சுருளி மனோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருளி மனோகர்

சுருளி மனோகர் (இ. 07-08-2014, வயது 51[1]), சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் சுறா, படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியின் சூப்பர் 10 நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இவர், இயக்குநர்[2] என்ற திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவந்தார். புற்றுநோயால்[3] பாதிக்கப்பட்டுவந்த இவர் 2014-ம் ஆண்டு ஆகத்து 7-ம் தேதி காலமானார்.[4]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "சுருளி மனோகர் காலமானார்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  2. "நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  3. "பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்". Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  4. "பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!". Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருளி_மனோகர்&oldid=3555125" இலிருந்து மீள்விக்கப்பட்டது