உள்ளடக்கத்துக்குச் செல்

சரவாக் மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவாக்
மாநில சட்டமன்றம்
Sarawak State Legislative Assembly
Dewan Undangan Negeri Sarawak
19-ஆவது சட்டப் பேரவை
Emblem of the Sarawak State Legislative Assembly
சரவாக் மாநில
சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு8 செப்டம்பர் 1867
தலைமை
துன் பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் மகமுட்
(Abdul Taib Mahmud)
1 மார்ச் 2014 முதல்
முகமது அசுபியா அவாங் நாசர்
(Mohamad Asfia Awang Nassar), ஜிபிஎஸ்பிபிபி
துணைப் பேரவைத் தலைவர்
இட்ரிசு புவாங்
(Idris Buang)
11 பிப்ரவரி 2022 முதல்
அபாங் ஜொகாரி ஒப்பேங்
(Abang Abdul Rahman Johari Abang Openg)[1], ஜிபிஎஸ்பிபிபி
13 சனவரி 2017 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
வோங் சூன் கோ
(Wong Soon Koh), பிஎஸ்பி
9 நவம்பர் 2020 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்82
அரசியல் குழுக்கள்
ஆண்டு
14.08.2022

அரசாங்கம் (76)
     ஜிபிஎஸ் (76)

நம்பிக்கை மற்றும் வழங்கல் (1)
     சுயேட்சை (1)

எதிர்க்கட்சிகள் (5)
     பிஎஸ்பி (3)

     பாக்காத்தான் (2)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
18 டிசம்பர் 2021
அடுத்த தேர்தல்
15 ஏப்ரல் 2027
கூடும் இடம்
New Sarawak State Legislative Assembly Building, Petra Jaya, Kuching, Sarawak
புதிய சரவாக் மாநில சட்டமன்ற கட்டடம், பெட்ரா ஜெயா, கூச்சிங், சரவாக்
வலைத்தளம்
duns.sarawak.gov.my

சரவாக் மாநில சட்டமன்றம் அல்லது சரவாக் சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Sarawak; ஆங்கிலம்: Sarawak State Legislative Assembly; சீனம்: 砂拉越州议会; ஜாவி: ديوان اوندڠن نڬري سراوق) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான சரவாக் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி சரவாக் மாநிலச் சட்டமன்றம் 82 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றமாகவும் அறியப்படுகிறது.

சரவாக் மாநிலத்தின் சட்டமன்ற முறைமை ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறைமையை (Westminster Parliamentary System) பின்னணியாகக் கொண்டது. சரவாக், கூச்சிங் மாநகரில், புதிய சரவாக் மாநில சட்டமன்ற (New Sarawak State Legislative Assembly Building) கட்டடத்தில் சரவாக் மாநிலப் பேரவை கூடுகிறது.

பொது

[தொகு]

சரவாக் கட்டாய வாக்களிப்பு நடைமுறையை (Compulsory Voting) பின்பற்றுவது இல்லை. மேலும் தகுதியுள்ள குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க, தானாகப் பதிவு செய்யப் படுவதும் (Automatic Voter Registeration) இல்லை. 1978-ஆம் ஆண்டு முதல் சரவாக் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் மலேசியாவின் மற்ற மாநிலங்களுடன் இணைந்து நடத்தப்படுவதும் இல்லை.

சரவாக் சட்டமன்றம் மலேசியாவின் பழமையான சட்டமன்றம் ஆகும். 1867 செப்டம்பர் 8-ஆம் தேதி சரவாக் வெள்ளை ராஜா (Raj of Sarawak) ஆட்சியின் போது, ஒரு பொதுச் சட்டமன்றமாக (General Council) நிறுவப்பட்டது. தவிர இந்தச் சரவாக் சட்டமன்றம், இப்போதைக்கு உலகின் பழைமையான சட்டமன்றங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

1903-ஆம் ஆண்டில், சரவாக் பொதுச் சட்டமன்றம், மாநிலச் சட்டமன்றமாக (Council Negri) மாறியது. இந்தச் சட்டமன்ற முறைமை வெள்ளை ராஜாக்களின் எஞ்சிய காலத்திலும் நீடித்தது. மற்றும் காலனித்துவ காலம் (Crown Colony of Sarawak) முழுவதும் மற்றும் மலாயா கூட்டமைப்பின் ஆரம்ப ஆண்டுகள் வரையிலும் தொடர்ந்தது.[2][3]

சரவாக் சட்டமன்ற வரலாறு

[தொகு]

சரவாக் இராச்சியம்

[தொகு]

சரவாக்கில் முதல் சட்டமன்றம் வெள்ளை ராஜாக்களின் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. சரவாக் இராச்சியத்தின் (Kingdom of Sarawak) பொதுச் சட்டமன்றம் (Majlis Umum), 1867 செப்டம்பர் 8-ஆம் தேதி, சரவாக் அரசராக இருந்த ஜேம்ஸ் புரூக் என்பவரின் உத்தரவின் கீழ், அப்போதைய சரவாக் இளவரசர் (Rajah Muda) சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவரால் கூட்டப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளூர்ப் பழங்குடி தலைவர்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டனர். உள்ளூர்ப் பழங்குடி தலைவர்கள் சரவாக் இராச்சியத்தை நிர்வகிப்பதில் ஜேம்ஸ் புரூக்கிற்கு உதவ முடியும் என்று கருதப் பட்டனர்.

சரவாக் பொதுச் சட்டமன்றம்

[தொகு]

பொதுச் சட்டமன்றம் (General Council), பின்னர் 1903-இல் மாநிலச் சட்டமன்றமாக மாற்றம் கண்டது. பொதுச் சட்டமன்றம் முதலில் பிந்துலுவில் கூடியது. 1976-இல், சரவாக் அரசியலமைப்பின் திருத்தத்தின் மூலம் பொதுச் சட்டமன்றத்தின் பெயரை மாநிலச் சட்டமன்றம் (Dewan Undangan Negeri) என மாற்றினார்கள்.[2]

1867-இல் பொதுச் சட்டமன்ற உறுப்பினர்களில் ஐந்து முக்கிய பிரித்தானிய அதிகாரிகள் இருந்தனர். அவர்களுக்கு ராஜா தலைவராக இருந்தார். அத்துடன் பொதுச் சட்டமன்ற உறுப்பினர்களில் மலாய் உறுப்பினர்கள்; மற்றும் மெலனாவ் (Melanau) உறுப்பினர்கள் 16 பேர் இருந்தனர். மாநிலத்தின் மக்கள்தொகை பெருகியதும் சரவாக் பொதுச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

சரவாக் அரசியலமைப்பு

[தொகு]

1937-இல், சீனர்களும் இபான்களும் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். 1941-ஆம் ஆண்டில் சரவாக்கின் அரசியலமைப்பு சட்டமன்றத்தின் மீது ராஜாவின் முழுமையான அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு (Japanese Occupation) காரணமாக அது நிறைவேறவில்லை.[4]

1969-இல், சரவாக் மாநிலச் சட்டமன்றத்தில் 48 இடங்கள் இருந்தன. 1985-இல் 56; 1985-இல் 62; 2005-இல் 71 என உயர்ந்தது. 2014-இல், தொகுதிகளின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்துவதற்கு ஓர் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இப்போது மலேசியாவில் அதிகமான சட்டமன்ற இடங்களைக் கொண்ட சட்டமன்றமாகவும் விளங்குகிறது.[5]

சரவாக் சட்டமன்றத் தகவல்கள்

[தொகு]

சரவாக் மாநில சட்டமன்றம் சரவாக் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் இரு அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.[6][7]

அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரவாக் சட்டமன்றம்; குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது அவசியமாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை அமர்வுகள் நடைபெறும். விதிவிலக்கான சூழ்நிலைகளில், வார இறுதியிலும் அமர்வுகள்ட நடத்தப் படலாம்.[8]

சரவாக் மாநில அரசியலமைப்பின் 13-வது பிரிவின் கீழ் சட்டமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. சரவாக் மாநில சட்டமன்றம், சரவாக் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.[9]

சட்டமன்ற உறுப்பினர் உரிமை

[தொகு]

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை சரவாக் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சரவாக் சபாநாயகர்

[தொகு]

சரவாக் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்சமயம் ஜிபிஎஸ் கூட்டணியின்; பிபிபி கட்சியைச் சேர்ந்த முகமது அசுபியா அவாங் நாசர் (Mohamad Asfia Awang Nassar) என்பவர் சரவாக் சட்டமன்ற சபாநாயகராக உள்ளார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

1963-இல் சரவாக் பொதுச் சட்டமன்றம் என்பது சரவாக் மாநிலச் சட்டமன்றம் எனும் புதிய பெயரைப் பெற்றது. அந்தப் புதிய சட்டமன்றத்தில் முதல்முறையாகச் சபாநாயகர் நியமிக்கப்பட்டார். அந்த முதல் சபாநாயகர் ஒரு மலேசியத் தமிழர் ஆகும். அவரின் பெயர் டத்தோ டாக்டர் முருகேசு சொக்கலிங்கம் (Dato Dr Murugasu Sockalingam). 1963-ஆம் ஆண்டில் இருந்து 1968-ஆம் ஆண்டு வரை சரவாக் சபாநாயகராகப் பொறுப்பு வகித்தார்.[10]

சரவாக் பிரதமர்

[தொகு]

சரவாக் மாநிலத்தின் ஆளுநர் (Governor); யாங் டி பெர்துவா சரவாக் என்று அழைக்கப் படுகிறார். அதே நேரத்தில் அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர்; சரவாக் பிரதமர் என்று அழைக்கப் படுகிறார். 2022 மார்ச் 1-ஆம் தேதி முதல் சரவாக்கின் முதலமைச்சர் பதவி சரவாக் பிரதமர் (Premier of Sarawak) பதவி என மாற்றம் கண்டுள்ளது.[2]

சரவாக் நிர்வாகம்

[தொகு]

சரவாக் மாநிலத்தை நிர்வாகப் பிரிவுகள் (Administrative Divisions) என்றும் மாவட்டங்கள் (Districts) என்றும் பிரித்து உள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற அமைப்பு முறைமையைக் கொண்டது.

இந்த அமைப்பு முறைமை மலேசியாவின் ஆரம்பகால மாநிலச் சட்டமன்ற அமைப்பைப் போன்றதாகும். மலேசிய அரசியலமைப்பின் (Malaysian Constitution) கீழ், தீபகற்ப மலேசியா மாநிலங்களை விட சரவாக் மாநிலத்திற்கு அதிக சுயாட்சி உள்ளது.

பிரிவுகள்

[தொகு]

சரவாக் மாநிலத்தில் உள்ள பிரிவுகள்:

சரவாக் சட்டமன்றம் (2021)

[தொகு]
2021-இல் சரவாக் மாநில சட்டமன்றத்தின் தொகுதிகள்.

மேற்கோள்

[தொகு]
  1. "Abang Johari Ketua Menteri baharu Sarawak". BH Online. Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
  2. 2.0 2.1 2.2 Constitution of the State of Sarawak. Archived from the original on 2022-03-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
  3. Sejarah Dewan Undangan Negeri 1 பரணிடப்பட்டது 2011-03-22 at the வந்தவழி இயந்திரம் (in Malay). Dewan Undangan Negeri Sarawak. Retrieved 14 June 2010
  4. Sejarah Dewan Undangan Negeri 2 பரணிடப்பட்டது 2011-03-22 at the வந்தவழி இயந்திரம் (in Malay). Dewan Undangan Negeri Sarawak. Retrieved 14 June 2010
  5. Sarawak Report (1963-1983). Malaysia: Malaysia Information Services. 1984. pp. 10–11. பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  6. Fungsi பரணிடப்பட்டது 2010-03-22 at the வந்தவழி இயந்திரம் (in Malay). Dewan Undangan Negeri Sarawak. Retrieved 14 June 2010
  7. Pengenalan பரணிடப்பட்டது 2010-06-25 at the வந்தவழி இயந்திரம் (in Malay). Dewan Undangan Negeri Sarawak. Retrieved 14 June 2010
  8. Speaker பரணிடப்பட்டது 2011-04-09 at the வந்தவழி இயந்திரம் (in Malay). Dewan Undangan Negeri Sarawak. Retrieved 14 June 2010
  9. Constitution of the State of Sarawak. Available online at: https://psc.sarawak.gov.my/modules/web/pages.php?mod=download&sub=download_show&id=87. Retrieved 16 December 2019. Archived from the original on 16 December 2019.
  10. "Speaking inside the box". Borneo Post Online. 24 April 2011. பார்க்கப்பட்ட நாள் 31 December 2022.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_மாநில_சட்டமன்றம்&oldid=3641551" இலிருந்து மீள்விக்கப்பட்டது