உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்லிஸ் மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்லிஸ்
மாநில சட்டமன்றம்
Perlis State Legislative Assembly
Dewan Undangan Negeri Pahang
15-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
பெர்லிஸ் மாநில
சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1959
தலைமை
பெர்லிஸ் ராஜா சிராஜுடின்
(Tuanku Syed Sirajuddin Al-Marhum Tuanku Syed Putra Jamalullail)
17 ஏப்ரல் 2000 முதல்
ருஸ்லி எயிசான்
(Rus’sele Eizan), பெரிக்காத்தான்பாஸ்
19 டிசம்பர் 2022 முதல்
துணைப் பேரவைத் தலைவர்
(காலி)
14 அக்டோபர் 2022 (2022-10-14) முதல்
முகமட் சுக்ரி ராம்லி
(Mohd Shukri Ramli), பெரிக்காத்தான்பாஸ்
12 மே 2018 (2018-05-12) முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
கன் அய் லிங்
(Gan Ay Ling), பாக்காத்தான்பிகேஆர்
19 டிசம்பர் 2022 முதல்
செயலாளர்
மாவார் பிந்தி அவாங்
(Mawar binti Awang) [1]
2021 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்15
குறைவெண் வரம்பு:5
எளிய பெரும்பான்மை: 8
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 10
அரசியல் குழுக்கள்
ஆண்டு
23.11.2022

அரசாங்கம் (14)

எதிர்க்கட்சிகள் (1)

பேரவைத் தலைவர் (1)

     (non-MLA)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
19 நவம்பர் 2022
அடுத்த தேர்தல்
17 பிப்ரவரி 2028
கூடும் இடம்
Perlis State Assembly Complex, Kangar, Perlis
பெர்லிஸ் மாநில சட்டமன்ற வளாகம், கங்கார், பெர்லிஸ்
வலைத்தளம்
www.perlis.gov.my
பெர்லிஸ் மாநில சட்டமன்ற வளாகம்
தற்போதைய பெர்லிஸ் மாநில சட்டமன்றத் தொகுதிகள் (2022)

பெர்லிஸ் மாநில சட்டமன்றம் அல்லது பெர்லிஸ் சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Perlis; ஆங்கிலம்: Perlis State Legislative Assembly; சீனம்: 玻璃市州立法议会; ஜாவி: ديوان اوندڠن نڬري ڤرليس) என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான பெர்லிஸ் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். பெர்லிஸ் மாநிலச் சட்டமன்றம் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பெர்லிஸ், கங்கார் மாவட்டம், கங்கார் மாநகரில், பெர்லிஸ் மாநில சட்டமன்ற (Perlis State Assembly Complex) வளாகத்தில் பெர்லிஸ் மாநிலப் பேரவை கூடுகிறது.

சட்டமன்றத் தகவல்கள்

[தொகு]

பெர்லிஸ் மாநில சட்டமன்றம் பெர்லிஸ் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

பெர்லிஸ் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. பெர்லிஸ் மாநில சட்டமன்றம், பகாங் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உரிமை

[தொகு]

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை பெர்லிஸ் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை

[தொகு]

பெர்லிஸ் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்சமயம் பெரிக்காத்தான் கூட்டணி; பாஸ் கட்சியின் ருஸ்லி எயிசான் (Rus’sele Eizan) என்பவர் சபாநாயகராக உள்ளார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

பெர்லிஸ் புவியியல்

[தொகு]

பெர்லிஸ் அல்லது பெர்லிஸ் இந்திரா காயாங்கான் (ஆங்கிலம்: Perlis Indera Kayangan; மலாய்: Perlis Indera Kayangan) மலேசியாவின் மிகச் சிறிய மாநிலம். தீபகற்ப மலேசியாவின் ஆக வடப் பகுதியில் உள்ளது. தாய்லாந்தின் சாத்தூன் (Satun), சொங்காலா (Songkhla) மாநிலங்களுக்கு எல்லைப் பகுதியிலும் அமைந்து உள்ளது. தெற்கே கெடா மாநிலம் உள்ளது.

பெர்லிஸ் மாநிலம் சயாமியர்களின் ஆட்சியில் இருந்த போது பாலிட் (Palit) என்று அழைக்கப் பட்டது. பெர்லிஸ் மாநிலத் தலைநகரத்தின் பெயர் கங்கார் (Kangar). அரச நகரம் ஆராவ் (Arau). மலேசியத் தாய்லாந்து எல்லையில் இருக்கும் இன்னொரு முக்கிய நகரம் பாடாங் பெசார் (Padang Besar).

பெர்லிஸ் மாநிலத்தின் முக்கியத் துறைமுகமாக கோலா பெர்லிஸ் (Kuala Perlis) விளங்குகிறது. இந்தத் துறைமுகப் பட்டினம் லங்காவி தீவுடன் பெர்லிஸ் மாநிலத்தை இணைக்கின்றது.

பெர்லிஸ் மாநிலத்தில் கங்கார் மாவட்டம் எனும் பெயரில் ஒரு மாவட்ம் உள்ளது.

அரசாங்கமும் அரசியலும்

[தொகு]

அரசியல் சாசனப் படி பெர்லிஸ் ராஜா; பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். பெர்லிஸ் மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். பெர்லிஸ் மாநிலத்தில் இப்போது பெர்லிஸ் ராஜா துங்கு சிராஜுடின் (Tengku Hassanal Ibrahim Alam Shah) அரசராக உள்ளார்.

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) பெர்லிஸ் ராஜாவைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் 6 பேர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக (EXCO Member) உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் பெர்லிஸ் ராஜா நியமனம் செய்கின்றார்.

தற்போதைய பெர்லிஸ் சட்டமன்றம் (2022)

[தொகு]
பெரிக்காத்தான் பாக்காத்தான்
14 1
9 5 1
பாஸ் பெர்சத்து பிகேஆர்

மேற்கோள்

[தொகு]
  1. "Syed Omar SUK Perlis baru". 29 December 2017.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]