உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலிதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலிதேவி
மங்கையர்க்கரசி (1949) திரைப்படத்தில் அஞ்சலிதேவி
பிறப்புஅஞ்சனிதேவி
(1927-08-24)ஆகத்து 24, 1927
பெத்தாபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம்
இறப்புசனவரி 13, 2014(2014-01-13) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
பெற்றோர்தந்தை : நூக்கையா
தாயார் : சத்யவதி
வாழ்க்கைத்
துணை
பி. ஆதிநாராயண ராவ்

அஞ்சலிதேவி (Anjali Devi, தெலுங்கு: అంజలీదేవి, 24 ஆகத்து 1927 - 13 சனவரி 2014) பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

அஞ்சனிதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா-சத்யவதி என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.[1]

1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயரைச் சூட்டினார். அந்த படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். ஏறத்தாழ 350 தெலுங்குத் திரைப்படங்களிலும், சில தமிழ், கன்னடப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.[1]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
  1. லவகுசா (1963)
  2. சுவர்ண சுந்தரி
  3. அனார்க்கலி
  4. மணாளனே மங்கையின் பாக்கியம்
  5. கணவனே கண்கண்ட தெய்வம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Anjali Devi". IMDB. பார்க்கப்பட்ட நாள் 8 December 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலிதேவி&oldid=4114641" இலிருந்து மீள்விக்கப்பட்டது