பெர்லிஸ் மந்திரி பெசார்
பெர்லிஸ் மந்திரி பெசார் Menteri Besar of Perlis Menteri Besar Perlis | |
---|---|
பெர்லிஸ் மாநில அரசு | |
உறுப்பினர் | பெர்லிஸ் மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | பெர்லிஸ் மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | துன் ரசாக் சாலை, கங்கார், பெர்லிஸ் |
அலுவலகம் | 3-ஆவது மாடி, மாநில சட்டமன்ற வளாகம், பெர்சியாரான் வாவாசான், 01000 கங்கார், பெர்லிஸ் |
நியமிப்பவர் | பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் பெர்லிஸ் இராஜா (House of Jamalullail Perlis) |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | இராஜா அகமது இராஜா என்டுட் (Raja Ahmad Raja Endut) |
உருவாக்கம் | 21 ஏப்ரல் 1925 |
இணையதளம் | www |
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
பெர்லிஸ் மந்திரி பெசார் அல்லது பெர்லிஸ் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Perlis அல்லது First Minister of Perlis; மலாய்: Menteri Besar Terengganu; சீனம்: 玻璃市州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான பெர்லிஸ் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைப்பது வழக்கம்.[2]
பெர்லிஸ் மந்திரி பெசார், பெர்லிஸ் மாநில சட்டமன்றத்தின் (Perlis State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
தற்போது பெர்லிஸ் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் முகமது சுக்ரி ரம்லி (Mohd Shukri Ramli). இவர் 22 நவம்பர் 2022 முதல் பெர்லிஸ் மாநிலத்தின் மந்திரி பெசார் (முதல்வர்) பதவியை வகித்து வருகிறார்.
நியமனம்
[தொகு]பெர்லிஸ் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, பெர்லிஸ் இராஜா முதலில் மந்திரி பெசாரை மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.
பெர்லிஸ் மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் பெர்லிஸ் இராஜா நியமிப்பார்.
மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் பெர்லிஸ் இராஜா முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். பெர்லிஸ் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
[தொகு]மாநில அரசாங்கம் தனது சட்டங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப் படுமானால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது பெர்லிஸ் இராஜாவின் பொறுப்பு ஆகும். பெர்லிஸ் இராஜா அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருப்பார்.
ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராக பெர்லிஸ் இராஜா நியமிப்பார்.
அதிகாரங்கள்
[தொகு]ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எடுக்கப்படுமானால், அரசாங்கப் பதவிகளில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.
தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்
[தொகு]மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்கப் பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.
பெர்லிஸ் மந்திரி பெசார் பட்டியல்
[தொகு]1948-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான பெர்லிஸ் மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[3]
அரசியல் கட்சிகள்:
மலேசிய கூட்டணி கட்சி
பாரிசான் நேசனல்
சுயேச்சை
பெரிக்காத்தான் நேசனல்
# | தோற்றம் | பெயர் (பிறப்பு–இறப்பு) தொகுதி |
பதவியில் | கட்சி[a] | தேர்தல் | கூட்டத் தொடர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | பதவி காலம் | |||||||
1 | ராஜா அகமது ராஜா என்டுட் (Raja Ahmad Raja Endut) (1891–1978) |
1 பிப்ரவரி 1948 |
30 சனவரி 1957 |
8 ஆண்டுகள், 364 நாட்கள் | சுயேச்சை | – | – | ||
2 | முகமது ரசாலி முகமது அலி பாசி (Mohd Razali Mohamed Ali Wasi) (பிறப்பு 1903) |
31 சனவரி 1957 |
30 ஏப்ரல் 1959 |
2 ஆண்டுகள், 89 நாட்கள் | சுயேச்சை | – | – | ||
3 | செயிக் அகமது அசிம் (Sheikh Ahmad Mohd Hashim) (1896–1986) |
1 மே 1959 |
31 திசம்பர் 1971 |
12 ஆண்டுகள், 244 நாட்கள் | கூட்டணி (அம்னோ) |
1959 | 1-ஆவது | ||
1964 | 2-ஆவது | ||||||||
1969 | 3-ஆவது | ||||||||
4 | சாபார் அசன் (Jaafar Hassan) (பிறப்பு 1926) |
1 சனவரி 1972 |
22 அக்டோபர் 1981 |
9 ஆண்டுகள், 294 நாட்கள் | கூட்டணி (அம்னோ) |
– | |||
பாரிசான் (அம்னோ) |
1974 | 4-ஆவது | |||||||
1978 | 5-ஆவது | ||||||||
5 | அலி அகமது (Ali Ahmad) (பிறப்பு 1924) |
1 நவம்பர் 1981 |
13 ஆகஸ்டு 1986 |
4 ஆண்டுகள், 285 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
– | |||
1982 | 6-ஆவது | ||||||||
6 | அப்துல் அமீது பாவான்தே (Abdul Hamid Pawanteh) (1944–2022) |
13 ஆகஸ்டு 1986 |
6 மே 1995 |
8 ஆண்டுகள், 266 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
1986 | 7-ஆவது | ||
1990 | 8-ஆவது | ||||||||
7 | சகிடான் காசிம் (Shahidan Kassim) (பிறப்பு 1951) |
6 மே 1995 |
17 மார்ச் 2008 |
12 ஆண்டுகள், 316 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
1995 | 9-ஆவது | ||
1999 | 10-ஆவது | ||||||||
2004 | 11-ஆவது | ||||||||
8 | மாட் இசா சாபு (Md Isa Sabu) (பிறப்பு 1946) |
17 மார்ச் 2008 |
7 மே 2013 |
5 ஆண்டுகள், 51 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
2008 | 12-ஆவது | ||
9 | அசுலான் மான் (Azlan Man) (பிறப்பு 1958) |
7 மே 2013 |
22 நவம்பர் 2022 |
9 ஆண்டுகள், 199 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
2013 | 13-ஆவது | ||
2018 | 14-ஆவது | ||||||||
10 | முகமது சுக்ரி ரம்லி (Mohd Shukri Ramli) (பிறப்பு 1961) |
22 நவம்பர் 2022 |
பதவியில் உள்ளார் | 1 ஆண்டு, 303 நாட்கள் | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
2022 | 15-ஆவது |
- ↑ இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Menteri Besar of Perlis message". பார்க்கப்பட்ட நாள் 7 July 2024.
- ↑ "Menteri Besar Perlis together with Perlis State Civil Servants Year 2024". பார்க்கப்பட்ட நாள் 7 July 2024.
- ↑ Ex-Chief Minister Perlis State Government. Accessed 10 June 2010
வெளி இணைப்புகள்
[தொகு]- Pejabat Setiausaha Kerajaan Negeri Perlis (Office of the Menteri Besar of Perlis) (Official site)