திருவோணம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
திருவோணம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவோணம் ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவோணத்தில் இயங்குகிறது.[2]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,953 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,434 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- அதம்பை
- அக்கரைவட்டம்
- அம்மன்குடி
- காடுவெட்டிவிடுதி
- காரியவிடுதி
- காவாலிப்பட்டி
- காயாவூர்
- கிலமங்கலம்
- நெய்வேலி வடக்கு
- நெய்வேலி தெற்கு
- நெமிலி திப்பியாகுடி
- பணிகொண்டான்விடுதி
- பதிரன்கோட்டை வடக்கு
- பதிரன்கோட்டை தெற்கு
- பின்னையூர்
- பொய்யுண்டார்குடிகாடு
- சங்கரநாதர்குடிகாடு
- சென்னியாவிடுதி
- சில்லாத்தூர்
- சிவாவிடுதி sivaviduthi
- சோழகன்குடிகாடு
- தாழிகைவிடுதி
- தெற்குகோட்டை
- திருநல்லூர்
- தோப்புவிடுதி
- உஞ்சியாவிடுதி
- வடக்குகோட்டை
- வெங்காரை
- வெட்டிகாடு
- வேட்டுவகோட்டை
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்