செபஸ்டியான் பினேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபசுட்டியான் பினேரா
Sebastián Piñera
2018 இல் பினேரா
34-ஆவது, 36-ஆவது சிலி அரசுத்தலைவர்
பதவியில்
11 மார்ச் 2018 – 11 மார்ச் 2022
முன்னையவர்மிசெல் பாச்செலெட்
பின்னவர்கேப்ரியல் போரிச்
பதவியில்
11 மார்ச் 2010 – 11 மார்ச் 2014
முன்னையவர்மிசெல் பாச்செலெட்
பின்னவர்மிசெல் பாச்செலெட்
தேசியப் புத்தாக்கக் கட்சித் தலைவர்
பதவியில்
26 மே 2001 – 10 மார்ச் 2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-12-01)1 திசம்பர் 1949
சான் தியேகோ, சிலி
இறப்பு6 பெப்ரவரி 2024(2024-02-06) (அகவை 74)
சிலி
காரணம் of deathஉலங்குவானூர்தி விபத்து
அரசியல் கட்சிதேசியப் புத்தாக்கம் (1989–2010)
சுயேச்சை (2010–2024)
துணைவர்
செசிலியா மோரெல் (தி. 1973)
பிள்ளைகள்4
கல்விசிலி கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்)
கையெழுத்து
இணையத்தளம்இணையதளம்

மிகுவேல் உவான் செபஸ்டியான் பினேரா எச்செனிக் (Miguel Juan Sebastián Piñera Echenique, 1 திசம்பர் 1949 – 6 பெப்ரவரி 2024) சிலியின் அரசுத் தலைவராக 2009-1010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, சனவரி 17 இல் நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் நாட்டில் புகழ் வாய்ந்த பொருளியல் நிபுணரும், கோடீசுவரரும், அரசியல்வாதியும் ஆவார்.

இறப்பு[தொகு]

2024 பெப்பிரவரி 6 ஆம் நாள்சிலி கோடை நேரம் பிற்பகல் 3.30 (ஒ.ச.நே - 03:00) மணியளவில், தரையை விட்டுப் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, ராபின்சன் ஆர்44 வகையைச் சார்ந்த உலங்கூர்தியில் பயணித்த பினேரா லாஸ் ரியோஸ் மண்டலத்தில் எல் ரான்கோ மாகாணத்தில் ரான்கோ ஏரியில் நொறுங்கி விழுந்த விபத்தில் இறந்தார்.[2] அந்தப் பகுதியில் ஒரு கடுமையான சூறாவளிக் காற்று வீசியுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Billionaire Pinera wins Chile presidential election, பிபிசி, சனவரி 18, 2010
  2. Navarrete, Esperanza (6 February 2024). "Qué se sabe hasta ahora del accidente en el Lago Ranco". La Tercera (in ஸ்பானிஷ்). Archived from the original on 6 February 2024. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  3. "Expresidente Sebastián Piñera fallece en accidente de helicóptero en Lago Ranco". La Tercera. 6 February 2024 இம் மூலத்தில் இருந்து 6 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240206190148/https://www.latercera.com/nacional/noticia/reportan-la-caida-de-un-helicoptero-en-lago-ranco/3YMDSWRN5JB7BAIMH3TQXUWUD4/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபஸ்டியான்_பினேரா&oldid=3960010" இலிருந்து மீள்விக்கப்பட்டது