உள்ளடக்கத்துக்குச் செல்

கெடா மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெடா
மாநில சட்டமன்றம்
Kedah State Legislative Assembly
Dewan Undangan Negeri Kedah
14-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
கெடா மாநில சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1959
தலைமை
சுல்தான்
சுல்தான் சல்லேவுதீன் பாட்லிஷா
12 செப்டம்பர் 2017 முதல்
சுகாரி புலாட், பெரிக்காத்தான்-பெர்சத்து
25 August 2020 முதல்
துணைப் பேரவைத் தலைவர்
அகமத் பாட்சி ஹாஷிம்,
பெரிக்காத்தான்-பாஸ்
27 டிசம்பர் 2021 முதல்
முகமது சனுசி நோர், பெரிக்காத்தான்-பாஸ்
17 மே 2020 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
(காலி), பாக்காத்தான்
18 டிசம்பர் 2022 முதல்
செயலாளர்
முகமது அசிலீ அகமத்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்36
குறைவெண் வரம்பு: 12
எளிய பெரும்பான்மை: 19
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 24
அரசியல் குழுக்கள்
ஆண்டு
18.12.2022

அரசாங்கம் (21)
     பாரிசான் (21)

எதிர்க்கட்சிகள் (14)
     பாக்காத்தான் (10)

     தாயகம் (2)

     பாரிசான் (2)

     சுயேச்சை (1)

காலி (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
9 மே 2018
அடுத்த தேர்தல்
4 செப்டம்பர் 2023
கூடும் இடம்
விஸ்மா டாருல் அமான்
Wisma Darul Aman
அலோர் ஸ்டார், கெடா
வலைத்தளம்
mmk.kedah.gov.my

கெடா மாநில சட்டமன்றம் அல்லது கெடா சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Kedah; ஆங்கிலம்: Kedah State Legislative Assembly; சீனம்: 吉打州议会) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.[1]

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான கெடா மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். கெடா மாநில சட்டமன்றம் 36 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2]

கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் அமைந்துள்ள விஸ்மா டாருல் அமான் (Wisma Darul Aman) வளாகத்தில்; கெடா மாநிலப் பேரவை கூடுகிறது.

பொது

[தொகு]

கெடா மாநில சட்டமன்றம் கெடா மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

கெடா மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. கெடா மாநில சட்டமன்றம், மலாக்கா மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உரிமை

[தொகு]

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை கெடா சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை

[தொகு]

கெடா மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் சுகாரி புலாட் (Juhari Bulat).

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி முதலமைச்சர் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

கெடா வரலாறு

[தொகு]

கெடா மாநிலத்தின் வடக்கே, பெர்லிஸ் மாநிலம்; மற்றும் தாய்லாந்தின் சொங்க்லா (Songkhla) மாநிலம்; யாலா (Yala) மாநிலம்; தெற்கே பேராக் மாநிலம் மற்றும் தென்மேற்கில் பினாங்கு; ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது.

கெடா மாநிலத்தின் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). 'அமைதியின் வாழ்விடம்' என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. பொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது.

இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது. அதனால் தான் இந்த மாநிலத்தை 'மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம்' (Rice Bowl of Malaysia) என்று அன்பாக அழைக்கிறார்கள்.

மெர்போக் குடியேற்றம்

[தொகு]

கி.மு. 788-இல், கெடாவில் ஒரு பெரிய குடியேற்றத்திற்கான அரசாங்கம் மெர்போக் ஆற்றின் வடக்குக் கரையைச் சுற்றி நிறுவப்பட்டு உள்ளது. அந்தக் குடியேற்றம் பூஜாங் பள்ளத்தாக்கின் ஒரு பெரிய பகுதியைக் கொண்டு இருந்தது.

மெர்போக் ஆறு மற்றும் மூடா ஆறு ஆகிய இரு ஆறுகளின் படுகைகள், சுமார் 1000 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கியவை. குடியேற்றத்தின் தலைநகரம் மெர்போக் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இந்தப் பகுதி இப்போது சுங்கை பத்து என்று அழைக்கப்படுகிறது.[3]

அரசாங்கமும் அரசியலும்

[தொகு]

அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் சல்லேவுதீன் பாட்லிஷா என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 2017-ஆம் ஆண்டில் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.[4]

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.

தற்போதைய கெடா சட்டமன்றம் (2022)

[தொகு]
அரசு நம்பிக்கை ஆதரவு
பெரிக்காத்தான் பாக்காத்தான் தாயகம் பாரிசான் சுயேச்சை
21 10 2 2 1
15 6 5 3 2 2 2
பாஸ் பெர்சத்து பிகேஆர் அமாணா ஜசெக பெஜுவாங் அம்னோ சுயேச்சை

கெடா முதலமைச்சர்கள் பட்டியல்

[தொகு]
பொறுப்பு வகித்தவர்கள் பதவிக்காலம் அரசியல் இணைப்பு
முகமட் செரிப் ஒஸ்மான் 1948–1954 பாரிசான் நேசனல்
துங்கு இஸ்மாயில் பின் துங்கு யஹாயா 1954–1959 பாரிசான் நேசனல்
சையட் ஒமார் பின் சையட் அப்துல்லா சகாபுடின் 1959–1967 பாரிசான் நேசனல்
சையட் அகமட் பின் சகாபுடின் 1967–1978 பாரிசான் நேசனல்
சையட் நாகாட் பின் சையட் ஷே சகாபுடின் 1978–1985 பாரிசான் நேசனல்
ஹாஜி ஒஸ்மான் பின் ஹாஜி அரோப் 1985–1996 பாரிசான் நேசனல்
சனுசி ஜுனிட் 1996–1999 பாரிசான் நேசனல்
சையட் ரசாக் பின் சையட் சாயின் பராக்பா 1999–2005 பாரிசான் நேசனல்
டத்தோ ஹாஜி மாட்சிர் பின் காலிட் 2005–2008 பாரிசான் நேசனல்
அசிசான் அப்துல் ரசாக் 2008–2013 பாக்காத்தான் ராக்யாட்
முக்ரீஸ் மகாதிர் 2013–2016 பாரிசான் நேசனல்
அகமது பாஷா 2016–2018 பாரிசான் நேசனல்
முக்ரீஸ் மகாதிர் மே 2018–மே 2020 பாக்காத்தான் ஹரப்பான்
முகமட் சனுசி மே 2020–இன்று வரை பெரிக்காத்தான் நேசனல்

மேற்கோள்

[தொகு]
  1. "KEDAH STATE LEGISLATIVE ASSEMBLY". BERNAMA (in ஆங்கிலம்). 18 December 2022. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.
  2. "Kedah will maintain its stand not to dissolve the state legislative assembly before March next year despite the strong showing by Perikatan Nasional (PN) after winning 13 parliamentary seats in the state in the 15th general election (GE15).". Malaysiakini. 21 November 2022. https://www.malaysiakini.com/news/645102. பார்த்த நாள்: 18 December 2022. 
  3. "Sg Batu to be developed into archaeological hub". The Star. 3 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.
  4. "Enakmen Pentadbiran Undang-Undang Islam (Kedah Darul Aman) 2008 - Enakmen 5 Tahun 2008". www2.esyariah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடா_மாநில_சட்டமன்றம்&oldid=3628602" இலிருந்து மீள்விக்கப்பட்டது