ஆகத்து 7
Appearance
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 7 (August 7) கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர்.
- 768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார்.
- 1714 – உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது.
- 1786 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது நடுவண் தொல்குடி இந்திய சிறப்புப் பகுதி அமைக்கப்பட்டது.[1]
- 1819 – கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார்.
- 1890 – சுவீடனில் அன்னா மான்சுடொட்டர் என்பவர் கடைசிப் பெண்ணாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
- 1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[2]
- 1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
- 1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
- 1933 – ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.
- 1944 – ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
- 1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.
- 1960 – ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1962 – தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய-அமெரிக்க மருந்தியலாளர் பிரான்செசு கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
- 1964 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் மீது வட வியட்நாமியப் படைகளின் தாக்குதல்களைக் கையாளுவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.
- 1970 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.
- 1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
- 1987 – லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 1989 – எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கி லேலண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
- 1990 – வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.
- 1995 – கொழும்பில் மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் 24 பேர் கொல்லப்பட்டனர், 55 பேர் காயமடைந்தனர்.[3]
- 1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 1999 – செச்சினிய-ஆதரவு இசுலாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.
- 2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
- 2008 – தெற்கு ஒசேத்தியா தொடர்பான உருசிய-ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.
- 2017 – இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஆக்சிசன் தரப்படாமல் இறந்தனர்.
பிறப்புகள்
- 1642 – உமறுப் புலவர், தமிழகப் புலவர்
- 1702 – முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748)
- 1876 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (இ. 1917)
- 1912 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)
- 1925 – மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்திய உயிரியலாளர்
- 1928 – யேம்சு ராண்டி, கனடிய-அமெரிக்க நடிகர்
- 1933 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2012)
- 1946 – ஜான் மேத்தர், அமெரிக்க விண்மீனியல் அறிஞர்
- 1948 – கிறெக் சப்பல், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1950 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)
- 1958 – மகேசு தத்தானி, இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1963 – நிக் கிலெஸ்பி, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்
- 1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்
- 1975 – சார்லீசு தெரன், தென்னாப்பிரிக்க-அமெரிக்க நடிகை
- 1978 – அலெக்சாண்டர் அஜா, பிரெஞ்சு இயக்குநர்
இறப்புகள்
- 1941 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் (பி. 1861)
- 1974 – வாணிதாசன், புதுவைத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1915)
- 1996 – கிருஷாந்தி குமாரசுவாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் (பி. 1977)
- 2013 – ச. சபாநாயகம், ஈழத்து மரபுவழி ஓவியர்
- 2014 – சுருளி மனோகர், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்
- 2018 – மு. கருணாநிதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1924)
சிறப்பு நாள்
- குடியரசு நாள் (ஐவரி கோஸ்ட்)
மேற்கோள்கள்
- ↑ Champagne, Duane (2001). The Native North American Almanac. Farmington Hills, MI: Gale Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0787616559.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 66
- ↑ "Principal Ceylon Events, 1995". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
- "ஆகத்து 7 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.