புற்று நோய்களை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும், ஆயினும் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கும் புற்றுநோயைப் பொதுவாகப் பெரும்பாலும் குணப்படுத்த இயலாது.[1] எனினும் இது புற்றுநோயின் முற்றிய நிலை, புற்றுநோய்க் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடிதல், நோயாளியின் ஒட்டுமொத்த உடல் நிலை இவைகளைப் பொறுத்து ஐந்து ஆண்டுகள்[9] வரை உயிர்வாழ முடியும்.[3]
உலகளவில் மலக்குடல் புற்று நோய், மொத்தப் புற்று நோயாளிகளிடயே 10 % ஆக, மூன்றாவது இடத்தில் உள்ளது.[10] 2012-ல் புதிதாக மொத்தம் 140 லட்சம் நபர்கள் குடல் புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்தார்கள், மேலும் 69400 நபர்கள் இந்த நோயினால் இறந்தார்கள்.[10] முன்னேறிய நாடுகளில் இந்நோய்ப் பரவலாகக் காணப்படுகிறது. அங்கு 65% வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.[4] இந்த நோய் ஆண்களைவிடப் பெண்களிடயே குறைவாகவே உள்ளது.[4]
மேற்கோள் ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Colon Cancer Treatment (PDQ®)". NCI. 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ "Defining Cancer". National Cancer Institute. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
- ↑ 3.0 3.1 3.2 "General Information About Colon Cancer". NCI. 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 5.5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9283204298.
- ↑ 5.0 5.1 "Colorectal Cancer Prevention (PDQ®)". National Cancer Institute. 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ "Screening for Colorectal Cancer". U.S. Preventive Services Task Force. October 2008. Archived from the original on 21 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Thorat, MA; Cuzick, J (Dec 2013). "Role of aspirin in cancer prevention.". Current oncology reports 15 (6): 533–40. doi:10.1007/s11912-013-0351-3. பப்மெட்:24114189.
- ↑ "Routine aspirin or nonsteroidal anti-inflammatory drugs for the primary prevention of colorectal cancer: recommendation statement.". Am Family Physician 76 (1): 109–13. 2007. பப்மெட்:17668849. http://www.aafp.org/afp/2007/0701/p109.html.
- ↑ "SEER Stat Fact Sheets: Colon and Rectum Cancer". NCI. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
- ↑ 10.0 10.1 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 1.1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9283204298.