உடற் பருமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடல் பருமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Obesity
Three silhouettes depicting the outlines of a normal sized (left), overweight (middle), and obese person (right).
Silhouettes and waist circumferences representing normal, overweight, and obese
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு உட்சுரப்பியல்
ICD-10 E66.
ICD-9-CM 278
OMIM 601665
நோய்களின் தரவுத்தளம் 9099
MedlinePlus 003101
ஈமெடிசின் med/1653
MeSH C23.888.144.699.500

கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்துவைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.[1]. ஆனாலும் இதனை ஒரு நோய் என்று அடையாளப்படுத்துதல் சரியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.[2][3]

மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது.

2016 இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த உடல் பனுமனுள்ளோரின் அண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளது எனவும், உடல்நிறை குறைவினால் ஏற்படும் இறப்பை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ள நாடுகளிலேயே, உலகின் சனத்தொகையின் கூடிய பங்கு வசிக்கிறது எனவும், உடற் பருமன் ஒரு தடுக்கப்படக்கூடிய நிலைமையே என்கிறது.[4]

உடல் பருமன் சுட்டு[தொகு]

ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு (en:BMI] என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் (இரட்டிப்பு எண்ணால்) பிரிப்பதால் பெறப்படுகின்றது ().)[5] பின்னர் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப்[6] பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பதில் இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருபாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்டக் கூடும்.

உடல் பருமனுக்கான காரணங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Treating Obesity as a Disease". American Heart Association. பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
  2. Heshka S1, Allison DB. (Oct 2001). "Is obesity a disease?". Int J Obes Relat Metab Disord. 25 (10): 1401-4. doi:10.1038/sj.ijo.0801790. பப்மெட் 11673757. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11673757. 
  3. Kopelman PG, Finer N. (Oct 2001). "Reply: Is obesity a disease?". Int J Obes Relat Metab Disord. 25 (10): 1405-6. doi:10.1038/sj.ijo.0801791. பப்மெட் 11673758. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11673758. 
  4. "Obesity and overweight". Fact Sheet. WHO (June 2016). பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
  5. "About Adult BMI". Centres for Disease Control and Prevention. பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
  6. "Body Mass Index Table 1". Natinal Heart, Lung and Blood Institutes. பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்_பருமன்&oldid=2260264" இருந்து மீள்விக்கப்பட்டது