ஜிம்மி வேல்ஸ்
ஜிம்மி வேல்ஸ் | |
---|---|
டிசம்பர் 2008-ல் எடுக்கப்பட்ட படிமம் | |
பிறப்பு | ஜிம்மி டொனால் வேல்ஸ் ஆகத்து 7, 1966 ஹன்ட்ஸ்வில்லே, அலபாமா, யு.எஸ். |
இருப்பிடம் | செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா |
தேசியம் | அமெரிக்கர் |
மற்ற பெயர்கள் | ஜிம்போ (கணினிவழி செல்லப் பெயர்)[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆபர்ன் பல்கலைக்கழகம் அலபாமா பல்கலைக்கழகம் இந்தியானா பல்கலைக்கழகம் |
பணி | இணைய தொழில்முனைவோர் |
அறியப்படுவது | விக்கிபீடியா இணை நிறுவனர் |
பட்டம் | விக்கியா நிறுவனத் தலைவர் (2004– ) தலைவர் விக்கிமீடியா பவுண்டசன் |
பதவிக்காலம் | ஜூன் 2003 – அக்டோபர் 2006 |
பின்வந்தவர் | ப்ளோரன்ஸ் டெவோட் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | விக்கிமீடியா பவுண்டசன், கிரியேட்டிவ் காமன்ஸ், சோசியல்டெக்ஸ்ட், MIT Center for Collective Intelligence (advisory board) |
விருதுகள் | EFF Pioneer Award (2006), தி எக்கனாமிஸ்ட்'s வியாபாரச் செயன்முறை விருது (2008), The Global Brand Icon of the Year Award (2008) |
வலைத்தளம் | |
Personal weblog English Wikipedia userpage |
ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் நிறுவனர் மற்றும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.
பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் காய்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாக இருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
விக்கிப்பீடியாவும் விக்கிமீடியா பவுண்டேசனும்
[தொகு]விக்கியைப் பாவித்துக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 11, 2001 லாரி சாங்கர் முன்வைத்திருந்தார். ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா விக்கி முறையில் நிர்வாகிக்கப்பட்டது. இது முன்னைய நீயூபீடியா கட்டுரைகளின் தரங்களை கண்காணிக்கவெனத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் இதன் மிதமான வளர்ச்சி விக்கிப்பீடியாவை முன்னெடுத்ததோடு 2002 இல் நியூபீடியா கைவிடப்பட்டது.