சங்கரபதிக்கோட்டை
Appearance
சங்கரபதிக்கோட்டை (ஆங்கிலம்: Sangarapathikottai) 18 ஆம் நூற்றாண்டில் மருது பாண்டியர் போர்ப் பயிற்சி பாசறை மற்றும் புகலிடமாகவும்.[1] இது தேவகோட்டையின் அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான இக்கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது.[2] ஆனால் தற்போது இக்கோட்டை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையை மறைந்து கொள்ளும் இடமாக பயன்படுத்தியுள்ளார். இந்தக் கோட்டையின் கட்டுமானம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் 50 கற்தூண்கள் இதன் வடிவமைப்பிற்கு மிகவும் பொருத்தமாக காட்சியளிக்கிறது.[3]
மான்கள்
[தொகு]இக்கோட்டையைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் நிறையக் காணப்படுகிறது.