சனவரி 31
Jump to navigation
Jump to search
| << | சனவரி 2019 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIX | ||||||
சனவரி 31 (January 31) கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 314 – மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1606 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
- 1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
- 1862 – ஆல்வன் கிரகாம் கிளார்க் சிரியசு பி என்ற வெண் குறுமீன் விண்மீனை 18.5 செமீ தொலைநோக்கி ஊடாகக் கண்டுபிடித்தார்.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க சட்டமன்றம் அடிமை முறையை ஒழிக்கும் 13-வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.
- 1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
- 1915 – முதலாம் உலகப் போர்; செருமனி உருசியாவுக்கு எதிராக முதற்தடவையாக நச்சு வாயுவை பொலிமோவ் சமரில் பயன்படுத்தியது.
- 1929 – லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.
- 1937 – சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: மலேயா சமரில் கூட்டுப் படையினர் சப்பானியரிடம் தோற்றதை அடுத்து சிங்கப்பூருக்கு சென்றனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் தரையிறங்கினார்கள்.
- 1946 – யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாடு பொசுனியா எர்செகோவினா, குரொவேஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
- 1953 – வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 – அமெரிக்காவின் முதலாவது வெற்றிகரமான செய்மதி எக்ஸ்புளோரர் 1 வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டையைக் கண்டறிந்தது.
- 1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
- 1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் ஓசிமின் நகரில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.
- 1968 – நவூரு ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1980 – குவாத்தமாலாவில் எசுப்பானிய தூதரக முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட்சு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
- 1996 – கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
- 2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 – அலாஸ்கா விமானம் ஒன்று கலிபோர்னியாவின் பசிபிக் கடல் பகுதியில் வீழ்ந்ததில் 88 பேர் உயிரிழந்தனர்.
- 2009 – கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1762 – லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
- 1797 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1828)
- 1906 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1971)
- 1912 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1988)
- 1929 – ரூடால்ஃப் மாஸ்பவர், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 2011)
- 1932 – செ. எ. ஆனந்தராஜன், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், ஆசிரியர் (இ. 1985)
- 1932 – மசூர் மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. 2015)
- 1937 – திருவிழா ஜெயசங்கர், தமிழக நாதசுவரக் கலைஞர்
- 1944 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1999)
- 1975 – பிரீத்தி சிந்தா, இந்திய நடிகை, தயாரிப்பாளர்
- 1981 – ஜஸ்டின் டிம்பர்லேக், அமெரிக்கப் பாடகர், நடிகர்
- 1992 – ஏமி ஜாக்சன், ஆங்கிலேய-தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்[தொகு]
- 1561 – பைராம் கான், முகலாயத் தளபதி (பி. 1501)
- 1888 – ஜான் போஸ்கோ, சலேசிய சபையை நிறுவிய இத்தாலிய மதகுரு (பி. 1815)
- 1933 – ஜோன் கால்ஸ்வர்தி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1867)
- 1950 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1976)
- 1954 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், எஃப்.எம். வானொலியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1890)
- 1969 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (பி. 1894)
- 1987 – எம். பக்தவத்சலம், தமிழக முதலமைச்சர், அரசியல்வாதி (பி. 1897)
- 1988 – அகிலன், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் (பி. 1922)
- 1995 – கா. ம. வேங்கடராமையா, தமிழகக் கல்வெட்டறிஞர், தமிழறிஞர் (பி. 1912)
- 2009 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)