உள்ளடக்கத்துக்குச் செல்

கஜா மடா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஜா மடா பல்கலைக்கழகம்
Universitas Gadjah Mada
வகைஅரச பல்கலைக்கழகம்
உருவாக்கம்1949
தலைமை ஆசிரியர்Prof. Ir. Dwikorita Karnawati[1]
பட்ட மாணவர்கள்30,638 (2011 வாக்கில்)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்7,600 (2011 வாக்கில்)
அமைவிடம்
யோக்கியொகார்த்தா (முதன்மை வளாகம்) மற்றும் ஜகார்த்தா
,
வளாகம்Urban, 882 acres (357 ha)
Students82,394 (2011 தரவு)
நிறங்கள்Light khaki     
சேர்ப்புASAIHL, AUN, AACSB Accredited, ASEA UNINET[2]
இணையதளம்www.ugm.ac.id/new/en

கஜா மடா பல்கலைக்கழகம் (இந்தோனேசியம்: Universitas Gadjah Mada; (UGM) என்பது இந்தோனேசியா, யோக்யகர்த்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இது 19 டிசம்பர் 1949-இல் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.[4] இதன் முதல் விரிவுரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 13 மார்ச் 1946 இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தோனேசியாவில் உள்ள பழமையானதும் பெரியதுமான உயர் கல்வி நிறுவனம் ஆகும்.[5][6][7]

18 பீடங்கள்[8] மற்றும் 27 ஆராய்ச்சி மையங்கள் [9] உள்ளடக்கியதான கட்ஜா மடா பல்கலைக்கழகத்தில் 68 இளமாணிப் பட்டங்களும் 23 பட்டயக் கற்கைகளும், 104 முதுமாணி மற்றும் சிறப்புப் பட்டங்களும்,43 முனைவர் ஆய்வு கற்கைகளும், சமூக அறிவியல் முதல் பொறியியல் வரை பல்வேறு பாடப்பிரிவுகளில் வழங்குகிறது. பல்கலைக்கழகம் ஏறத்தாழ 55,000 உள்ளூர் மாணவர்கள், 1,187 வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவதுடன் 2,500 பீட உறுப்பினர்களையும் கொண்டிள்ளது. பல்கலைக்கழகம் 360 ஏக்கர் (150 ஹெக்டேர்) நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன்[10] அரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.[11]

வரலாறு

[தொகு]

கட்ஜா மடா பல்கலைக்கழகம் இந்தோனேசியாவின் முதல் அரச பல்கலைக்கழகமாகும். இது இந்தோனேசியா சுதந்திரத்தின் மூன்று வயது நிலையில் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது குடியரசு கட்டுப்பாட்டை மீண்டும் விரும்பிய நெதர்லாந்து, இதனை அச்சுறுத்தல் செய்த சூழலில் இது நிறுவப்பட்டது. அப்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து யோகியகார்த்தாவுக்கு மாற்றமடைந்தது.[12]

நிறுவிய போது, இப்பல்கலைக் கழகத்தில் ஆறு பீடங்கள் இருந்தன: மருத்துவம், பற்சிகிச்சை, மற்றும் மருந்தாக்கவியல்; சட்டம், சமூக மற்றும் அரசறிவியல், பொறியியல்; இலக்கியம், கல்வித்துறை மற்றும் தத்துவம்; விவசாயம்; மற்றும் கால்நடை மருத்துவம்.

பல்கலைக்கழக துறைகள்

[தொகு]

பல்கலைக்கழக நிர்வாகம் 18 துறைகளாக பல்வேறு பட்ட, பட்டப்பின் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது. ஒருங்கிணைந்த பட்டதாரிகள் பள்ளி இதற்கு மேலதிகமாக கற்கைகளை வழங்க தொழில் பயிற்சி பள்ளி தொழில்சார் கற்கைகளை வழங்குகின்றது.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MWA Tetapkan Dwikorita Sebagai Rektor UGM 2014-2017". Universitas Gadjah Mada (in Indonesian). 22 November 2014. Archived from the original on 18 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 November 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Members - ASEA-UNINET". Uibk.ac.at. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  3. "Meaning of the Symbol". Universitas Gadjah Mada. 22 August 2013. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  4. "Gadjah Mada University brief history". Ugm.ac.id. 19 December 1949. பார்க்கப்பட்ட நாள் 26 February 2013.
  5. "707 Siswa Pandai Tapi Tak Mampu Lulus SPMB" (online archive in Indonesian). Sinar Indonesia Baru. 6 August 2006 இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200915053531/http://www.hariansib.com/content/view/10396/48/. பார்த்த நாள்: 2 November 2006. 
  6. "Mencermati Peringkat Nilai Hasil Seleksi Penerimaan Mahasiswa Baru (SPMB) 2004" (online archive in Indonesian). Harian Jawa Pos. 13 August 2004. http://jawapos.co.id/index.php?act=detail_c&id=124161. பார்த்த நாள்: 2 November 2006. 
  7. "Universitas Gadjah Mada". Asean University Network. 18 April 2010 இம் மூலத்தில் இருந்து 30 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120830150945/http://www.aunsec.org/site/main/web/index.php?option=com_content&view=article&id=10%3Auniversitas-gadjah-mada-&catid=66%3Auniversitas-gadjah-mada-&Itemid=6&lang=en. பார்த்த நாள்: 11 July 2012. 
  8. "Faculty". Universitas Gadjah Mada. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  9. "Research and Community Service". Universitas Gadjah Mada. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  10. "Introducing UGM". Universitas Gadjah Mada. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  11. "Campus Map". Universitas Gadjah Mada. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  12. Suwarni; Santoso, Heri (2009). 60 Tahun Sumbangsih UGM Bagi Bangsa [60 Years of Contributions by UGM to the Nation] (in Indonesian). Yogyakarta: Universitas Gadjah Mada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-420-089-6.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  13. "Vocational School". Universitas Gadjah Mada. 2013. பார்க்கப்பட்ட நாள் 10 November 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜா_மடா_பல்கலைக்கழகம்&oldid=3899956" இலிருந்து மீள்விக்கப்பட்டது