கிருஷாந்தி குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷாந்தி குமாரசுவாமி
Krishanti Kumaraswamy
Krishanthy.jpeg
கிருஷாந்தி குமாரசுவாமி
பிறப்பு1977
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புஆகத்து 7, 1996(1996-08-07)
யாழ்ப்பாணம், இலங்கை
பணிமாணவி
சமயம்இந்து
பெற்றோர்இராசம்மா , குமாரசுவாமி


கிருஷாந்தி குமாரசுவாமி (1977 - 7.08.1996, கைதடி, யாழ்ப்பாணம்) என்பவர் 1996, ஓகஸ்ட் 07 ஆம் நாள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். இவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி. க.பொ.த-சா.த பரிட்சையில் ஏழு டி, ஒரு சி பெறுபேற்றை பெற்றவர். தனது ஆறாவது வயதிலேயே தனது தகப்பனாரை இழந்தவர். இவரது தகப்பனார் இ. குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவையாற்றியவர். கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.

நிகழ்வு[தொகு]

1996 செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை, முற்பகல் 10.30 மணியளவில் கிருஷாந்தி குமாரசுவாமி, க. பொ. த (உயர் தர) இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். இதை கிருஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிரியப் பணியை ஆற்றியவர்) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார்.

கிருஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாருக்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிருஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது-35, தென்மராட்சி ப. நோ. கூ. சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது தனிப்பட்ட பயிற்சி வகுப்பு (டியூஷன்) போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது-16, யாழ். சென் ஜோன் கல்லூரி க.பொ. த உயர் தர முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர். கைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிருஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சி. ஆரம்பத்தில் "நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவுமில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை" என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிருஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் அம்மூவரையும் பிடித்து, வதைத்து கொன்று விட்டனர்[1][2]. அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும், ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் கிருஷாந்தியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்தனர்[3]. இவர்களில் சிலர் சாட்சிகளாக இருந்ததினாலேயே பாலியல் வல்லுறவு செய்திட அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்தனர்[4]. இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு விசாரணை[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SUNILA ABEYSEKERA: PEACE CAMPAIGNER ON A WAR-TORN ISLAND". Collection. மூல முகவரியிலிருந்து 2007-06-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-11.
  2. காலபிரம்மன் (January 17, 2014). "மன்னார் மனிதப் புதைகுழி; ஜெனீவா வரை சூடு பிடிக்குமா? சிறப்புக் கட்டுரை". newmannar.net. பார்த்த நாள் 26 அக்டோபர் 2014.
  3. Bureau of Democracy, Human Rights, and Labor (2002-02-23). "Country Reports on Human Rights Practices". United States Department of State. பார்த்த நாள் 2006-12-28.
  4. "Jaffna MPCS President assassinated". தமிழ்நெட். பார்த்த நாள் 2007-02-02.