பெரிய கருப்பு அணில்
பெரிய கருப்பு அணில் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | அணில் |
பேரினம்: | Oriental giant squirrel |
இனம்: | R. bicolor |
இருசொற் பெயரீடு | |
Ratufa bicolor (Sparrman, 1778) | |
Subspecies | |
| |
![]() | |
Black giant squirrel range | |
வேறு பெயர்கள் | |
Tennentii, source: Layard, in Blyth, 1849 |
பெரிய கருப்பு அணில் அல்லது பெரிய மலயான் அணில் (black giant squirrel or Malayan giant squirrel) என்பது "ரட்டூஃபா" பேரினத்தினைச் சார்ந்த பெரிய மர அணிலாகும். இது இந்தோமலயான் சோடோப் வகையைச் சார்ந்தது. இது வடக்கு பங்களாதேஷ், வடகிழக்கு இந்தியா, கிழக்கு நேபாளம், பூடான், தெற்கு சீனா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, வியட்நாம் மற்றும் மேற்கு இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.
உடல் அமைப்பு[தொகு]
இதன் தலை மற்றும் உடல் பகுதி 35 முதல் 58 செ.மீ. நீளமுடையது. இதன் வால் பகுதி 60 செ.மீ. வரை நீளமாக இருக்கும். இதன் மொத்த நீளம் 118 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் பின்பகுதி, காதுகள் மற்றும் அடர்ந்த வால்பகுதி அடர் பழுப்பு நிறம் முதல் கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் வயிற்று பகுதி பழுப்பு நிறத்தில் காணப்படும்
வாழ்விடம்[தொகு]
"ர. பைகோலார்" சிற்றின அணில்கள் பல்வேறு வகையான உயிர் வாழிடங்களில் காணப்படுகின்றன. இது கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 1400 மீ. உயரத்தில் இருக்கும். உலகிலேயே மிகக் கரடுமுரடான நிலத்திலுள்ள மரங்களின் உயரங்களில் காணப்படும். இருப்பினும், சமீபத்திய பத்து ஆண்டுகளில், ரா. பைகோலாரின் வாழ்விடம் மனித குடியேற்றம், மரங்களை அழித்தல், மற்றும் வேளாண்மை ஆகியவற்றால் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அணில்கள் வசிக்கும் காடுகளில் மனித இனத்தின் தாக்குதல் தொடர்வதால் கடந்த பத்து ஆண்டுகளில் இதன் மொத்த இனத் தொகையில் 30% வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.[1] எனினும், சில இடங்களில் இந்த இனங்கள் வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.[1]
தெற்கு ஆசியாவில் ர. பைகோலார்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பகுதிகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. ஆனால் ஊசியிலைக் காடுகளில் மிக அரிதாகவே காணப்படுகிறது..[1]
வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமாக உள்ள மலாய் தீபகற்பம், மற்றும் இந்தோனேசியாவில் பரவலாக இவைகள் உள்ளன. வனப்பகுதிகளில் உள்ள உயர் விலங்குகளின் உணவுத் தட்டுப்பாடு காரணமாக காடுகளின் உட்பகுதிக்கு இவை செல்வதில்லை.[1]
இந்தியாவிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் "காசிரங்கா தேசியப் பூங்கா"வில் பெரிய கருப்பு அணில்கள் காணப்படுகின்றன.[3]
பண்புகள்[தொகு]
ர. பைகோலார்' மரங்களில் வாழும் பகலிரவு இயக்கங்கள் கொண்டது. ஆனால் சில சமயங்களில் உணவிற்காக காடுகளின் உட்பகுதிகளுக்குச் செல்லும்.[1] பெரிய கருப்பு அணில்கள் மிக அரிதாகவே மனிதர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு வருகிறது.[1]
விதைகள். பைன் மரக் கூம்பு, பழங்கள், மற்றும் இலைகளை உணவாகக் கொள்கிறது.[1] இது மரங்களில் உள்ள பொந்துகள் மற்றும் கூடுகளில் ஒன்று அல்லது இரண்டு அணில்களாக வசிக்கும்[1]
வகைப்பாடு[தொகு]
ரட்டூஃபா பைகோலர் வகை அணில்கள் பலவும் ஒரே இனங்கள் என்பதை தீர்மானிக்க மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.[1]
Gallery[தொகு]
From Kaeng Krachan National Park, Thailand
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 Walston, J.; Duckworth, J. W.; Molur, S. (2008). "Ratufa bicolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
- ↑ Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Ratufa bicolor". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400014.
- ↑ Menon, Vivek (2009) [First published 2003]. Mammals of India. Princeton field guides. Princeton, N.J.: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-14067-4. இணையக் கணினி நூலக மையம்:276340775. "Originally published as: Menon, Vivek (ed.), et al. A field guide to Indian mammals (2003)"
நூற்பட்டியல்[தொகு]
- Francis, Charles M., Priscilla Barrett. A field guide to the mammals of South-East Asia. London: New Holland, 2008. ISBN 978-1-84537-735-9, OCLC: 190967851.
- Lekhakun, Bunsong, Jeffrey A. McNeely. Mammals of Thailand. Bangkok: Association for the Conservation of Wildlife, 1977. OCLC: 3953763.
- Nowak, Ronald M. Walker’s mammals of the world. Baltimore: Johns Hopkins University Press, 1999. ISBN 978-0-8018-5789-8, OCLC: 39045218. Chapter: "Sciuridae: squirrels, chipmunks, marmots, and prairie dogs" in volume two.
வெளிப்புற இணைப்புகள்[தொகு]
- Black Giant Squirrel - Ecology Asia page about this species, with beautiful photos and description.