உள்ளடக்கத்துக்குச் செல்

செரி கெம்பாங்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரி கெம்பாங்கான்
Seri Kembangan
Map
செரி கெம்பாங்கான் is located in மலேசியா
செரி கெம்பாங்கான்
      செரி கெம்பாங்கான்
ஆள்கூறுகள்: 3°00′57″N 101°42′02″E / 3.01583°N 101.70056°E / 3.01583; 101.70056
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
நகராண்மைசுபாங் ஜெயா மாநகராட்சி
அரசு
 • தலைவர்நோர் இசாம் அகமட் டலான்
 • நாடாளுமன்ற உறுப்பினர்இயான் யோங் இயான் வா (ஜ.செ.க) - பூச்சோங்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
43300
தொலைபேசி எண்கள்+6-03-89
போக்குவரத்துப் பதிவெண்கள்B

செரி கெம்பாங்கான் (ஆங்கிலம்: Seri Kembangan; மலாய்: Seri Kembangan; சீனம்: 沙登) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். ஒரு கிராமமாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.

முன்பு செர்டாங் அல்லது செர்டாங் புதுக் கிராமம் (ஆங்கிலம்: Serdang அல்லது Serdang New Village) என்று அழைக்கப்பட்டது. இது வடக்கு-தெற்கு விரைவுசாலை (தெற்குப் பாதை) வடக்கு முனையில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

1950-ஆம் ஆண்டில் செரி கெம்பாங்கான் ஒரு புதிய கிராமமாகச் செர்டாங் எனும் பெயரில் நிறுவப்பட்டது. அப்போது நாட்டில் மலாயா கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல் இருந்தது.[1]

அதன் காரணமாக கோலாலம்பூர் சுங்கை பீசி பகுதியில் வசித்த வந்த மலேசிய சீனக் கிராம மக்கள் ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப் பட்டனர். மலாயா அவசரகாலத்தின் போது அமல்படுத்தப்பட்ட பிரிக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செர்டாங் புதுக்கிராமம் நிறுவப்பட்டது.[2][3]

செர்டாங் கிராமப் பகுதி

[தொகு]

செர்டாங் கிராமத்தின் தொடக்கக்கால நாட்களில், அந்தக் கிராமத்தில் 50 வீடுகள் மட்டுமே இருந்தன. அனைத்தும் வீடுகளும் புதிதாக கட்டப்பட்டவை. ஏனெனில் பிரித்தானியர்கள் வெற்று நிலங்களை மட்டுமே வழங்கி இருந்தார்கள்.

செர்டாங் கிராமப் பகுதி காடுகள் மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு மையத்தில் இருந்தது. அடிக்கடி ஆபத்துகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் அங்கு வாழ்ந்த 15,000 மக்களில் பெரும்பாலோர் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ரப்பர் மரம் சீவுபவர்கள். சொற்ப வருமானத்தைப் பெற்றனர்.

ஒரு கட்டத்தில், ஸ்ரீ கெம்பாங்கன் புதுக் கிராமம், காலணி தயாரித்தல் போன்ற குடிசைத் தொழில்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. 1950 - 1970-ஆம் ஆண்டுகளில் வரை செர்டாங் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் ஒரே பொழுதுபோக்கு வடிவமாக சினிமா மட்டுமே இருந்தது.

அரசு ஊழியர்கள்

[தொகு]

செர்டாங் கிராமத்தில் இப்போது 2,500 வீடுகள் உள்ளன. அவற்றில் அசல் மர வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன, மக்கள் தொகை 150,000 என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் தொழில்முனைவோர், வணிகர்கள், தொழில் வல்லுநர்கள், புத்ராஜெயாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் சைபர்ஜெயாவில் உள்ள பிற பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகும்.

காலநிலை

[தொகு]

ஸ்ரீ கெம்பாங்கான் நகர்ப்புறத்தின் கிழக்குப் பகுதியில் தித்திவாங்சா மலைகள் மற்றும் மேற்கில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுக் கூட்டம் உள்ளன.

ஸ்ரீ கெம்பாங்கான் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது ஆண்டு முழுவதும் வெப்பமாகவும் வெயிலாகவும் இருக்கும். அதே சமயத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். அதனால் வெப்பநிலை நிலையானதாக இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், சுபாங் ஜெயா
(ஸ்ரீ கெம்பாங்கனில் இருந்து ஏறக்குறைய 5 கி.மீ. தொலைவு)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36
(97)
37
(99)
37
(99)
36
(97)
36
(97)
36
(97)
36
(97)
36
(97)
35
(95)
35
(95)
35
(95)
35
(95)
37
(99)
உயர் சராசரி °C (°F) 32.1
(89.8)
32.9
(91.2)
33.2
(91.8)
33.1
(91.6)
32.9
(91.2)
32.7
(90.9)
32.3
(90.1)
32.3
(90.1)
32.1
(89.8)
32.1
(89.8)
31.6
(88.9)
31.5
(88.7)
32.4
(90.3)
தாழ் சராசரி °C (°F) 22.5
(72.5)
22.8
(73)
23.2
(73.8)
23.7
(74.7)
23.9
(75)
23.6
(74.5)
23.2
(73.8)
23.1
(73.6)
23.2
(73.8)
23.2
(73.8)
23.2
(73.8)
22.9
(73.2)
23.2
(73.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) 18
(64)
20
(68)
20
(68)
21
(70)
21
(70)
20
(68)
19
(66)
20
(68)
20
(68)
21
(70)
21
(70)
19
(66)
18
(64)
மழைப்பொழிவுmm (inches) 192
(7.56)
181
(7.13)
251
(9.88)
292
(11.5)
191
(7.52)
133
(5.24)
136
(5.35)
155
(6.1)
197
(7.76)
258.5
(10.177)
297
(11.69)
246.9
(9.72)
2,530.4
(99.622)
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) 11 12 14 16 13 9 10 11 13 16 18 15 158
சூரியஒளி நேரம் 186.0 194.9 207.7 198.0 207.7 195.0 201.5 189.1 165.0 170.5 153.0 161.2 2,229.6
Source #1: Jabatan Meteorologi Malaysia – Subang 1961–2010
Source #2: World Meteorological Organisation (United Nations, 1971–2000) — Source #3: Hong Kong Observatory (sun only, 1961–1990)[4]

செர்டாங் தமிழ்ப்பள்ளி

[தொகு]

1950-ஆம் ஆண்டுகளில் செரி கெம்பாங்கான் எனும் அப்போதைய செர்டாங் பகுதியில் ஏறக்குறைய 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. நில மேம்பாடு, தொழில்துறை கட்டுமானங்கள் போன்றவற்றால் பல ரப்பர் தோட்டங்கள் அப்புறப்படுத்தப் பட்டன. அதனால் இங்கு இருந்த தமிழப்பள்ளிகளும் மூடப்பட்டன. இப்போது ஒரே ஒரு தமிழ்ப்பள்ளிதான் உள்ளது.

இடம் மலேசிய
மொழியில்
பெயர்
தமிழ்
மொழியில்
பெயர்
மாணவர்கள் ஆசிரியர்கள்
செர்டாங் SJK(T) FES Serdang
Seri Kembangan[5][6]
செர்டாங் தமிழ்ப்பள்ளி 229 27

போக்குவரத்து

[தொகு]

ஸ்ரீ கெம்பாங்கன் மூன்று சுங்கச் சாவடிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. வடக்கு-தெற்கு விரைவுசாலை (தெற்குப் பாதை) (North–South Expressway Southern Route), பெஸ்ராயா விரைவுச்சாலை (Besraya Expressway) மற்றும் கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை (Kuala Lumpur–Seremban Expressway) ஆகிய விரைவுச்சாலைகள்.

மாஜு விரைவுச்சாலை (Maju Expressway) இந்த நகரத்தின் மேற்கு எல்லைக்கு அருகில் செல்கிறது. சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway - KESAS) மற்றும் கோலாலம்பூர் மத்திய சுற்றுச்சாலை 2 (MRR2) ஆகிய சாலைகளின் சந்திப்புகள் அருகிலேயே உள்ளன.

இதன் விளைவாக, தெற்கு சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா அல்லது ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இருந்து பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, ஸ்ரீ கெம்பாங்கான் நகரம்; கோலாலம்பூர் மாநகரத்தின் "தெற்கு நுழைவாயில்" என்று கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003)
  2. Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-29824-8.
  3. "Old villagers return to their hometown to gather and celebrate. Sungai Way Village is 70 years old". www.sinchew.com.my.
  4. "கோலாலம்பூர் மாநகருக்கான காலநிலை தகவல், மலேசியா". Hong Kong Observatory. Archived from the original on 2010-08-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-28.
  5. "SJK TAMIL FES SERDANG". செர்டாங் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL FES SERDANG (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
  6. "S.J.K TAMIL SERDANG, UNIPUTRAPOS 43400 SERDANG, SELANGOR". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரி_கெம்பாங்கான்&oldid=4052188" இலிருந்து மீள்விக்கப்பட்டது