மிசெல் பாச்செலெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிசேல் பசிலேற்
Michelle Bachelet visiting Pichilemu, to inaugurate Ross Cultural Centre 2.jpg
சிலியின் சனாதிபதி
பதவியில்
மார்ச் 11, 2006 – 2010
முன்னவர் ரிகாடோ லாகோஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 29, 1951
சந்தியாகோ சிலி
அரசியல் கட்சி சிலி சோசலிச கட்சி

வெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா (Verónica Michelle Bachelet Jeria /βeˈɾonika miˈʃɛl baʃˈle ˈçeɾja/, பிறப்பு: செப்டம்பர் 29, 1951) இருமுறை குடியரசுத் தலைவராகவிருந்த சிலி நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். இவர் முதன்முதலாக 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.[1] இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். படைத்துறை கோட்பாட்டு முறைகளிலும் தேர்ந்தவர். பெரும்பாலும் கத்தோலிக மதத்தைப் பின் பற்றும் சிலி நாட்டில் தன்னை கடவுள் உண்டா-இல்லையா என அறியா நிலைக்கொள்கை உடையவராக அறிவித்துள்ளவர். 2007 ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகள் வரிசையில் 27 ஆவதாக ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ் இவரை சுட்டுகின்றது.

முதல்முறைப் பதவிக்காலம் முடிந்த பிறகு, அரசியல் சட்டப்படி, மீண்டும் தேர்தலில் நிற்கவியலாதபோது புதியதாக உருவாக்கப்பட்ட ஐ.நா. பாலினச் சமநிலை மற்றும் மகளிர் அதிகார மையத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். திசம்பர் 2013இல் தம் நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டு 62% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவரே என்ற பெருமை பெற்றார்.[2]

ஆகத்து 2018இல் இவரை அடுத்துவரும் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையராக ஐக்கிய நாடுகள் அவை நியமித்துள்ளது.[3]

வாழ்க்கை வரலாறு‍[தொகு]

இவர் ஒரு மிதவாத சோசலிஸ்ட் ஆவார். இவர் தேர்தல் கொள்கையாக திறந்த சந்தை கொள்கையை வரவேற்றும், அதேசமயம் வலுவான சமூகநலத் திட்டங்களை முன்வைத்தும் தேர்தலில் வென்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடது சாரி சாய்வுக்கு ஒத்தானதாகவும் வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது.

2013 தேர்தல்[தொகு]

சிலியின் அடுத்த அதிபராக மிச்சேல் பாச்லெட் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 2வது முறையாக அதிபராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி பதவி யேற்கிறார். நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாச்லெட் 62.59 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்தேய் 37.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசெல்_பாச்செலெட்&oldid=3224713" இருந்து மீள்விக்கப்பட்டது