பழவேற்காடு கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழவேற்காடு கோட்டை
Fort Geldria
அமைவிடம்சென்னை, இந்தியா
பழவேற்காடு கோட்டை is located in தமிழ் நாடு
பழவேற்காடு கோட்டை
Location in Tamil Nadu, India

பழவேற்காடு கோட்டை (Fort Geldria அல்லது Fort Geldaria) என்பது தமிழ்நாட்டின், பழவேற்காட்டில் இருந்த கோட்டையாகும். இக்கோட்டை டச்சுக் குடியசின் காலனிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும். இதுவே டச்சு சோழமண்டலத்தின் தலைமையகமாகவும் இருந்தது.[1] இது டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கி.பி. 1613 ஆண்டில் கட்டப்பட்டு, 1616 இல் உள்ளூர் அரசு மையமானது.[2] இதற்கு அவர்கள் ஜெல்டிரியா கோட்டை என பெயர்வைத்தனர். ஜெல்டிரியா என்பது நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர். இந்தக் கோட்டையின் முதல் இயக்குநர் ஜெனரலான வெம்மர் தனது சொந்த ஊரின் பெயரையே கோட்டைக்கு வைத்துவிட்டார்.[3] எந்நேரமும் கோட்டையை 80 இல் இருந்து 90 பேர் காவல் காத்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது,[4]

டச்சு உரிமை[தொகு]

பழவேற்காட்டில் உள்ள டச்சுக் கல்லறைகள்.

இந்தக் கோட்டை பழவேற்காடு ஏரிக் கரையில் கட்டப்பட்டுள்ளது இது வங்காள விரிகுடா மற்றும் சோழமண்டலக் கடற்கரை வர்த்தகத்தில் ஒரு முக்கிய சக்தியாக போத்துகீசிய மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகளுக்கு இடையில் இருந்தது.

சாந்தோமிலிருந்து போர்ச்சுக்கீசியர்கள் வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் பழவேற்காட்டைத் தாக்கக்கூடும் என்று எண்ணி அப்பகுதியின் அரசனான வேங்கடனின் மனைவி ஒபோயம்மா என்பவள் இந்தக் கோட்டையைப் பழவேற்காட்டில் கட்டிக்கொண்டிருந்தாள். அதை டச்சுக்காரர்கள் தங்களுடைய செலவில் விரைந்து கட்டித்தந்தனர். வேங்கடன் இறந்தபிறகு விசயநகரப் பேரரசில் ஏற்பட்ட குழப்பத்தால் டச்சுக்காரர்கள் நல்ல பாதுகாப்புடன் பழவேற்காட்டுக் கோட்டையில் இருந்து கொண்டு வாணிகம் செய்தனர்.[5]

கோட்டை கட்டப்பட்ட ஒரே மாதத்தில் உள்ளூர் தலைவனான எத்திராஜா என்பவனால் தாக்கப்பட்டது. ஆனால் டச்சுக்காரர்கள் இதனை முறியடித்துவிட்டனர். அடுத்ததாக தொழில் போட்டியாளர்களான போர்த்துகீசியர்கள் தரை மற்றும் கடல்வழியாக இருமுனைத்தாக்குதல் நடத்தினர். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் அளவுக்கு கோட்டை மிகப் பலமாக கட்டப்பட்டிருந்தது. டச்சுக்காரர்கள் உள்ளூர் வர்த்தகர்களுடன் ஒரு கூட்டணி அமைத்து வணிகத்தில் ஈடுப்ட்டனர். இக்கோட்டை பாதுகாப்புக்கு 1618 இல் Gouden Leeuw என்ற டச்சுக் கப்பல் வழியாக130 டச்சு வீரர்களுடன், 32 துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன.[6] உள்ளூரில் ஏற்பட்ட ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையின்போது போர்த்துகீசிய காலனிகளில் மக்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது.[7] 1619 ஆம் ஆண்டு கோட்டைத் தலைவனான கெல்டிரியாவுக்கு ஆளுநர் பட்டம் மற்றும் இண்டீஸ் அசாதாரண கவுன்சிலர் பதவி வழங்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரித்தானியர்கள் தெற்கில் வணிக போட்டியில் தீவிரமாக இறங்கியதால் கோட்டையின் வணிக முக்கியத்துவம் (முன்மையான வணிகம் பருத்தி ஆடைகள்[5]) குறைய ஆரம்பித்தது.[8] இதனால் 1689 இல் போர்த்துகீசியத் தலைமை நாகப்பட்டினம் கோட்டை மற்றும் இலங்கைக்கு நகர்ந்தது.[9]

இயக்குநர்கள் இடம் பெயர்ந்தபோதும் கோட்டையின் பாதுகாப்புக்கு 18 துப்பாக்கிகள் மற்றும் 40 காவலர்கள் விடப்பட்டனர். கோட்டை 1714 இல் மீண்டும் பழைய நிலைக்கு மேம்படுத்தப்பட்டது. ஆனால் பிரித்தானியர்களால் 1781 முதல் 1785 வரையான காலகட்டத்தில் கோட்டை ஆக்கிரமிக்கப்பட்டது ஆனால் கோட்டை நிர்வாக மாற்றங்களால் வணிகம் பாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. உதாரணமாக 1786 இல் செங்கடல், கோவா, மலபார் கடற்கரை போன்ற பகுதிகளில் இருந்து வணிகக் கப்பல்களில் இருந்து வரும் வணிகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்ல கோல்கொண்டா, சூரத் போன்ற பகுதிகளில் இருந்து வந்து வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் வந்தனர்.[10] ஒரு 1792 ஆண்டைய டச்சு வர்த்தக அறிக்கை பதிவுகளின்படி இங்கு சர்க்கரை , சாராயம் , சப்பானிய செம்பு, மசாலா பொருட்கள் போன்றவை வணிகத்தில் முதன்மை இடம் பெற்றதாக தெரிகிறது.[11] 1804 அல்லது 1805 க்கு இடையில் கோட்டையில் இருந்த டச்சுக்காரர்கள் பிரித்தானியரிடம் சரண்டைந்தனர். சூன் முதலாம் தேதி கோட்டையின் உரிமை பிரித்தானியருக்கு வந்தது அதன்பிறகு கோட்டையை அவர்கள் தகர்த்தனர் .[5]

பிரித்தானிய, இந்திய உரிமை[தொகு]

பழவேற்காட்டில் இருந்த துறைமுக வர்தகம் பிரித்தானியர் இதைக் கைப்பற்றிய 1825 முதல் இந்திய சுதந்திர வரை நடந்தது. கோட்டைப்பகுதி தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் வசம் உள்ளது.[1][5][12] டச்சு மற்றும் இந்திய அரசாங்கங்களின் நிதி உதவியுடன், டச்சு கட்டடவியல் அறிஞர்களைக் கொண்டு கோட்டையில் மீதமுள்ள டச்சுக் கட்டடங்களையும், கல்லறைகளையும் புணரமைக்கவும், நீர்தடங்களின் சூழலைக் காக்கவும் தமிழ்நாடு அரசாங்கத்துடன் திட்டமிடப்பட்டு வருகிறது.[12] நெதர்லாந்தர்களின் செதுக்கப்பட்ட 76 கல்லறைகள் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.[13]

தற்போதைய நிலை[தொகு]

இப்போது பழவேற்காடு கோட்டையின் எச்சமாக அதன் அகழி மட்டும்தான் இருக்கிறது. சுவர்கள், கோட்டையின் கல்லறை போன்றவை இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கிறன. பழைய டச்சு கல்லறைகள், இரு சோழர் காலக் கோயில்கள், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவசால்கள், ஆங்கிலோ-டச்சு வம்சாவழியினரின் இரண்டு தேவாலயங்கள் ஆகியவை அந்தக் காலத்தில் இருந்ததைப் போலவே இன்னமும் மாறாமல் இருக்கின்றன. சில வீதிகளில் உள்ள வீடுகளும் கடை வீதியும் 19 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியை உள்வாங்கியுள்ளன.[14]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Muthiah, S. (2 July 2001). "Madras Miscellany". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020326044940/http://hindu.com/thehindu/2001/07/02/stories/13021283.htm. பார்த்த நாள்: 18 February 2010. 
 2. European Commercial Enterprise in Pre-colonial India. The New Cambridge History of India. 2. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். 1998. பக். 127–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-25758-9. இணையக் கணினி நூலக மையம்:489951836. 
 3. James 2009, p. 34
 4. Lach, Donald F.; Edwin J. van Kley (1998). "The Downfall of Two Empires: Vijayanagar and Golconda". Asia in the making of Europe: A Century of Advance. South Asia. 3. University of Chicago Press. பக். 1067. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-46767-2. http://books.google.com/books?id=qBZg0OhbiXMC&pg=PA1067. பார்த்த நாள்: 18 February 2010. 
 5. 5.0 5.1 5.2 5.3 "Handelsposten: Coromandel" (in Dutch). VOCsite.nl. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 6. (in Dutch) Historiesch verhaal: Van het begin, voortgang en teegenwoordigen staat der koophandel, van de Generaale Nederlandsche geoctroyeerde Oost-Indische compagnie. Arnhem: W. Troost. 1772. பக். 80. http://books.google.com/books?id=bBk5AAAAMAAJ&pg=PA80. பார்த்த நாள்: 18 February 2010. 
 7. James 2009, p. 35
 8. Chaudhuri, K.N.; Jonathan I. Israel (2003). "The East-India Companies and the Revolution of 1688-9". in Jonathan I. Israel. The Anglo-Dutch Moment: Essays on the Glorious Revolution and Its World Impact. Cambridge University Press. பக். 418. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-54406-1. http://books.google.com/books?id=NCvyi5_m6ScC&pg=PA418. பார்த்த நாள்: 18 February 2010. 
 9. James 2009, p. 36
 10. (in Dutch) Nederlandsche reizen, tot bevordering van den koophandel, na de meest afgelegene gewesten des aardkloots. 9-10. Amsterdam; Harlingen: Petrus Conradi; V. van der Plaats. 1786. பக். 145–46. http://books.google.com/books?id=mdITAAAAYAAJ&pg=PA145. பார்த்த நாள்: 18 February 2010. 
 11. Huysers, Ary; Reinier de Klerk (1792) (in Dutch). Beknopte beschryving der Oostindische etablissementen (2 ). Amsterdam: Roos, Roos, and Vermandel. பக். 85. http://books.google.com/books?id=AFVbAAAAQAAJ&pg=PA85. பார்த்த நாள்: 18 February 2010. 
 12. 12.0 12.1 Varghese, Nina (6 August 2001). "Will Pulicat make it?". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.com/businessline/2001/08/06/stories/100672g4.htm. பார்த்த நாள்: 18 February 2010. 
 13. Sanjeeva Raj, P. J. (29 October 2004). "Ancient church on the shore". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041126001151/http://www.hindu.com/fr/2004/10/29/stories/2004102903361000.htm. பார்த்த நாள்: 18 February 2010. 
 14. எஸ்.முத்தையா (16 திசம்பர் 2016). "மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 19: பழவேற்காட்டை மறக்காத டச்சுகள்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2016.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழவேற்காடு_கோட்டை&oldid=3589625" இலிருந்து மீள்விக்கப்பட்டது