பினாங்கு மாநில சட்டமன்றம்
பினாங்கு மாநில சட்டமன்றம் Penang State Legislative Assembly Dewan Undangan Negeri Pulau Pinang | |
---|---|
14-ஆவது சட்டப் பேரவை | |
பினாங்கு மாநில சட்டமன்ற சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 11 சூலை 1959 |
தலைமை | |
அகமத் புசி அப்துல் ரசாக் (Ahmad Fuzi Abdul Razak) 1 மே 2021 முதல் | |
துணைப் பேரவைத் தலைவர் | |
செயலாளர் | மகேசுவரி மலையாண்டி (Maheswari Malayandy) 02.08.2018 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 40 குறைவெண் வரம்பு:13 எளிய பெரும்பான்மை: 21 மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 27 |
அரசியல் குழுக்கள் | ஆண்டு 14.05.2018 அரசாங்கம் (33) நம்பிக்கை மற்றும் வழங்கல் (2)
எதிர்க்கட்சிகள் (5) பேரவைத் தலைவர் (1) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 9 மே 2018 |
அடுத்த தேர்தல் | 2023 |
கூடும் இடம் | |
Penang State Assembly Building, Light Street, George Town, Penang பினாங்கு மாநில சட்டமன்ற வளாகம், ஜார்ஜ் டவுன், பினாங்கு | |
வலைத்தளம் | |
dun |
பினாங்கு மாநில சட்டமன்றம் அல்லது பினாங்கு சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Pulau Pinang; ஆங்கிலம்: Penang State Legislative Assembly; சீனம்: 槟州立法议会; ஜாவி: ديوان اوندڠن نڬري ڤولاو) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான பினாங்கு மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். பினாங்கு மாநிலச் சட்டமன்றம் 40 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில், பினாங்கு மாநில சட்டமன்ற (Perlis State Assembly Complex) வளாகத்தில் பினாங்கு மாநிலப் பேரவை கூடுகிறது.
சட்டமன்றத் தகவல்கள்
[தொகு]2018-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு பிறகு 40 இடங்களில் 33 இடங்களை பாக்காத்தான் (PH) கூட்டணி கைப்பற்றியது.
பாக்காத்தான் கூட்டணிக்குள், [[ஜனநாயக செயல் கட்சி (DAP) 19 இடங்களையும்; மக்கள் நீதிக் கட்சி (PKR) 12 இடங்களையும்; அமானா (AMANAH) 2 இடங்களையும் கைப்பற்றின. இதனால் பாக்காத்தான் கூட்டணி சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றது.
பினாங்கு மாநில சட்டமன்றம் பினாங்கு மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பினாங்கு மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. பினாங்கு மாநில சட்டமன்றம், பகாங் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் உரிமை
[தொகு]மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை பெர்லிஸ் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
சபாநாயகர் தலைமை
[தொகு]பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்சமயம் பாக்காத்தான் கூட்டணி; பிகேஆர் கட்சியின் லா சூ கியாங் (Law Choo Kiang) என்பவர் பினாங்கு சட்டமன்ற சபாநாயகராக உள்ளார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.
பினாங்கு புவியியல்
[தொகு]புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் பினாங்கு தீவு (Penang Island) மற்றும் செபராங் பிறை (Seberang Perai) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு தீவு
[தொகு]பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் சார்ச்சு டவுன் இங்குதான் உள்ளது. மொத்த மக்கள்தொகை 740,200.
செபராங் பிறை
[தொகு]செபராங் பிறை அல்லது அக்கரை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு கெடா மாநிலம், பேராக் மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள். இங்குதான் பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.
மாவட்டங்கள்
[தொகு]வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
[தொகு]மாநிலத்தின் தலைநகர் சார்ச்சு டவுன் இந்த வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் உள்ளது.
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
[தொகு]இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குதான் உள்ளது.
வட செபராங் பிறை மாவட்டம்
[தொகு]பட்டர்வொர்த் நகரம் இங்குதான் உள்ளது.
மத்திய செபராங் பிறை மாவட்டம்
[தொகு]பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.
தென் செபராங் பிறை மாவட்டம்
[தொகு]நிபோங் திபால், பத்து காவான் நகரங்கள் உள்ளன.
பொது
[தொகு]பினாங்கு மாநிலத்தின் பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தீவு; மாநிலத்தின் தலைநகர் சார்ச்சு டவுன் இங்குதான் உள்ளது.[1] இந்த நகரத்தில் ஏறக்குறைய 700,000 மக்கள் வசிக்கின்றனர். தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் 2.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். சார்ச்சு டவுன், மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அடுத்த மிகப்பெரிய நகரமாக உள்ளது.[2]
அக்கரை என்று அழைக்கப்படும் செபராங் பிறை; 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட தீபகற்ப மலேசியாவின் ஒரு பகுதிஉஆகும். இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு என மூன்று திசைகளிலும் கெடா மாநிலம் உள்ளது.பேராக் மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. செபராங் பிறையில் கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள்.
அடர்த்தியான மக்கள் தொகை
[தொகு]பினாங்கு மாநிலம் மலேசியாவில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது.[3] 2021-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தின் மக்கள்தொகை 1,774,400 எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. அனைத்து மலேசிய மாநிலங்களிலும் 3-ஆவது அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் பினாங்கு மாநிலம் மிகவும் நகர மயமாக்கப்பட்ட (Most Urbanised Malaysian States) மலேசிய மாநிலங்களில் ஒன்றாகுகவும் விளங்குகிறது. 2015-ஆம் ஆண்டில் நகர மயமாக்கல் நிலை 90.8%.[4]
பினாங்கு மாநிலத்தின் சிறப்பான பொருளாதாரம் காரணமாக, பினாங்கு மாநிலத்திற்கு மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.[5]
தற்போதைய பினாங்கு சட்டமன்றம் (2022)
[தொகு]அரசு | நம்பிக்கை ஆதரவு | எதிரணி | |||
பாக்காத்தான் | பாரிசான் | பெரிக்காத்தான் | |||
33 | 2 | 5 | |||
19 | 12 | 2 | 2 | 4 | 1 |
ஜசெக | பிகேஆர் | அமாணா | அம்னோ | பெர்சத்து | பாஸ் |
மேற்கோள்
[தொகு]- ↑ George Town is the capital of Penang. It was established by Captain Francis Light in 1786.
- ↑ "Current Population Estimates Malaysia, 2018". Department of Statistics Malaysia. July 2018. https://newss.statistics.gov.my/newss-portalx/ep/epFreeDownloadContentSearch.seam?cid=114401.
- ↑ "Massive projects in place to alleviate urbanisation in Penang". 2016-10-29. http://www.themalaymailonline.com/malaysia/article/massive-projects-in-place-to-alleviate-urbanisation-in-penang.
- ↑ Opalyn Mok (29 October 2016). "Massive projects in place to alleviate urbanisation in Penang". Malay Mail. http://www.themalaymailonline.com/malaysia/article/massive-projects-in-place-to-alleviate-urbanisation-in-penang.
- ↑ "Migration report: Selangor, Penang most popular with locals" (in en-US). Free Malaysia Today. 30 May 2017. http://www.freemalaysiatoday.com/category/nation/2017/05/30/migration-report-selangor-penang-most-popular-with-locals/.