சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 1°17′44″N 103°46′36″E / 1.29556°N 103.77667°E / 1.29556; 103.77667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
National University of Singapore, Universiti Kebangsaan Singapura, 新加坡国立大学, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
NUS coat of arms.png
பல்கலைக்கழகத்தின் சின்னம்
வகைதேசியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1905 (1905)
நிதிக் கொடைசிங்கப்பூர் வெள்ளி 1.812 பில்லியன் (அமெரிக்க டாலரில் $1.48 பில்லியன்)[1]
வேந்தர்டோனி தன்
தலைவர்தன் சோர் சுவாங்
கல்வி பணியாளர்
2,402[2]
பட்ட மாணவர்கள்26,418[2]
அமைவிடம்
சிங்கப்பூர்
,
1°17′44″N 103°46′36″E / 1.29556°N 103.77667°E / 1.29556; 103.77667
நிறங்கள்        
இணையதளம்www.nus.edu.sg
NationalUniversityofSingapore.svg

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (National University of Singapore) என்பது மாணவர் தொகை அடிப்படையில் சிங்கப்பூரின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இது சிங்கப்பூர் நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

பல்கலைக்கழகத்தின் பண்பாட்டுக் கூடம்

புக்கிட் திமா வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு இயங்குகிறது. லீ குவான் யீ வளாகத்தில் பொதுக் கொள்கைப் பள்ளியும் ஆராய்ச்சி நிலையங்களும் அமைந்துள்ளன. டியூக் மருத்துவக் கல்லூரி அவுற்றாம் வளாகத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் அதிபர் டோனி பிளேர், தன் பிளேர் அறக்கட்டளை சார்பாக வழங்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு, இப்பல்கலைக்கழகத்தை ஆசிய நம்பிக்கையின் தலைமையகமாகக் கருதினார். ஐக்கிய ராச்சியத்தின் டுராம் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் இத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டன. [4].. 2012ஆம் ஆண்டில், இப்பல்கலைக்கழகம் உலகின் 25வது சிறந்த பல்கலைக்கழகம் எனவும், ஆசியாவில் இரண்டாவது எனவும் தெரிவித்துள்ளது ஆய்வொன்று. [5] 1980ஆம் ஆண்டில், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தையும், நான்யாங் பல்கலைக்கழகத்தையும் இணைத்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இரு பல்கலைக்கழகங்களின் வளங்களையும் இணைத்து ஆங்கிலத்தை சிங்கப்பூரின் முதன்மை மொழியாக்கும் சிங்கப்பூர் அரசின் எண்ணத்தின் வெளிப்பாடே இப்பல்கலைக்கழகம். நான்யாங் பல்கலைக்கழகத்தின் சின்னத்தில் இருந்த மூன்று பின்னிப் பிணைந்த வளையங்கள் இப்பல்கலைக்கழகத்தின் சின்னத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [6]

வரலாறு[தொகு]

1904 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், டான் ஜியக் கிம் தலைமையிலான சீனர்கள் கொண்ட குழுவினர், அப்பகுதியின் தலைவரான யோவான் ஆண்டர்சனிடம், சிங்கப்பூரில் மருத்துவக் கல்லூரியில் முறையிட்டனர். [7] இப்பகுதியின் சீன பிரித்தானியக் கூட்டமைப்பின் தலைவராயிருந்த டான், மொத்தமாக $87,077 பணம் வழங்கினார். இதில் இவரது பங்கு $12,000. 1905, யூலை 3 ஆம் ஆம் நாளில் Straits Settlements and Federated Malay States Government Medical School என்ற பெயரில் மருத்துவப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

1912 ஆம் ஆண்டில், இதற்கு லிம் பூன் கெங் என்பவரால் தொடங்கப்பட்ட அரசர் ஏழாவது எட்வர்டு நினைவு நிதியாக $120,000 வழங்கப்பட்டது. பின்னர் இப்பள்ளியின் பெயர் அரசர் ஏழாவது எட்வர்டு மருத்துவப் பள்ளி என மாற்றப்பட்டது. 1921 இல், அரசர் ஏழாவது எட்வர்டு மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1928 இல், [8], மலாய மாணவர்களுக்கு கலை மற்றும் சமூகவியலைப் பயிற்றுவிக்க ரபிள்சு கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகம் நிறுவல்[தொகு]

1949 ஆம் ஆண்டில், அக்டோபர் 8 ஆம் நாளில், அரசர் ஏழாவது எட்வர்டு மருத்துவக் கல்லூரியும், ரபிள்சு கல்லூரியும் இணைக்கப்பட்டு மலாயப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. மலாயக் கூட்டமைப்பிற்கும் சிங்கப்பூரிற்கும் உயர்நிலைக் கல்வி வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டது. இதன் அதீத வளர்ச்சியால், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தனித்தனி வளாகங்கள் நிறுவப்பட்டன. 1960 இல் அப்போதைய மலாயக் கூட்டமைப்பின் அரசு, இதை தேசியப் பல்கலைக்கழகமாக்க வேண்டியது.[9]. 1961 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் இருந்த பல்கலைக்கழகம் மலாயப் பல்கலைக்கழகம் எனவும், 1962 ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் இருந்த பல்கலைக்கழகம் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் எனவும் பெயர் மாற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

\== கல்விமுறை == அரையாண்டு பாடத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது பிரித்தானிய முறையான சிறு குழுக்களாக கற்கும் முறையையும், அமெரிக்க முறையான பாடத்திட்ட மதிப்பெண்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது. மாணவர்கள் முதல் இரண்டு அரையாண்டுகளுக்கு மாற்று துறையைச் சேர்ந்த பாடங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம். குறிப்பிடத்தக்கதாக, கலையும் சட்டமும், சட்டமும் வியாபாரமும், அறிவியலும் வியாபாரமும் என்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவற்றைக் கொள்ளலாம்.

இது சீனா, இந்தியா, இசுரயேல், சுவூடன், அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளிலும் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. [10]

துறைகள்[தொகு]

பொறியியல்[தொகு]

பொறியியல் துறை

பொறியியற் துறை 1968 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பெரிய துறை இதுவே. உலகின் முன்னணிக் கல்வியகங்களில் இதுவும் ஒன்று இத்துறையின் பிரிவுகள் அனைத்தும் தர மதிப்பீட்டில் முன்னணி இடம் பிடித்துள்ளன. இத்துறை கீழ்க்காணும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது. [11]

  1. உயிரிப்பொறியியல்
  2. வேதிப்பொறியியல்
  3. குடிமைப் பொறியியல்
  4. கணிப் பொறியியல்
  5. மின்பொறியியல்
  6. பொறி அறிவியல்
  7. சுற்றுச்சூழலியலும் பொறியியலும்
  8. தொழிற்கூடமும் அமைப்புப் பொறியியலும்
  9. பொருளறிவியலும் பொறியியலும்
  10. இயந்திரவியல்

வசதிகள்[தொகு]

நூலகம்[தொகு]

இப்பல்கலைக்கழகம் ஏழு நூலகங்களை ஒருங்கே கொண்டது. அவை மைய நூலகம், சீன நூலகம், சிஜே கோ சட்ட நூலகம், ஃகொன் சுய் சென் நினைவு நூலகம், இசை நூலகம், அறிவியல் நூலகம், மருத்துவ நூலகம் ஆகியன. இவற்றை ஆசிரியர்களும், மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள நூல்கள் கட்டிடக் கலை, வியாபாரம், பல்மருத்துவம், கணிப்பொறியியல், மனிதவியல், சமூகவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், இசை தொடர்பானவை. 2010 சூன் கணக்கின்படி, பத்தரை லட்சம் நூல்கள் இங்குள்ளன.[12] in the collection.[13]. மின்னூல்களையும் ஒலிக்கோப்புகளையும் எந்நேரமும் இணைய வழியில் பயன்படுத்திக் கொள்ள நூலகத்தின் வலைவாசல் உள்ளது.

முன்னாள் மாணவர்கள்[தொகு]

1905 ஆம் ஆண்டிலிருந்து பல திறமை வாய்ந்த நபர்களை இப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. நான்கு சிங்கப்பூர் அதிபர்களும், இரண்டு மலேசிய அதிபர்களும், முக்கிய அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், நிறுவன மேலாளர்கள் உட்பட்டோரும் அடங்குவர். அப்துல் ரசாக் ஹுசேன், பெஞ்சமின் சியாரிசு, கோ சோக் டோங், லீ குவான் யீ, மகதிர் மொகமது, செல்லப்பன் ராமநாதன் ஆகியோர் சிங்கப்பூர் அதிபர்களாவர். ரயிசு யத்திம் மலேசிய தொலைத்தொடர்பு, பண்பாட்டு அமைச்சராவார். ங் எங் என் சிங்கப்பூரின் தற்போதைய இராணுவ அமைச்சராவார். சிங்கப்பூர் வர்த்தகம், சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் தலைவர் சீவ் சூன் செங், டெமாசெக் ஓல்டிங்க்சின் தலைவர் ஓ சிங், ஐபிளக்சு குழுமத்தின் தலைவர் ஒலிவியா லும் ஆகியோரும் இங்கே பயின்றவர்களே. உலக நல அமைப்பின் தலைவர் மார்கரெட் சான், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவர்களான கிசோர் மகபூபானி மற்றும் செயக்குமார், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவர் இங் செர் மியங் ஆகியோரும் இங்கு பயின்றவர்களே.

மேற்கோள்கள்[தொகு]

  1. "STATEMENTS OF FINANCIAL POSITION AS AT 31 MARCH 2011". National University of Singapore. 22 August 2011.
  2. 2.0 2.1 2.2 "NUS – National University of Singapore – Facts and Figures". National University of Singapore. 24 யூலை 2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. National University of Singapore – Facts & Figures (http://www.nus.edu.sg/aboutus/factsfigures.php)
  4. "Universities | The Tony Blair Faith Foundation". 2009-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-29 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.topuniversities.com/university-rankings/world-university-rankings/2012
  6. "Milestones". National University of Singapore. 15 அக்டோபர் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
  7. "National University of Singapore: A Brief Chronological History". 2016-06-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-03 அன்று பார்க்கப்பட்டது.
  8. National University of Singapore website – Milestones
  9. "National University of Singapore: A Brief Chronological History". 2016-06-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-03 அன்று பார்க்கப்பட்டது.
  10. National University of Singapore website – Faculties and Schools (http://www.nus.edu.sg/aboutus/facultyschools.php)
  11. [1]
  12. National University of Singapore – NUS Libraries – Statistics (http://libportal.nus.edu.sg/frontend/web/about-nus-libraries/statistics/library-statistics-2009-2010 பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம்)
  13. "Library Statistics 2007/2008". Lib.nus.edu.sg. 29 July 2010. 22 ஜூலை 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 செப்டெம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]