ஆதோனிக் கோட்டை
ஆதோனிக் கோட்டை, ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஆதோனி என்னும் நகரில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநில எல்லைக்கு அண்மையில் இருக்கும் இந்த நகரம், ஒரு காலத்தில் விசயநகரத்தின் தலைநகரமாக விளங்கியது. இக்கோட்டை 14 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் உருவானதாகத் தெரிகிறது. கருங்கற் பாறை மீது கட்டப்பட்டுள்ள இது விசயநகர இராச்சியத்தின் பெரிய கோட்டைகளுள் ஒன்று. 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற போர்களின்போது இந்தக் கோட்டை பெரும் பங்கு வகித்தது.
இக்கோட்டைக்குள் பாரசீக மொழிக் கல்வெட்டுக்களும், அரபு மொழிக் கல்வெட்டுக்களும் காணப்படுவது, இக்கோட்டை பீசப்பூர் வம்சம், கோல்கொண்டா வம்சம் ஆகியவற்றைச் சேர்ந்த இசுலாமிய ஆட்சியாளர்களின் தளமாகச் செயற்பட்டதைக் காட்டுகிறது. இது பிற்காலத்தில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது.
குறிப்புகள்
[தொகு]