மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக நுழைவாயில் | |
முந்தைய பெயர் | Tun Hussein Onn Institute of Technology |
---|---|
குறிக்கோளுரை | விவேகத்துடன் முன்னேறுவோம் (With Wisdom, We Explore)(Dengan Hikmah Kita Meneroka)[1] |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | செப்டம்பர் 16, 2001 |
வேந்தர் | துங்கு இசுமாயில் சுல்தான் இப்ராகிம் |
துணை வேந்தர் | ருசாயிரி அப்துல் ரகீம் (Prof. Ts. Dr. Ruzairi bin Abdul Rahim) |
மாணவர்கள் | 19,421 (February 2022)[2] |
அமைவிடம் | , 1°51′11″N 103°05′11″E / 1.85306°N 103.08639°E |
வளாகம் | பல வளாகங்கள் |
நிறங்கள் | சிவப்பு, நீலம், வெள்ளி |
சேர்ப்பு | தென்கிழக்காசிய உயர்க்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு |
இணையதளம் | www |
1.853056, 103.086389
மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Tun Hussein Onn University of Malaysia; மலாய்: Universiti Tun Hussein Onn Malaysia) (UTHM) என்பது மலேசியா, ஜொகூர், பத்து பகாட், பாரிட் ஜாவா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.
தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் துன் உசேன் ஓன் தொழில்நுட்பக் கழகம் (ஆங்கிலம்:(Tun Hussein Onn Institute of Technology; மலாய்: Institut Teknologi Tun Hussein Onn) (ITTHO) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் அதன் பெயர் துன் உசேன் ஓன் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (ஆங்கிலம்:(Tun Hussein Onn University College of Technology; மலாய்: Kolej Universiti Teknologi Tun Hussein Onn) (KITTHO) என மாற்ரப்பட்டது.
பொது
[தொகு]இந்தப் பல்கலைக்கழகம் 2007-ஆம் ஆண்டில், முழு பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது. மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் என்ற பெயர் அப்போதைய மலேசிய கல்வி அமைச்சர் இசாமுடின் உசேன் அவர்களால் அதிகாரப்பூர்வமாகச் சூட்டப்பட்டது. மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் (Malaysian Technical University Network) (MTUN) ஓர் உறுப்பினராகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]16 செப்டம்பர் 1993-இல் மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் வரலாறு தொடங்கியது. மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் முன்பு பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம் (Polytechnic Staff Training Center) என அழைக்கப்பட்டது.
பல்வேறு பொறியியல் துறைகளில் பல்நுட்பியல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளிப்பதே அந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். அந்தப் பயிற்சி மையத்தை மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய கல்வி அமைச்சு ஆகிய இரு கல்விசார் அமைப்புகளும் கூட்டாக நிர்வகித்தன.
பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம்
[தொகு]மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம்; துன் உசேன் ஓன் தொழில்நுட்பக் கழகம் என மேம்படுத்தப்பட்டது. 27 செப்டம்பர் 2000 அன்று, மலேசிய அரசாங்கம் அந்தக் கழகத்திற்கு ஒரு பல்கலைக்கழக-கல்லூரி தகுதிய வழங்க ஒப்புக்கொண்டபோது, அந்தக் கழகம் மற்றொரு மைல்கல்லை எட்டியது.
அதன் பெயர் துன் உசேன் ஓன் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (Kolej Universiti Teknologi Tun Hussein Onn) (KITTHO) என மாற்றம் கண்டது. மலேசிய அரசாங்கம், 20 செப்டம்பர் 2006 அன்று, பல்கலைக்கழகக் கல்லூரிக்கு முழு பல்கலைக்கழகத் தகுதியை வழங்க ஒப்புக்கொண்டது. மற்றும் அதன் பெயரை மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் என மாற்றுவதற்கும் ஒப்புதல் வழங்கியது.[3]
பெயர் மாற்றங்கள்
[தொகு]- பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம் - (Pusat Latihan Politeknik) (PLSP) - 1993
- துன் உசேன் ஓன் தொழில்நுட்பக் கழகம் - (Institut Teknologi Tun Hussein Onn) (ITTHO) - 1996
- துன் உசேன் ஓன் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி - (Kolej Universiti Teknologi Tun Hussein Onn) (KUiTTHO) - 2000
- துன் உசேன் ஓன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - (Universiti Tun Hussein Onn Malaysia) (UTHM) - 2007
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
[தொகு]- மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (UTeM)
- மலேசிய பகாங் பல்கலைக்கழகம் (UMP)
- மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் (UniMAP)
தரவரிசைகள்
[தொகு]ஆண்டு | தரநிலை | மதிப்பீட்டாளர் |
---|---|---|
2012 | 251-300 | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2013 | 251-300 | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2014 | 251-300 | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2015 | 251-300[4] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
காட்சியகம்
[தொகு]-
பல்கலைக்கழக துன் அமினா நூலகம்
-
பல்கலைக்கழக நுழைவாயில்
-
துங்கு மக்கோத்தா அரங்கம்
-
பல்கலைக்கழகப் பள்ளிவாசல்
-
சுல்தான் இப்ராகிம் அரங்கம்
-
பல்கலைக்கழக மருத்துவமனை
-
பல்கலைக்கழக ஏரி
-
துன் டாக்டர் இசுமாயில் தங்கு விடுதி
-
பல்கலைக்கழக விளையாட்டு அரங்கம்
-
தொழில்நுட்பக் கல்வி வளாகம்
-
வணிக தொழில்நுட்பக் கல்வி வளாகம்
-
தொழில்நுட்பக் கல்வி வளாகம் 2
-
மின்னியல் மின்னணுவியல் வளாகம்
-
கணினித் தொழில்நுட்ப வளாகம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Corproate Profile". Universiti Tun Hussein Onn Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
- ↑ "Corporate Profile". Universiti Tun Hussein Onn Malaysia (UTHM). பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
- ↑ "History of UTHM" பரணிடப்பட்டது 5 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் UTHM official website
- ↑ "Universiti Tun Hussein Onn Malaysia". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 17 September 2015.