கொண்டவீடு கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டவீடு கோட்டை
కొండవీడు కోట
பகுதி: ஆந்திரப் பிரதேசம்
குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
கொண்டவீடு கோட்டையின் நீர்வண்ண ஓவியம்
கொண்டவீடு கோட்டை కొండవీడు కోట is located in ஆந்திரப் பிரதேசம்
கொண்டவீடு கோட்டை కొండవీడు కోట
கொண்டவீடு கோட்டை
కొండవీడు కోట
ஆள்கூறுகள் (16°15′35″N 80°15′55″E / 16.2597°N 80.2653°E / 16.2597; 80.2653) [1]
வகை கோட்டைகள்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது ஆந்திரப் பிரதேச அரசு
நிலைமை அழிபாடு
இட வரலாறு
கட்டிய காலம் 13ம் நூற்றாண்டு
கட்டியவர் ஒரிசாவின் அரசர்களும், ரெட்டி வம்சத்தினரும்
கட்டிடப்
பொருள்
கருங்கல்லும் சுண்ணச் சாந்தும்
சண்டைகள்/போர்கள் ரெட்டி வம்சம், விசயநகரப் பேரரசு, கோல்கொண்டா சுல்தான்கள், பிரான்சியர், பிரித்தானியர்

கொண்டவீடு கோட்டை இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொண்டவீடு என்னும் ஊரில் உள்ள ஒரு பழங்காலக் கோட்டை. மலைக் கோட்டையான இது கடல் மட்டத்தில் இருந்து 1700 அடி (520 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த முதன்மைக் கோட்டையைத் தவிர்த்து இன்னும் இரண்டு சிறிய கோட்டைகள் இதற்கு அண்மையில் காணப்படுகின்றன. இம்மூன்று கோட்டைகளுமே இப்போது அழிபாடுகளாகவே உள்ளன.

கொண்டவீடு கோட்டை புரோலய வேம ரெட்டியால் கட்டப்பட்டது. பின்னர் இது 1328 முதல் 1428 வரை ரெட்டி வம்சத்தினரால் ஆளப்பட்டுவந்தது. 1428ல் ஒரிசாவைச் சேர்ந்த கசபதிகள் இதைக் கைப்பற்றினர். 1458ல் பாமனி இராச்சியத்தைச் சேர்ந்த முசுலிம் ஆட்சியாளர்கள் இக்கோட்டையைச் சூறையாடினர். விசயநகரப் பேரரசர் கிருட்ணதேவராயர் இதை 1516 ஆம் ஆண்டில் கைப்பற்றினார். இக்கோட்டையைக் கைப்பற்றும் நோக்கில் 1531, 1536 ஆகிய ஆண்டுகளில் தாக்குதல் நடத்திய கோல்கொண்டா சுல்தான்கள் 1579இல் சுல்தான் குலி குதுப் சா அதைக் கைப்பற்றி "முர்த்துசாநகர்" எனப் பெயர் மாற்றினார்.[1][2][3][4]

1752ல் இக்கோட்டை பிரெஞ்சுக் குடியேற்றாவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் இதற்கு மேலும் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். 1788ல் இது பிரித்தானியரின் கைக்கு மாறியது எனினும், 19 ஆம் நூற்றாண்டில் அவர்கள் இதைக் கைவிட்டு குண்டூருக்குச் சென்றனர். அதன் பின்னர் இக்கோட்டை அழிந்தது. இன்று இதன் உட்பகுதியில், ஆயுதக் கிடங்குகள், பண்டசாலைகள் உட்படப் பலவிதமான கட்டிடங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன.[1][3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டவீடு_கோட்டை&oldid=2060610" இருந்து மீள்விக்கப்பட்டது