தென்கிழக்காசிய உயர்க்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு
தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பு (மலாய்:Persatuan Institusi Penyelidikan Tinggi Asia Tenggara; ஆங்கிலம்:Association of Southeast Asian Institutions of Higher Learning என்பது ஓர் அரசு சாரா கூட்டமைப்பு ஆகும்.
தென்கிழக்காசியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், தங்களின் சொந்த முயற்சிகளின் மூலமாக ஆராய்ச்சிகள் செய்வது; கற்பித்தல் மற்றும் பொதுச் சேவைகளில் தனித்துவத்தை அடைவது; தங்களுக்குள் உதவிகள் செய்து கொள்வது; போன்ற கல்விசார் திட்டங்களுக்காக, 1955 சனவரி மாதம் தாய்லாந்து, பாங்காக் மாநகரில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு ஆகும்.[1]
இந்தக் கூட்டமைப்பு, தென்கிழக்காசியாவின் பழமையான பிராந்திய அமைப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாங்காக் சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் நின்னாட் ஓலன்வொரவுத் என்பவர் ஆவார்.[2]
உறுப்பினர்கள்
[தொகு]2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பில் 25 நாடுகளைச் சார்ந்த 246 கல்வி நிறுவனங்கள் உறுப்பியம் பெற்றுள்ளன.[3]
நாடு | கல்விக் கழகங்களின் எண்ணிக்கை |
---|---|
புரூணை | 1 |
கம்போடியா | 5 |
பிரான்சு | 3 |
ஆங்காங் | 9 |
இந்தியா | 1 |
இந்தோனேசியா | 41 |
ஈரான் | 24 |
மலேசியா | 22 |
மியான்மர் | 1 |
பிலிப்பீன்சு | 48 |
போலந்து | 1 |
சிங்கப்பூர் | 2 |
இலங்கை | 3 |
தாய்லாந்து | 40 |
வியட்நாம் | 2 |
கிழக்கு தீமோர் | 1 |
ஆஸ்திரேலியா | 18 |
பெல்ஜியம் | 1 |
கனடா | 2 |
ஜப்பான் | 5 |
நியூசிலாந்து | 5 |
தைவான் | 1 |
ஐக்கிய இராச்சியம் | 1 |
அமெரிக்கா | 7 |
தோற்றுநர்கள்
[தொகு]- சர் நிக்கலஸ் அத்திகேல், இலங்கைப் பல்கலைக்கழகம்
- மார்சல் முனி எம். விஜயந்த் ரங்சரிசட், சுலலாங்கோர்ன் பல்கலைக்கழகம்
- லின்ட்சே ரைட், ஆங்காங் பல்கலைக்கழகம்
- பாடர் ஜோன், இந்தோனேசியப் பல்கலைக்கழகம்
- சர் சிட்னி கெய்ன், மலாயா பல்கலைக்கழகம்
- விடல் ஏ. டான், பிலிப்பீன்சு பல்கலைக்கழகம்
- இத்தின் அவுங், யங்கோன் பல்கலைக்கழகம்
- நுவேன் குவாங் திரின், வியட்நாம் தேசிய பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Association of Southeast Asian Institutions of Higher Learning (ASAIHL)". Union of International Associations (UIA). பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
- ↑ "Contact US". Association of Southeast Asian Institutions of Higher Learning (ASAIHL). பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
- ↑ "ASAIHL Members". ASAIHL. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.