உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய நீதி அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய நீதி அரண்மனை
Palace of Justice (Malaysia)
Istana Kehakiman Malaysia
ايستان کحاکيمن
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைமலேசிய உச்சநீதிமன்றம்
கட்டிடக்கலை பாணிஇஸ்லாமியக் கட்டிடக்கலை
மூரிஷ் கட்டிடக்கலை
பல்லேடியன் கட்டிடக்கலை; புதுச்செவ்வியல்வாதம்
நகரம் புத்ராஜெயா
நாடுமலேசியா மலேசியா
ஆள்கூற்று2°55′01″N 101°41′01″E / 2.9170°N 101.6837°E / 2.9170; 101.6837
அடிக்கல் நாட்டுதல்1999
கட்டுமான ஆரம்பம்2000
நிறைவுற்றது2003
துவக்கம்2004
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை5
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)அக்கிடா கட்டிடக் கலைஞர், (AR Ahmad Rozi A Wahab)

மலேசிய நீதி அரண்மனை (மலாய்:Istana Kehakiman Malaysia; ஆங்கிலம்:Palace of Justice (Malaysia); சீனம்:布城司法宮) என்பது மலேசியா, புத்ராஜெயா நகர மையத்தில் அமைந்துள்ள நீதித்துறை வளாகம் ஆகும். இந்த வளாகம் மலேசியாவின் மிக உயர்நிலை நீதிமன்றங்களான மலேசிய உச்சநீதிமன்றம்; மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரு உயர் நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது.

முன்பு கோலாலம்பூர் சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் இருந்த அந்த இரு நீதிமன்றங்களும் 2003-ஆம் ஆண்டில் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டன.[1]

பொது[தொகு]

மலேசியாவின் நீதித்துறை அமைப்பிற்கு முறையான ஒரு கட்டிடம் தேவைப்பட்டதால், புத்ராஜெயாவின் 3-ஆவது புறநகர்ப் பகுதிக்குள் ஓர் இடம் அடையாளம் காணப்பட்டது. கட்டிடத்தை வடிவமைக்க அக்கிடா கட்டிடக் கலைஞர் நிறுவனம் (aQidea Architect) நியமிக்கப்பட்டது. இந்தக் கட்டிடக் கலைஞர் நிறுவனம், அந்தக் கட்டத்தில் மலேசியப் பிரதமரின் அலுவலகமான பெர்டானா புத்ரா கட்டிடம் கட்டப்படுவதற்கு உதவியாக இருந்தது.

பெர்டானா புத்ரா கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மலேசிய நீதி அரண்மனையின் கட்டுமானம் தொடங்கியது.[2] மலேசிய நீதி அரண்மனை வளாக அமைப்பில் இரண்டு உச்ச நீதிமன்றங்கள், ஆறு மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், தலைமைப் பதிவாளர் அலுவலகம், உச்ச நீதிமன்றத்திற்கான இரண்டு பதிவகங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கான அலுவலகங்கள், ஒரு மாநாட்டு அரங்கம், ஒரு நூலகம் மற்றும் ஓர் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

இந்த வளாகம் பற்பல பாதுகாப்பு நுழைவாயில்களையும்; பாதுகாப்புப் பாதைகளையும் கொண்டுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சாட்சிகள், பொதுமக்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகத் தனித் தனிப் பாதைகள் உள்ளன. அத்துடன் நீதிபதிகள், சாட்சிகள், பொதுமக்களுக்கு என தனித் தனி வாகன நிறுத்துமிடங்களையும் கொண்டுள்ளது.

கட்டிடக்கலை[தொகு]

நீதி அரண்மனையின் வடிவமைப்பு இந்தியாவில் உள்ள தாஜ்மகால் போன்ற பாரம்பரிய இசுலாமிய கலாசாரத்தின் தாக்கங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் கோலாலம்பூரில் உள்ள சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தின் மூரிஷ் கலாசாரமும்; பல்லேடியன் வடிவமைப்பு போன்ற மேற்கத்திய பாரம்பரிய தாக்கங்களும், இந்த நீதி அரண்மனை வடிவமைப்பில் பிணைக்கப்பட்டு உள்ளன.[3]

இந்த வளாகத்தில் நீதித்துறைக்கு என ஐந்து மாடி கட்டிடமும்; நீதிமன்றங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு என இரண்டு மாடி கட்டிடடங்களும் உள்ளன.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Building – CACJ" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
  2. "The Istana Kehakiman or Palace of Justice is a majestic building, and houses the judicial department and courts. The Palace of Justice comprises of the Court of Appeal and the Federal Court of Malaysia, the Highest Court in Malaysia". UOW Malaysia. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
  3. "Palace of Justice or Istana Kehakiman is a grand palace located in the administrative capital of Malaysia, Putrajaya. Inaugurated in 2004, Palace of Justice is a masterpiece with the essence of Islamic, Moorish, Palladian and Neoclassicism style together". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
  4. "Palace of Justice, Putrajaya Tourism Malaysia". 2014-01-11. Archived from the original on 2014-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நீதி_அரண்மனை&oldid=3968339" இலிருந்து மீள்விக்கப்பட்டது