பாகெலாலான்

ஆள்கூறுகள்: 3°59′44″N 115°37′21″E / 3.99556°N 115.62250°E / 3.99556; 115.62250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகெலாலான் நகரம்
Ba'kelalan Town
சரவாக்
பாகெலாலான் வயல்காடுகள்
பாகெலாலான் வயல்காடுகள்
பாகெலாலான் நகரம் is located in மலேசியா
பாகெலாலான் நகரம்
பாகெலாலான் நகரம்
ஆள்கூறுகள்: 3°59′44″N 115°37′21″E / 3.99556°N 115.62250°E / 3.99556; 115.62250
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுலிம்பாங் பிரிவு
மாவட்டம்லாவாஸ் மாவட்டம்
அரசு
 • பெங்குலு (Penghulu)ஜார்ஜ் சிகார் சுல்தான் (George Sigar Sultan)[1]
ஏற்றம்910 m (2,990 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,030
மலேசிய அஞ்சல் குறியீடு98xxx

பாகெலாலான் (மலாய் மொழி: Ba'kelalan; ஆங்கிலம்: Ba'kelalan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு, லாவாஸ் மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமங்களின் குழுமமாகும்.

இந்தக் கிராமக் குழுமம் மலிகான் பீட பூமியில் (Maligan Highlands); கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி (910 மீ) உயரத்தில் உள்ளது. இந்தோனேசியா கலிமந்தான் எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும்; சரவாக் லாவாஸ் நகரத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[2]

பாகெலாலானில் ஒன்பது கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் லுன் பாவாங் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

பொது[தொகு]

பாகெலாலான் எனும் பெயர் கெலாலான் நதியின் (Kelalan River) பெயரில் இருந்து உருவானது. ’பா’ எனும் முன்சொல் லுன் பவாங் மொழியில் ஈரமான நிலங்கள் என்று பொருள். இரண்டும் சேர்ந்து பாகெலாலான் என்று ஓர் இடத்தின் பெயரானாது.[3]

குளிர்ந்த மலைக் காலநிலையில், இங்கு ஆப்பிள், மாண்டரின் ஆரஞ்சு போன்ற பழ மரங்கள் வளர்க்கப் படுகின்றன. இங்கு அரிசியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் மலை உப்பு அருகிலுள்ள மலைகளில் இருந்து கிடைக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.[3][4]

நிர்வாக அமைப்பு[தொகு]

மலிகான் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாகெலாலான் ஒன்பது கிராமங்கள்:[5]

  • பூடுக் நூர் - Buduk Nur
  • லோங் லங்காய் - Long Langai
  • லோங் லெமுமுட் - Long Lemumut
  • லோங் ரிட்டான் - Long Ritan
  • லோங் ருசு - Long Rusu
  • பா தாவிங் - Pa Tawing
  • பூடுக் புய் - Buduk Bui
  • பூடுக் அரு - Buduk Aru
  • லோங் ரங்காட் - Long Ranga

ஒரு கிராமம் என்பது தனித்தனி வீடுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அரசாங்க நியமனத்தால் தலைவர் பதவி உருவாக்கப்படுகிறது. அவருக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஒரு தலைவர் கிராமத்தின் பொதுவான விவகாரங்களைக் கையாள வேண்டும். மற்றும் ஒன்பது கிராமங்களின் விவகாரங்களை மேற்பார்வையிட ஒரு பிராந்திய தலைவர் அல்லது பெங்குலு உள்ளார். கிராம மக்களின் மேம்பாடு மற்றும் பூர்வீக மக்களின் வழக்குகளைக் கையாள்வது; இவை போன்ற விசயங்களைப் பற்றி விவாதிக்க அவர் வருடத்திற்கு இரண்டு முறை வருவார்.[6]

பாகெலாலான் வானூர்தி நிலையம்[தொகு]

பாகெலாலானில் ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. அதன் பெயர் பாகெலாலான் வானூர்தி நிலையம். 19 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பாகெலாலான் வயல் காடுகள்[தொகு]

பாகெலாலான் வயல் காடுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Davidson, Desmond (1 May 2017). "Ba Kelalan villagers choke off trade route to punish Indonesians". The Malaysian Insight இம் மூலத்தில் இருந்து 18 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170918232516/https://www.themalaysianinsight.com/s/2392/. 
  2. Cecilia, Sman (31 December 2013). "Ba Kelalan ready to flaunt its rich treasures for VMY 2014". The Borneo Post இம் மூலத்தில் இருந்து 1 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180701074848/https://www.theborneopost.com/2013/12/31/ba-kelalan-ready-to-flaunt-its-rich-treasures-for-vmy-2014/. 
  3. 3.0 3.1 "About 1000 meters above sea level is the village of Ba'kelalan, located deep in the Kelabit Highlands of north eastern Sarawak Borneo. A total of nine villages are found spread out in the Maligan Highlands which is home to the ethnic Lun Bawang people here". Visit Sarawak 2022 #BounceBackBetter. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 21 May 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Aussie's burning love for Sarawak". New Straits Times. 29 August 1988. https://news.google.com/newspapers?nid=1309&dat=19880829&id=01lPAAAAIBAJ&pg=2958,3333469&hl=en. 
  5. "A friendly affair in Ba'kelalan". பார்க்கப்பட்ட நாள் 21 May 2022.
  6. Baru, Bian; Deborah, Loh (2014) (in en). The Long Awakening. Kuching, Sarawak: Baru Bian. பக். 9, 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-12316-0-9. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகெலாலான்&oldid=3644974" இலிருந்து மீள்விக்கப்பட்டது