பரித்கோட் ராஜ் மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜ் மகால் அல்லது ரோயல் அரண்மனை (Raj Mahal or Royal Palace)[1] என அறியும் இம்மாளிகை, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பரித்கோட் நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. 'ராஜ் மஹால்' எனும் இந்த பிரம்மாண்டமான கட்டிடம், 19-ம் நூற்றாண்டு சீக்கிய தலைவராக இருந்த மகாராஜா 'கன்வர் சிறீ பிக்ரமா சிங் பகதூர்' (Sri Bikrama Singh Bahadur) என்பவர் ஆட்சி காலத்தில் (1885-1889) மகாராஜா பல்பீர் சிங் ( Maharaja Balbir Singh) மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்டதாக அறியமுடிகிறது.[2]

கட்டமைப்பு[தொகு]

முற்காலத்தில், இந்த மகால் ஒரு அரச குடும்பத்தின் குடியிருப்பு இடமாக இருந்துள்ளது என்றாலும், தற்பொழுது மகாராஜா பிக்ரம சிங்கின் வம்சாவளிகள் இங்கு வசித்து வருகின்றனர். மேலும், இந்த பாரம்பரியமான கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு, 'ராஜ் தியோரி' (Raj Deori) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அந்த கட்டிடத்தின் ஒருபகுதியில், 'பல்பீர்' என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுகின்றது. மேலும் இந்த அரண்மனையில் 37 விசாலமான அறைகள், சீக்கிய குருத்வாரா, நீச்சல் குளம் குழந்தைகள் திடலுடன் பொருள், மற்றும் அற்புதமான ஓவியங்கள் நிறைந்த ஒரு மண்டபமும் உள்ளது.[3]

கட்டிடக் கலை[தொகு]

ராஜ் மகால் மாளிகையில் உள்ள காவல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்துள்ள இது, பிரஞ்சு கட்டிடக்கலையின் தாக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த அழகிய அரண்மனையை சுற்றியுள்ள பிராந்தியம் முழுவதும் பாலைவனமாக காணப்பட்டாலும், இவ்வரண்மனை பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்ட பச்சை புல்வெளிகள் நேர்த்தியாக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளால் பராமரிக்கப்படுகிறது. அழகிய காவல் கோபுரங்களுடன் வடிவமைக்கபட்டுள்ள இந்த மாளிகையின் சுவர்கள், ஒவ்வொன்றும் பெருமை வாய்ந்த பழங்கால ஓவியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.[4]

புற இணைப்புகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Tourist Place in Faridkot > Rajmahal". indhyan.in. 2007–2009. Archived from the original on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.{{cite web}}: CS1 maint: date format (link)
  2. "Home > Punjab > Attractions > Palaces > Rajmahal". www.discoveredindia.com. @ 2006. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Raj Mahal". bhaaratdarshan.com. @ 2006. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Places To Visit HISTORY>>Raj Mahal". faridkot.gov.in. @ 2006. Archived from the original on 2016-09-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரித்கோட்_ராஜ்_மகால்&oldid=3562014" இலிருந்து மீள்விக்கப்பட்டது