உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

ஆள்கூறுகள்: 2°55′48″N 101°41′24″E / 2.93000°N 101.69000°E / 2.93000; 101.69000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்
Court of Appeal of Malaysia
Mahkamah Rayuan Malaysia
புத்ராஜெயா, மலேசிய நீதி அரண்மனையில் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்
நிறுவப்பட்டது1994
அமைவிடம்மலேசிய நீதி அரண்மனை
(Palace of Justice Malaysia), புத்ராஜெயா,  மலேசியா
புவியியல் ஆள்கூற்று2°55′48″N 101°41′24″E / 2.93000°N 101.69000°E / 2.93000; 101.69000
நியமன முறைமலேசியப் பிரதமரின் ஆலோசனையுடன் அரச நியமனம்
அதிகாரமளிப்புமலேசிய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுமலேசிய உச்சநீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்66 வயதில் கட்டாய ஓய்வு
இருக்கைகள் எண்ணிக்கை33
வலைத்தளம்www.kehakiman.gov.my
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்
தற்போதையஅபாங் இசுகந்தர் அபாங் அசீம்
(Abang Iskandar Abang Hashim)
பதவியில்17 January 2023

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (மலாய்:Mahkamah Persekutuan Malaysia; ஆங்கிலம்:Court of Appeal of Malaysia; சீனம்:马来西亚上诉法院) என்பது மலேசிய நீதித்துறை அமைப்பில் உள்ள உயர்நிலை நீதிமன்றமாகும். நீதித்துறைப் படிநிலை அமைப்பில் மலேசிய உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது உயர் நீதிமன்றமாகும். இது புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் (Palace of Justice) உள்ளது.

இந்த நீதிமன்றம் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரால் (President of the Court of Appeal of Malaysia) வழிநடத்தப்படுகிறது. மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி, மலேசிய நீதித்துறையில் மலேசியத் தலைமை நீதிபதிக்குப் பிறகு இரண்டாவது நிலையில் மிக மூத்தப் பதவியாக உள்ளது.

17 சனவரி 2023-இல், அபாங் இசுகந்தர் அபாங் அசீம் என்பவர் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக யாங் டி-பெர்டுவான் அகோங் முன்னிலையில் பதவியேற்றார். மலேசியாவின் முதல் பெண் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரோகானா யூசுப், 2022-ஆம் ஆண்டில் ஓய்வு வயதை எட்டியதும் அபாங் இசுகந்தர் அபாங் அசீம் புதிய தலைவராகப் பதவியேற்றார்.[1]

பொது[தொகு]

1985-ஆம் ஆண்டுக்கு முன், மலேசிய உச்சநீதிமன்றம் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமாக இருந்தது. அந்தக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சில் (Privy Council) எனும் பிரிவி உச்ச நீதிமன்றம், முதன்மை உயர் உச்ச நீதிமன்றமாக இருந்தது.[2] சனவரி 1, 1978 அன்று, குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் தொடர்பாக, இங்கிலாந்தில் இருந்த பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வது, மலேசியாவில் தடை செய்யப்பட்டன. [2]

பின்னர் 1 சனவரி 1985-இல், சிவில் வழக்குகள் தொடர்பாக பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வதும் தடை செய்யப்பட்டன. பிரிவி உச்ச நீதிமன்ற முறையீடுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், ​ மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அத்தகைய முறையீடுகளை ஏற்றுக் கொண்டது. இறுதியாக, 24 ஜூன் 1994-இல், மலேசிய உச்ச நீதிமன்றம் என்று மறுபெயரிடப்பட்டது. அதன் பின்னர் அதே 1994-ஆம் ஆண்டில் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்கள்[தொகு]

தலைவர் பதவியேற்பு பதவி ஓய்வு
அப்துல் மாலிக் அகமது
(Abdul Malek Ahmad)
2004 2007
அப்துல் அமீது முகமது
(Abdul Hamid Mohamad)
2007 2007
சாக்கி முகமது அசுமி
(Zaki Mohamed Azmi)
2007 2008
அலாவுதீன் முகமது சரீப்
(Alauddin Mohd Sheriff )
2008 2011
முகமது ரவுஸ் சரீப்
(Mohamed Raus Sharif)
2011 2017
சுல்கிப்லி அகமது மகினுடின்
(Zulkefli Ahmad Makinudin)
2017 2018
அகமது மாரோப்
(Ahmad Maarop)
2018 2019
ரோகானா யூசுப்
(Rohana Yusuf)
2019 2022
அபாங் இசுகந்தர் அபாங் அசீம்
(Abang Iskandar Abang Hashim)
2023 பதவியில் உள்ளார்

தற்போதைய நீதிபதிகள்[தொகு]

தற்போதைய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் [3]

விருது நீதிபதி பதவி பதவியேற்பு
டான் ஸ்ரீ டத்தோ அபாங் இசுகந்தர் அபாங் அசீம்
(Abang Iskandar Abang Hashim)
நீதிமன்றத் தலைவர் 17 சனவரி 2023
டத்தோ யாக்கோப் சாம்
(Yaacob Md Sam)
நீதிபதி 21 மார்ச் 2016
டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜலீல்
(Abdul Karim Abdul Jalil)
நீதிபதி 21 மார்ச் 2016
டத்தோ சுராயா ஒசுமான்
(Suraya Othman)
நீதிபதி 23 செப்டம்பர் 2017
டத்தோ அனிபா பரிகுல்லா
(Hanipah Farikullah)
நீதிபதி 27 ஏப்ரல் 2018
டத்தோ கமலுதின் சாயித்
(Kamaludin Md Said)
நீதிபதி 27 ஏப்ரல் 2018
டத்தோ முகமது சபிதீன் டியா
(Mohamad Zabidin Mohd Diah)
நீதிபதி 26 நவம்பர் 2018
டத்தோ நூர் பி அரிபின்
(Nor Bee Ariffin)
நீதிபதி 26 நவம்பர் 2018
டத்தோ சானா மெகாட்
(Has Zanah Mehat)
நீதிபதி 26 நவம்பர் 2018
டத்தோ லீ சுவீ செங்
(Lee Swee Seng)
நீதிபதி 8 ஆகஸ்டு 2019
டத்தோ அசீசா நவாவி
(Azizah Nawawi)
நீதிபதி 8 ஆகஸ்டு 2019
டத்தோ வாசிர் ஆலாம் மைதீன் மீரா
Vazeer Alam Mydin Meera)
நீதிபதி 8 ஆகஸ்டு 2019
டத்தோ ரவீந்திரன் பரமகுரு
(Ravinthran Paramaguru)
நீதிபதி 8 ஆகஸ்டு 2019
டத்தோ அட்ரிய சையது இசுமாயில்
(Hadhariah Syed Ismail)
நீதிபதி 5 டிசம்பர் 2019
டத்தோ அபு பக்கார் ஜாயிஸ்
(Abu Bakar Jais)
நீதிபதி 5 டிசம்பர் 2019
டத்தோ நந்தபாலன் மூர்த்தி
(Nantha Balan Moorthy)
நீதிபதி 5 டிசம்பர் 2019

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yatim, Hafiz (2023-01-17). "Abang Iskandar appointed as COA president, Zabidin made CJ of Malaya, Abdul Rahman CJ of Sabah and Sarawak". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  2. 2.0 2.1 "Courts & Judgments". Jurist. University of Pittsburgh. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
  3. "Hakim Mahkamah Rayuan". Judicial Appointment Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016.

வெளி இணைப்புகள்[தொகு]